இலங்கை உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்:தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: இலங்கை உடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது.
காயிதே மில்லத், எத்திராஜ் மற்றும் வள்ளியம்மை கல்லூரியைச் சேர்ந்த 1000- ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியை தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை உடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்குவதை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய கனிமொழி, போர்க்கப்பல் வழங்கினால் அது நமக்கே ஆபத்தாக முடியும் என்றார்.
மேலும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவதை பிரதமர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

No comments:
Post a Comment