நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்க முடியாது: ஜெயலலிதா மனு மீதான விசாரணையில் கர்நாடக அரசு வாதம்
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை கர்நாடக அரசு நீக்கியதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு செய்திருந்தார்.
அந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாகன்வதி, நீதிபதியின் ஓய்வுபெறும் காலத்தை நீட்டிக்க சட்டத்தில் இடமில்லை. ஓய்வுபெறும் காலம் என்பது அரசின் கொள்கை முடிவு. அதை மாற்ற இயலாது. நீதிபதி பாலகிருஷ்ணா வரும் 30ஆம் தேதி ஓய்வுபெற உள்ளநிலையில், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்றும் வாதிட்டார். அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை நியமிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டிய வாகன்வதி, பவானி சிங்கை நீக்கும் அரசின் முடிவு சரியானது என்று வாதாடினார்.
No comments:
Post a Comment