ஜெயா ஆட்சியின் அவலங்கள்!
..............................
‘சத்தியமாக இது ரேஷன் கடை இல்லை’ என்ற தலைப்போடு, கூட்டமாக மக்கள் சோகத்தோடு நிற்கும் ஒரு படத்தை... 16.9.2013 ‘தினமலர்’ ஏடே வெளியிட்டிருக்கிறது.
"சென்னை அரசு பொது மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் ‘டோக்கன்’ கொடுக்கக்கூட ஆளின்றி... காத்துக்கிடக்கும் கூட்டமே இது!" என்று மிகவும் வருத்தத்தோடு சுட்டிக்காட்டி இருக்கிறது!
‘உடல் வலியை சுமந்து நிற்கும் இவர்களுக்கு மன வலியையும் தரலாமா அரசு?’ என்ற கேள்விக் கணையையும் தொடுத்து இருக்கிறது!...
‘செவிடர் காதிலே சங்கு ஊதி என்ன பயன்?...
இடிந்தும், பெயர்ந்தும் விழுந்து கொண்டிருக்கின்ற.... எலியும், பெருச்சாளியும், பாம்பும், தேளும் வசித்துக் கொண்டிருக்கின்ற... ‘ஜெயா’ அரசு எனும்,
பாழடைந்து போன கட்டிடத்தை... இனியும்...
‘அம்மா’வின் ‘அழகு மாளிகை’ எனக்கூறி மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தால்...
பிறகு, ‘முதலுக்கே மோசமாகிவிடும்,
என்ற அச்சத்தில்...
‘தினமலர்’ மட்டுமல்ல,
‘விகடன்’
‘கல்கி’
‘இந்தியா டுடே’
போன்ற ஏடுகள் கூட ‘ஜெயா’ ஆட்சியின் அவலங் களை...
படம் பிடித்துக் காட்டத் தொடங்கிவிட்டன!...
ஏனெனில்,
அவைகளுக்குத்தெரியும்...
இதைவிட பன்மடங்கு ‘அம்மா புகழ்’ பாடி, ‘அம்மாவே நிரந்தர
முதலமைச்சர்’ என தொண்டரடிப்பொடி ஆழ்வார்களும்...
கூட்டணிக் கட்சியினரும்...
குதூகலித்துக்கொண்டிருந்த நேரத்தில்...
‘பர்கூர் சட்டப்பேரவைத் தேர்தலில்...
‘கட்டுத் தொகை’யைக் கூட பெற முடியாதபடி ‘ஜெயா’வை
தோற்கடித்துக் காட்டியவர்கள் தான் இந்தத் ‘தமிழ் நாட்டு மக்கள்’ என்ற,
‘வரலாற்றை, ஏட்டாளர்களும், ஊடகத்தினரும்
அதற்குள்ளாகவா மறந் திருப்பார்கள்?
அல்லது மறக்கத்தான் முடியுமா?
எத்தனை இரட்டடிப்புகள் செய்தாலும்... தலைவர் கலைஞர் செய்திட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளை மக்கள் மன்றத்திலிருந்து
மறைத்திட எத்தனை சதிச் செயல்களில் ஈடுபட்டாலும்...பொய் வழக்குகள் போட்டாலும்... பழி வாங்கத் துடித்தாலும்... அத்தனை
கொடுமை களையும் எதிர்ப்புகளையும் அடக்கு
முறைகளையும்...பொடிப் பொடி ஆக்கும்... ஆற்றல்மிக்க வீரர் படை...
வெற்றிப்படை... மான மறவர் படையே... தலைவர் கலைஞரின் ஆதரவோடு... இமயத்தையே இடம் பெயரச் செய்யும் வல்லமை பெற்று...
எழுச்சி நாயகர், ‘தளபதி’யின் போர்ப் படையாக தமிழ்நாட்டில்
‘புதிய வரலாறு’ படைத்துக் கொண்டிருக்கும்
‘இளைஞரணி’ எனும்... "அறப்போர் படை"!...
வஞ்சனை’..
‘சூது’...
‘சூழ்ச்சி’...
எனும் பகைவர் களின் படை வரிசையை,
ஏவுகணையாய் எதிர்த் தழிக்கும்...
திராவிட ‘இன மானம்’ காக்கும் ‘தன்மானப் படை!’
‘ஜெயா’ ஆட்சியால்....
சிதைந்தும்...
சரிந்தும்...
சீரழிந்தும்
கிடக்கும்... தமிழ்ச் சமுதாயத்தை...
மீண்டும் புதிய எழுச்சியோடு..
உயிர்ப்பிக்க களமிறங்கி இருக்கும்...
‘இளைஞரணிப் படை!!
நடத்திக் காட்டியது தெருமுனைப் பிரச்சாரம் மட்டுமல்ல!
தமிழினத்தையே விழிக்கச் செய்த போர்ப் பரணி!!
இனியும், தூங்குமோ தமிழினம்?
நன்றி.....
நெய்வேலி க.தியாகராசன்
கொரநாட்டுக் கருப்பூர்
No comments:
Post a Comment