வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



09/09/2013

தா.கிருஷ்ணன் கொலை வழக்கு:
 தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி


திமுக முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் 2003ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மு.க. அழகிரி, முன்னாள் மதுரை துணை மேயர் மன்னன் உள்பட 13 பேர் மீது மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததையடுத்து வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, தா.கிருஷ்ணன் கொலை வழக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இதில் அரசு சாட்சிகள் சிலர் பிறழ் சாட்சிகளாக மாறினார்கள்.
2008ம் ஆண்டு சித்தூர் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மு.க.அழகிரி உள்பட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தா.கிருஷ்ணன் கொலை வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இதை விசாரித்த நீதிபதி தா.கிருஷ்ணன் வழக்கை மறு விசாரணை செய்ய கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வழக்கு நடந்த ஆந்திர அரசுதான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment


Labels