வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



27/10/2013

 கலைஞர் அறிக்கை

புதிய மின் திட்டங்கள் குறித்து தவறான தகவல் அளித்த ஜெயாவுக்கு பதில் :

2011ல் திமுக ஆட்சியை விட்டு இறங்கியபோது தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த மின்உற்பத்தி திட்டங்கள், வடசென்னை (நிலை 2), மேட்டூர், தூத்துக்குடி, வல்லூர், பவானி கட்டளை, உடன்குடி ஆகியவை ஆகும்.

2012 நவம்பர் மாதம் சட்டமன்றத்தில் உற்பத்தி துவங்கப்படவுள்ள திட்டங்கள் என ஜெயலலிதா அறிவித்த வல்லூர், வடசென்னை உள்ளிட்ட 7 திட்டங்களுமே திமுக ஆட்சியல் தொடங்கப்பட்டவைதான். 

மேட்டூர் மின்திட்டப் பணிகள் திமுக ஆட்சியில் 55 சதவீதம் மட்டுமே என்று ஜெயலலிதா கூறியிருப்பது உண்மைக்கு மாறானது. 2012 மார்ச் மாதம் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று அதிமுக ஆட்சி அறிவித்தப்படி மின்உற்பத்தி தொடங்கப்படாமல், மேலும் ஓராண்டு தாமதமானதற்கு எந்த ஆட்சி காரணம்? இதேபோல் வடசென்னை மின் திட்டம் தாமதமானதற்கு எந்த ஆட்சி காரணம்?

இந்த திட்டங்களின் மின் உற்பத்திக்கு ஜெயலலிதாதான் காரணம் என்றால் இந்த திட்டங்களுக்காக அவரது ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? திமுக ஆட்சியில் இந்த திட்டங்கள் தொடங்காமல் இருந்திருந்தால், இந்த மின்சாரமாவது கிடைத்திருக்குமா? திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதால் தானே இவரால் அந்த திட்டத்தை முடிக்க முடிந்திருக்கிறது.

தமிழகத்திற்கு தற்போது கூடுதலாக கிடைக்கும் மின்சாரம் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களினால்தான் என்பதை ஜெயலலிதா மறைக்க முயற்சித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அதனை அறிவார்கள்.

திமுக ஆட்சியில் மின் திட்டங்களை தொடங்கவில்லை என்று ஜெயலலிதா பேரவையில் பேசியிருப்பது உண்மைக்கு மாறான அப்பட்டமான பொய்.

No comments:

Post a Comment


Labels