ஏற்காடு தேர்தலில் வாக்குப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்ய கோரி
தி.மு.க. எம்.பி. ஐகோர்ட்டில் வழக்கு
தி.மு.க. எம்.பி. ஐகோர்ட்டில் வழக்கு
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 4–ந்தேதி நடக்கிறது. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவை வீடியோ படமாக எடுக்க உத்தரவிடும்படி, சென்னை ஐகோர்ட்டின் தி.மு.க. எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஓட்டு பதிவுகள் இணைய தளம் மூலம் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் துணை ராணுவ படையை நியமிக்க வேண்டும் என்றும் இளங்கோவன் கேட்டிருந்தார்.
ஏற்கனவே, 272 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு பதிவுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் பதிலை அடுத்து தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்று கோர்ட் கூறியுள்ளது.
No comments:
Post a Comment