இப்போதாவது வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
சென்னை : திமுக ஆட்சியின் சாதனைகள், மக்களுக்கு செய்த பணிகளை மக்கள் ஒப்பிட்டுப் பார்த்து திமுக மற்றும் அதிமுக இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்விபதில் அறிக்கை:
சென்னையில் “ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய்“ என்று செய்தி வெளியாகியிருக்கிறதே?
“அம்மா குடிநீர்“ பாட்டில் ஒரு லிட்டர் னீ10க்கு அ.தி.மு.க. ஆட்சியிலே விற்கும்போது, “ஒரு குடம் தண்ணீர் னீ5 என்பது எவ்வளவோ மலிவு“ என்று அ.தி.மு.க. ஆட்சியினர் சமாதானம் கூறுவார்கள். இந்தப் பிரச்னைகளைப் பற்றிக் கவனிக்க இந்த அரசில் அமைச்சர் இல்லையா என்று கேட்பீர்களேயானால், இருக்கிறார், ஆனால் அவர் ஏற்காட்டில் இடைத் தேர்தல் அராஜகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்ற பதில் கிடைக்கும்.
ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவம் நிகழ்த்திய போர்க் குற்றங்களை ஆவணப் படமாகத் தயாரித்த “சேனல் 4“ தொலைக்காட்சியின் இயக்குனர் கெல்லம் மெக்ரேவுக்கு இந்தியாவிற்கு வர “விசா“மறுக்கப்பட்ட நிலையிலும், 7.11.13ல் அந்த ஆவணப் படம் டெல்லியில் திரையிடப்பட்டிருக்கிறதே? ஆமாம், அந்த ஆவணப் படங்கள் உலகின் பல நாடுகளில் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவில், டெல்லியில் திரையிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப் படத்தை டெல்லியைச் சேர்ந்த “சமூக ஜனநாயகத்துக்கான நிறுவனம்“ மற்றும் சில மனித உரிமை நிறுவனங்கள் டெல்லியிலே வெளியிட ஏற்பாடு செய்துள்ளன.
இங்கிலாந்து நாட்டிலே உள்ள தமிழர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், அந்த நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொள்ளக் கூடாது என்ற வேண்டுகோளை பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியிருக்கிறார்கள். கனடா நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், “இலங்கையில் நீதி நெறிமுறைக்கு அப்பால் நடந்துள்ள மனிதப் படுகொலைகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்,
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் கைது போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளமாட்டேன்“ என்று அறிவித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்க அமைதி பிரசாரகர் ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட் டுட்டு, காமன்வெல்த் மாநாட்டினை உலகத் தலைவர்கள் புறக்கணிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட “மெட்ரோ ரெயில்“ திட்ட சோதனை ஓட்டத்தின் துவக்க விழாவிலும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக திறப்பு விழாவிலும் முதலமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசாவிட்டாலும், உலக சதுரங்கப் போட்டியைத் தொடங்கி வைத்த விழாவில் பேசியதோடு விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகப் பேசியிருக்கிறாரே?
திமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காக தமிழக அரசின் சார்பில் பல கோடி ரூபாய் செலவழிக்கப் பட்டுள்ளது. தற்போது நடைபெறும் உலகச் சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ளும் விஸ்வநாத் ஆனந்தைப் பெருமைப்படுத்தும் நிகழ்ச்சிகளே திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றுள்ளன. மெக்சிகோவில் நடைபெற்ற உலக சதுரங்க விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் முறையாக உலக சதுரங்கச் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்துக்கு தமிழக அரசின் சார்பில் 24.10.2007ல் னீ25 லட்சம் நிதியினை வழங்கி பெருமைப்படுத்தினேன். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற சென்னையில் “ஏ“ வகை குடியிருப்பு ஒன்றினை அந்தக் காலத்திலேயே அதன் மதிப்பு னீ40 லட்சம், விஸ்வநாதன் ஆனந்துக்கு அன்பளிப்பாகவும் தமிழக அரசின் சார்பில் வழங்கினேன்.
வேலைநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் வேலை வேண்டி சென்னையில் 5 இடங்களில் மறியல் நடத்த முயன்றபோது, காவல்துறையினர் அவர்களை லத்தியால் அடித்து விரட்டிய புகைப்படங்கள் ஏடுகளில் வெளிவந்திருக்கிறதே?
திமுக ஆட்சியில் பணி நியமனம் பெற்ற அந்த மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேரை, பணியிலிருந்தே முதலமைச்சர் விரட்டியடித்தார். அவருடைய காவல் துறை, அந்தப் பணியாளர்களை சாலையில் இருந்து விரட்டியடித்திருக்கிறது. இந்த ஆட்சியில் அந்தப் பணியாளர்கள் மீண்டும் வேலை கேட்டுப் போராடலாமா? தடியடிக்குப் பிறகு அவர்களில் 700க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து, அழைத்துச் சென்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
கைது செய்து பேருந்தில் ஏற்றப்பட்ட ஒருவர், பேருந்தின் மேல் பக்கம் இருக்கும் கைப்பிடி கம்பியில் ஒரு கயிற்றைக் கட்டி தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார். இந்த ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ? அதிமுகவுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களே ஒருக்கணம் யோசித்து பாருங்கள்! இப்போதாவது வித்தியாசம் புரிகிறதா?
இவ்வாறு திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment