சமுதாய விடுதலை

சமுதாய விடுதலைக்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடி அன்று பிராமினர் இல்லாதோர்தான் பழம் பெரும் திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும்,அதை உணரவும் நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கி ஒடுக்கப்பட்டத் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்க்காக சமுதாயத்தின் ஏளனத்துக்குரிய மூடபழக்கவழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றுவதை தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்து மக்களை அறிவின்மையிலிருந்து மீட்டெடுத்து, தெளிவுடையவர்களாக மாற்றி பகுத்தறிவாளர்களாக உருவாக்கியப் பெரியார் இல்லையென்றால் இந்த சமுதாயம் எழுச்சிப் பெற்றிருக்குமா என்பதை நாம் அனைவரும் சிந்திக்கின்றோமா என்றால் இல்லை..!!
இன்றைய இளைஞர்கள் பொறியாளர்களாகவோ, மருத்துவர்களாகவோ பட்டம் பெற்று கை நிறைய சம்பளம் வாங்கி தானும் தன் குடும்பமும் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும் என்ற நிலைமையில் வாழ்கின்றார்கள். இன்று இவர்களின் படிப்புகளுக்கு அன்று போராடிய டி.எம்.நாயர், பனகல் அரசர்,நடேச முதலியார்,தியாகராயர்,பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்கள் வழி வந்த அண்ணா,கலைஞர் போன்ற தலைவர்களின் போராட்டங்களையும் தியாகங்களையும் அறிந்திடாமல் வரலாறுகளை அறிந்துக்கொள்ள நினைக்காத சுயநலவாதிகளாக மாறிப்போனதால்தான் இன்று நம் நாட்டை யார் யாரோ ஆளுகின்ற நிலைமை உள்ளது! மீண்டும் ஆரியர்களின் கைக்கு ஆட்சிகள் மாறுகின்ற நிலமையை பிராமின ஊடகங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன!
யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கென்ன என்று இருக்கும் இதுபோன்ற இளைஞர்களும், திராவிட கட்சிகள் இந்த நாட்டிற்க்கு என்ன செய்தது என்று கேட்கும் நடுநிலை வாதிகளும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது இந்த திராவிடத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து அவர்களின் போராட்டங்களையும்,தியாகங்களையும
நாம் எல்லாம் சிந்திக்க வேண்டாமா? முகநூல் நண்பர்களே எங்கள் நீதிக்கட்சியும்,திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரு நூற்றாண்டுகள் இந்த நாட்டுக்காக போராடியதை தயவு கூர்ந்து படியுங்கள்…!!
No comments:
Post a Comment