ஏற்காடு இடைத்தேர்தலில் ஜெயித்தே தீருவோம் என நான் சத்தியம் செய்கிறேன்: துரைமுருகன்
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மாறன் போட்டியிடுகிறார். ஏற்காடு தொகுதிக்கான தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள அயோத்தியாப்பட்டணத்தில் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:–
நான் அரசியல் கற்றுக்கொண்டது சேலம் மாவட்டத்தில்தான். அதுவும் மாமனிதர் வீரபாண்டி ஆறுமுகத்திடம்தான் கற்றுக்கொண்டேன். அரசியலில் அவர் பலம் பெற்றவர். அவர் மறைந்தாலும், அவரது வழியில் வந்த நீங்கள் வீரத்தோடு களப்பணி ஆற்றிட வேண்டும். இங்கு விசில் அடித்து உற்சாகப்படுத்தும் உணர்வு மண்டபத்தோடு நின்று விடக்கூடாது. அவர் சிறைக்கு சென்றது, குண்டர் சட்டத்தில் கைது செய்ததை நினைத்து பாருங்கள். உங்கள் ரத்தத்தில் கொதிப்பு அடங்கக்கூடாது. வீரபாண்டி ஆறுமுகம் ஆன்மா சாந்தியடைய, சத்தியம் செய்து சபதம் ஏற்க வேண்டும். ஏற்காடு இடைத்தேர்தலில் நாம் ஜெயித்தே தீருவோம் என நான் சத்தியம் செய்கிறேன்.
சேலம் மாவட்ட கலெக்டர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறார். இந்த ஆட்சியும் நிலையானதல்ல. சேலம் மாவட்ட கலெக்டர் பதவியும் நிலையானதல்ல. ஐ.ஏ.எஸ். என்பது மட்டுமே நிரந்தரமானது. அதை புரிந்து கலெக்டர் செயல்பட வேண்டும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக மாறன் போட்டியிடுகிறார். ஏற்காடு தொகுதிக்கான தி.மு.க. தலைமை தேர்தல் அலுவலகம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள அயோத்தியாப்பட்டணத்தில் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:–
தேர்தல் பணியாற்றும் சேலம் மாவட்ட தி.மு.க.வினருக்கு உறுதுணையாக இருக்கவே வந்துள்ளோம். அ.தி.மு.க.வினர் பண பலத்துடன் வந்துள்ளனர். ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்தாலும் அவர்கள் தோற்றுப்போனதாகவே அர்த்தம். ஏனென்றால் அதிக பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கிறார்கள் என்றால் அ.தி.மு.க.வுக்கு தோல்விதான். பணத்திற்காக ஓட்டுபோடும் நிலை இப்போது இல்லை. அது மாறிவிட்டது. அதேவேளையில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்களும் அதை வாங்க தயாராகவே உள்ளனர். ஆனாலும் பணம் வெற்றி பெறாது.
அடுத்து அவர்களின் அதிகாரபலம். அ.தி.மு.க.வினரின் மிரட்டல், பூச்சாண்டிகளுக்கு அஞ்சுபவர்கள் தி.மு.க.வில் இருக்ககூடாது. உறுதி மட்டும் இருந்தால் எதையும் சந்திக்கும் ஆற்றல் வந்துவிடும். ஏற்காடு இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் ஆட்சிமாற ஒரு மணி அடிக்கப்படும். தி.மு.க.வுக்கு ஒரு ராசியுண்டு. எப்போதெல்லாம் இடைத்தேர்தலில் ஜெயிக்கிறோமோ, அதையடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் நாம்தான் வெற்றி பெற்று வந்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment