வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



11/10/2013

பெரம்பலூர் மாவட்டத்திற்கு தி.மு.க. ஆட்சியில்தான் அதிக அளவில் திட்டங்கள்-முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பேச்சு



பெரம்பலூர்,அக்,11:
திமுக ஆட்சியில்தான் பெரம்பலு�ர் மாவட்டத்திற்கு அதிக அளவில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ராசா பேசினார்.
பெரம்பலூரில் தமிழ்நாடு மின்கழகத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக கருணாநிதியின் 90வது பிறந்தநாள்விழா, சங்கக் கொடியேற்றுவிழா, கல்வெட்டுத் திறப்புவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு சங்க மாநில துணைத்தலைவர் மலையாண்டி தலைமை வகித்தார். பெரம்பலூர் மின்திட்ட செயலாளர் வேணுகோபால் வரவேற்றார். விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கலந்து கொண்டு, சங்கக் கொடியேற்றி, கல்வெட்டைத் திறந்து வைத்துப் பேசியதாவது :
திருச்சியிலிருந்த பெரம்பலூர் மாவட்டத்திற்கான மின்பகிர்மான வட்டம் (வடக்கு) திமுக ஆட்சியில்தான் பிரித்து வழங்கப்பட்டது. ஆட்சிமாறலாம், காட்சி
மாறலாம், கலைஞரின் சாதனைகள் மறையாது. கடந்த திமுகஆட்சியின்தான் பெரம்பலூர் மாவட்டத்திற்கு கலைஅறிவியல் கல்லூரி, தொழிற்பயிற்சி நிறுவனம், தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி ஆகியத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ரூ.100 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது.
திமுக பட்ஜெட்டில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மட்டும் 7புதியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதிமுக அரசால் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே, அதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி, பூர்வாங்கஆய்வு, நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு, இழப்பீட்டுத்தொகை வழங்க திட்டஅறிக்கை போன்ற எதுவும் செய்யப்படவில்லை. த
கூட்டத்தில், வேப்பூர் ஒன்றியச் செயலாளர் இராஜேந்திரன், முத்துரெத்ணா பிரபாகரன், மின்வாரிய தொமுச நிர்வாகிகள் நல்லுசாமி, பூபதி, ரெங்கநாதன், சித்திரவேல், ரெங்சாமி, மாரிமுத்து, சுந்தரராஜன், ராஜ்குமார், அருமைராஜ், திலக், கலியபெருமாள், சின்னமுத்து, ஆனந்தராஜ், வாசுகி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கோட்டசெயலாளர் பிச்சை முத்து நன்றி கூறினார்.
Thanks :  dinakaran.

No comments:

Post a Comment


Labels