வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



25/09/2013

சேது சமுத்திரத் திட்டம் பற்றி மத்திய அரசு வழக்கறிஞரின் கருத்து சரியல்ல: கலைஞர் பேட்டி

திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

செய்தியாளர் :- மத்திய அரசில் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்த மோகன் பராசரன் சேது சமுத்திரத் திட்ட வழக்கில் ஆஜராகப் போவதில்லை என்று திடீரெனவிலகியிருக்கிறாரே?

கலைஞர் :- ஏடுகளில் அந்தச் செய்தியைப்பார்த்தேன். நேற்றைய தினம் வந்த செய்திகளில், இந்த வழக்கில் அவருடைய தந்தை, மனுதாரர்களில் ஒருவர் சார்பில் ஆஜராகிறார். இதனால், முக்கியமான இந்த வழக்கின் நலன் கருதியும், எவ்வித முரண்பாடும் ஏற்படாமல் இருப்பதற்காக ஆஜராவதிலிருந்து விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். வேறு ஒருவரை நியமிக்கும்படி கேட்டுக் கொண்டேன். எனக்குப் பதிலாக இனிமேல் மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் ஆஜராவார்” என்று கூறியதாக ஒரு ஏட்டில் செய்தி வந்துள்ளது.
வேறொரு இதழில், இலங்கை மன்னன் ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட தனது மனைவி சீதாவை மீட்பதற்காக ராமன், ராமர் பாலத்தைக் கட்டினார் என்பதை அவர் நம்புவதாகவும், மேலும் இந்த வழக்கில் ஒரு மனுதாரருக்காக அவருடைய தந்தை கே. பராசரன் ஆஜராவதால் இந்த வழக்கில் தான் தொடர்ந்து வாதாடுவது முரண்பட்டதாக இருக்கும் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது.
மத்திய அரசு ஒரு மத சார்பற்ற அரசு. அந்த அரசின் வழக்கறிஞரான, சொலிசிட்டர் ஜெனரலாக இது நாள் வரை திரு. மோகன் பராசரன் பணியாற்றி வந்தவர், திடீரென்று மத்திய அரசின் முடிவுக்கு மாறாக, தன்னை ஒரு மதவாதி என்பதைப் போலத் தெரிவித்திருக்கிறாரா என்று தெரியவில்லை.
மேலும் அவர் சொலிசிட்டர் பதவியிலிருந்தே விலகியதாகத் தெரியவில்லை. இந்த ஒரு வழக்கிலிருந்து மட்டும் விலகியதாகத் தெரிகிறது. சேது சமுத்திரத் திட்டம் என்பது தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்குகின்ற திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்து உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் தெரிவித்திருக்கின்ற நிலையில், மோகன் பராசரன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள், மத்திய அரசின் கருத்துக்கு மாறாக, ஒரு மத வாதியைப் போல கருத்து தெரிவித்திருப்பது சரியானதாக எனக்குத் தெரியவில்லை.

No comments:

Post a Comment


Labels