வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



07/11/2013


பேருந்துகளில் இரட்டை இலை சின்னம் போன்று பொறிக்க எதிர்ப்பு: சென்னை ஐகோர்ட்டில் மு.க.ஸ்டாலின் வழக்கு
   
 மினி பஸ்களில் பொறிக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னம் போன்ற படத்தை அகற்றக் கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை மற்றும் புறநகரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மினி பஸ்களில் இரட்டை சிலை சின்னம் போன்று பொறிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கட்சியின் சின்னத்தை மக்கள் பயன்படுத்தும் வாகனங்களில் வரைவதை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு திமுக சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால், மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர் மனுவில் கூறியுள்ளார். தற்போது பஸ்களில் உள்ள இரட்டை இலை சின்னங்களை அகற்ற வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் இதேபோன்று இரட்டை இலை சின்னங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. முதல் அமைச்சர் ஜெயலலிதா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் இந்த மனுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment


Labels