வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



22/09/2013

ஜனநாயகவிரோத காரியங்களில் போலீஸ்- கருணாநிதி குற்றச்சாட்டு 

ஜனநாயகத்துக்கு விரோதமான காரியங்களில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதால், அவர் களுடைய பெரும்பாலான நேரம் அதிலேயே கழிந்து, அடிப்படைப் பணிகளான சட்டம் - ஒழுங்கு, கொலை, கொள்ளைச் சம்பவங்களில் புலனாய்வு போன்றவை புறக்கணிக்கப்பட்டு, தமிழக மக்கள் அச்சத்தின் கோரப்பிடியில் அனுதினமும் தவிக்கிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். 
 
பல்வேறு பத்திரிகை செய்திகளைக் குறிப்பிட்டு, விரிவான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை விவரம்:

கழக ஆட்சி நடைபெற்ற போது காவல் துறை சீரழிந்து விட்டது என்று அன்றாடம் அறிக்கை கொடுத்த இன்றைய முதலமைச்சரின் பொறுப்பிலே உள்ள காவல் துறை எந்த நிலையிலே உள்ளது என்பதை தமிழ்நாட்டுப் பத்திரிகைகள் தொகுத்துத் தந்துள்ள இந்த விவரங்களிலிருந்து உண்மையைப் புரிந்து கொள்வதற்காகவே இந்தக் கடிதம்!

காவல் துறை பற்றி நடந்த சம்பவங்களின் அடிப்படையில் நான் விமர்சனம் செய்தால் எதிர்க்கட்சி விமர்சனம் என்பார்கள். எனவே ஆளுங்கட்சி ஆதரவு வார இதழ் என்று கருதப்படும் ஜூனியர் விகடனில் வந்த செய்திகளையே முதலில் குறிப்பிடுகிறேன்.

""""டெல்லியில் மாணவி, மும்பையில் பத்திரிகை யாளர் பலாத்காரம் எனப் பெண்களுக்கு எதிரான சம்பவங்களில், வட மாநிலப் போலீசார் விரைவாகக் குற்றவாளிகளைக் கைது செய்தனர். ஆனால், திருச்சியில் எட்டாம் வகுப்பு மாணவி தவ்ஹித் சுல்தானா, தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைய உள்ள நிலையில், மரணத்துக்கான காரணத்தைக் கூட போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது கொடுமை. இதற்காக திருச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள், """"ரயில்வே போலீசார், திருச்சி மாநகரப் போலீசார், சி.பி., சி.ஐ.டி. போலீசார் தவ்ஹித் சுல்தானாவின் வழக்கு அடுத்தடுத்து மாற்றம் செய்யப்பட்டாலும், சுல்தானாவின் வலது கை, இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகளைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திருச்சி காவல் துறை கோமாவில் இருக்கிறது"" எனக் காட்டமாகப் பேசினர்.

த.மு.மு.க. மாவட்டச் செயலாளர் பேசுகையில், """"இந்த வழக்கை முதலில் விசாரித்த ரயில்வே போலீசார், சுல்தானா தற்கொலை செய்து கொண்ட தாக எடுத்த மாத்திரத்திலேயே சொல்லிவிட்டனர். பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டுமென்று கேட்டதையும் மறுத்துவிட்டனர். மாநகரப் போலீசார் சுல்தானா தனது நோட்டில் எழுதி வைத்திருந்த இரண்டு செல்போன் எண்களைக் கொண்டு, பொறியியல் கல்லூரி மாணவர்களான ஐந்து பேரைப் பிடித்து விசாரித்தனர். அதில் உமர் ஃபாரூக் என்பவனை சுல்தானா காதலித்ததாகவும், 13ஆம் தேதி மாலை சுல்தானாவை தனது பைக்கில் இரட்டைமலை கோயிலுக்கு அழைத்துச் சென்ற ஃபாரூக் தன் நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரப்படுத்தி கொலை செய்துவிட்டு உடலை தண்டவாளத்தில் வைத்து விட்டதாகவும் சொன்னார்கள். பிறகு அந்த ஐவரையும் சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துப் போய் விசாரித்தனர். இது எல்லாப் பத்திரிகையிலும் வெளியானது. ஆனால் இப்போது அந்த ஐந்து பேரையும் விட்டு விட்டு, இது தற்கொலை என்கிறார்கள். ஆடையில்லாத நிலையில் உடல் சிதறிய நிலையில் சுல்தானா கண்டெடுக்கப்பட்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், யாராவது உடைகளைக் கழற்றி வைப்பார்களா? சுல்தானா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகேயுள்ள தண்டவாளத்தில் கடந்த 5ஆம் தேதி திருச்சி புங்கனூரைச் சேர்ந்த இளைஞர் பார்த்திபன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட ராமஜெயம் வழக்கிலும் - அதற்கு முன்பே இறந்துபோன ரியல் எஸ்டேட் அதிபர்கள் துரைராஜ், தங்கவேலு வழக்கிலும் இதுவரை குற்றவாளிகளை சி.பி., சி.ஐ.டி. போலீசார் கைது செய்யவே இல்லை"" என்றெல்லாம் கூறியதாகச் செய்தி வந்துள்ளது.


""""பெண் கற்பழிப்பு, கொடுமை வழக்குகள் தமிழகத்தில் அதிகரிப்பு"" என்ற தலைப்போடு """"தினமலர்"" 13-9-2013 அன்று வெளியிட்ட செய்தியில், """"தமிழகத்தில், கற்பழிப்பு மற்றும் கணவன் மற்றும் குடும்பத்தாரால் பெண்கள் கொடுமைப்படுத்தப்படும் வழக்குகள், கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் கற்பழிப்புச் சம்பவங்கள் அதிக அளவில் பதிவாகி யுள்ளன. கடந்த 2009இல் 3,426ஆக இருந்த பெண் களுக்கெதிரான குற்றங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 4,306 ஆக உயர்ந்து விட்டது. இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் வரை, பெண் களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 4,287ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது"" என்றெல் லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

""""இந்தியன் எக்ஸ்பிரஸ்"" நாளேடு, "The State Government has registered as many as 20,633 cases against 12,624 persons involved in hoarding and illegal transporting of essential commodities meant for PDS and 454 persons have been arrested under the Prevention of Black Marketing and Maintenance of Supplies of Essential Commodities Act" என்று தெரிவித்துள்ளது.

கடந்த வாரப் பத்திரிகை ஒன்றில் """"வேலூர் வெள்ளையன், சேலம் ஆடிட்டர் ரமேஷ், திருச்சி ராமஜெயம் ஆகியோர் கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்பட வில்லையே ஏன்?"" என்ற கேள்விக்கு, """"மூன்று வழக்குகள், முப்பது ஆகி அதுவும், முன்னூறு ஆகிவிடும் போலத் தெரிகிறது. திருச்சியில் ஓர் இளம் பெண் மர்மமான முறையில் சில வாரங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கும் திருச்சி போலீசிடம் இருந்து சி.பி., சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விட்டது. அப்படியானால் சட்டம், ஒழுங்கைக் காக்கும் போலீஸ் எதற்குத்தான் லாயக்கு? கண்டுபிடிக்கப்படாத குற்றச் சம்பவங் கள் அதிகமாகி வருவது போலீஸ் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வருக்கும் அழகல்ல. தமிழக டி.ஜி.பி.க்கும் அழகல்ல"" என்று பதில் அளிக்கப்பட்டிருந்தது.
144 தடை உத்தரவு அமலில் இருந்த மே 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை, விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 28 கொலைகளும், 3 பள்ளி களுக்கு வெடிகுண்டு மிரட்டலும், கொலை முயற்சி மற்றும் கொள்ளைச் சம்பவங்களும் நடந்துள்ளன என்று ஒரு செய்தியும் வெளிவந்திருக்கின்றது.

மணல் கொள்ளையைப் பற்றி எழுதவே தேவை யில்லை. அதுபற்றி ஏடுகளில் செய்தி வராத நாளே இல்லை. 14ஆம் தேதிய """"எக்ஸ்பிரஸ்"" நாளேடு லாரிகள் வரிசையாக நின்று தென்பெண்ணை யாற்றில் மணல் அள்ளுவதைப் புகைப்படமாகவே எடுத்து வெளியிட்டிருக்கின்றது. சிவகங்கை மாவட்டத்தில் மணல் கொள்ளை நடப்பதை அறிந்து நடவடிக்கை எடுக்கச் சென்ற கல்லல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது லாரி ஏற்றிக் கொலை செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முயற்சி நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், சுத்தமல்லி, வண்ணார்பேட்டை, ராஜவல்லிபுரம், மணப்படை வீடு, கீழ நத்தம், சீவலப்பேரி, பாலாமடை போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் """"பொக்லைன்"" மூலம் தாமிர பரணி ஆற்றில் மணல் அள்ளி வருகின்றனர். அங்கே மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த காவல் துறையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

தங்கம் கொள்ளை அடிக்கப்படுவது பற்றி கேட்கவே வேண்டியதில்லை. கோவை நகை வியாபாரி ஜெயின்லாலிடம் ஏழரை கிலோ - கோவை நகைப் பட்டறையில் ஒன்றரை கிலோ - கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஒன்றரை கிலோ - கோத்தகிரி தொழிலதிபரை வெட்டி ஒரு கிலோ - திருச்சி திருவெறும்பூரில் நகைக்கடையில் 3 கிலோ - திருப்பெரும்புதூர் நகை வியாபாரி பதன்சந்த்திடம் 4 கிலோ - தர்மபுரி, வேலூர், நெல்லை, பண்ருட்டி நகைக்கடைகளில் மட்டுமே ரூ. 20 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் நாகர்கோயில் மீனாட்சிபுரத்தில் 2 கிலோ என்று மாநிலம் முழுவதும் கொள்ளை போன தங்கங்களின் கதை சோகமயமானது.

""""தமிழகத்தை அதிர வைக்கும் கூலிப்படைகள்"" என்ற தலைப்பில் 16-9-2013 அன்று திரு. ராமு அவர்கள் ஒரு கட்டுரையை """"தீக்கதிர்"" நாளிதழில் எழுதியிருக்கிறார். அதில், """"தமிழகத்தில் சமீப காலமாக கொலைகள் அதிகரித்து வருகின்றன. கூலிப் படைகளை ஏவி முக்கியத் தலைவர்களைக் குறிபார்ப்பதும், குறிவைப்பதும் அதிகரித்து வருகிறது. கூலிப்படை தங்களை குறிவைப்ப தாகவும், தங்களுக்குப் பாதுகாப்புக் கேட்டும் ஜனநாயகத்தின் முதல் தூணின் அங்கமாகத் திகழும் சட்டமன்ற உறுப்பினர்களே காவல் துறையிடம் பாதுகாப்புக் கேட்கும் அவல நிலை உருவானது. கூலிப் படைகளின் செயல்பாடு களினால் தமிழகத்தின் குற்ற சதவிகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 சதவிகிதம் அதிகரித் துள்ளதாக தேசிய குற்றப் புலனாய்வு ஆவண மையம் கணக்குக் கூறுகிறது. தமிழக அளவில் இந்தக் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் கொலைக்கு 10 ஆயிரம் முதல் 1 லட்ச ரூபாய் வரையிலும், ஆள் கடத்தல் என்றால் 25 ஆயிரம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலும் வாங்குவதாகக் கூறப்படுகிறது. இது கொலை செய்யப்படும் நபரின் தராதரத்தைப் பொறுத்து அமையும். கூலிப்படையை வாடகைக்கு அமர்த்தித் தருவோருக்கு 25 சதவிகிதத்திற்கும் குறையாமல் கமிஷன் கொடுக்கவேண்டும் என்றும் கூறப்படு கிறது"" என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை களில் ஓட்டுனர் பணி இடங்கள் ஆயிரக் கணக்கில் காலியாக உள்ளதால், அன்றாடப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது.

""""ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே கொள்ளை யர்கள், ரௌடிகள், திருடர்கள் எல்லாம் ஆந்திரா வுக்கு ஓடிப்போய் விட்டார்கள் என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா; ஓடிப் போனவர்கள் மீண்டும் சென்னைக்கு வந்து விட்டார்களோ என்று அஞ்சும் அளவுக்குச் சென்னையில் கொலை, கொள்ளை, கடத்தல் அதிகரித்திருக்கிறது. கடந்த வாரத்தில் பணத்துக்காகப் பள்ளி மாணவன் கடத்தல், பிச்சை எடுக்க வைக்க குழந்தை கடத்தல், வியாபாரியைக் கடத்தி பணம் வசூல் என்று கடத்தல்கள் பட்டையைக் கிளப்பின"" என்று ஜூனியர் விகடன் கட்டுரையில் எழுதியிருக்கின்றது.

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணை வேந்தரின் அறையை யாரோ மர்ம நபர்கள் வந்து எரித்து விட்டுச் சென்றிருக் கிறார்கள். மயிலாடுதுறையில் மயூரநாதர் கோவில் தங்கக் கலசத்தையே கொள்ளை அடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 12 பேரோ, 13 பேரோ படுகொலை செய்யப்பட்டிருக் கிறார்கள். சென்னையில் மட்டும் 4 பேர் படுகொலை, தாம்பரம் அருகே அக்காள், தம்பி - மாணவி சாதஸ்மி, அவரது தம்பி யுகேஷ் படுகொலை, ஜாபர்கான்பேட்டையில் பிரவீண் குமார் வெட்டிக் கொலை, நாசரெத்தில் தந்தை, மகள்- லீமா, செல்லுத்துரை வெட்டிக் கொலை, சிவகங்கை அருகே 2 பேர் - வெங்கடேஷ், இளையராஜா வெட்டிக் கொலை, தஞ்சையில் மூதாட்டி - பாக்கியத்தம்மாள் கழுத்து அறுத்துக் கொலை, சென்னை ஆர்.கே. நகரில் வழிப்பறிக் கொள்ளை யன், கூட்டாளியுடன் - சுதாகர், தங்கராஜ் படுகொலை, தூத்துக்குடி அருகே டீக்கடை உரிமையாளர் செம்புலிங்கம் வெட்டிக் கொலை என்பது நேற்றைய பட்டியல். நெடுநாளையப் பட்டியல் என்று பார்த்தால் இந்து முன்னணி முக்கியத் தலைவர் வெள்ளையப்பன், பா.ஜ.க. பிரமுகர், ஆடிட்டர் ரமேஷ், திருச்சியில் தம்பி நேருவின் இளவல் ராமஜெயம் ஆகிய கொலைகளில் குற்றவாளிகள் பிடிக்கப்படவே இல்லை. தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, தஞ்சையில் 24 மணி நேரத்தில் 7 பேர் - வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தண்டையார்பேட்டை யின் ஆர்.கே. நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் 10 கொலைகள் நடந்துள்ளன என்றும், தொடர் கொலைகளால் அந்தப் பகுதி மக்கள் பீதி அடைந்திருப்பதாகவும் ஒரு செய்தி இன்று வெளி வந்துள்ளது. அதாவது தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. அருகே மாமூல் தகராறில் ஆயில் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்டார். தண்டையார் பேட்டை ஐ.ஓ.சி. அருகே போதைக் கும்பல் ஒன்று, பணத்திற்காக மேடவாக்கத்தைச் சேர்ந்த பி.டி.சி. மெக்கானிக் வாசுதேவனை கண்டம்துண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறது. கொருக்குப்பேட்டை யில் புது மாப்பிள்ளை கமல்ராஜ் என்பவர் கழுத்தறுத்துக் கொலை, கோஷ்டி மோதலில் ரவுடிகள் டவுக் சுரேஷ், கோபி ஆகியோர் கொலை, கடந்த 15ஆம் தேதி பட்டப்பகலில் பழிக்குப் பழியாக ரவுடி தனசேகரன் கொலை என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில், அரவக்குறிச்சி அருகே கடந்த 1ஆம் தேதி தலையில் கல்லைப் போட்டு பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். போலீசார் விசாரணை யில் தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த திலகவதி என்பதும், அவர் திருச்சி கிழக்குத் தொகுதி அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினரும், அரசின் தலைமைக் கொறடாவுமான ஒருவரின் உறவினர் என்றும் தெரியவந்தது. கடந்த 6ஆம் தேதி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் மதுரை நீதிமன்றத்தில் இந்த வழக்கு காரணமாகச் சரணடைந்தார். அரவக் குறிச்சி போலீசார், கதிரேசனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் காவலின் போது அந்தக் கதிரேசன் நேற்று முன்தினம் இறந்திருக் கிறார். புகைப்படம் எடுக்க வந்த பத்திரிகைக் காரர்களை அனுமதிக்காமல் காவலர் விரட்டி விட்டனர். கதிரேசன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இதற்கிடையே அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார். இது இன்றைய செய்தி.

இவ்வாறு தொடர்ந்து அன்றாடம் காவல் துறையைப் பற்றியும், கொலை, கொள்ளைகளைப் பற்றியும் ஏடுகளில் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. இதைப்பற்றி ஆட்சிப் பொறுப்பிலே இருப்பவர்கள் யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.

எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் செய்வது, பேசினாலும் அவதூறு வழக்குத் தொடுப்பது, மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பது, மாவட்டங்களுக்குள் வரவே கூடாது என்று ஆணை பிறப்பிப்பது, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பது என்று ஆட்சியினர் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் செயல்பட்டு வருகிறார்கள்; அத்தகைய ஜனநாயகத்துக்கு விரோதமான காரியங்களில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதால், அவர் களுடைய பெரும்பாலான நேரம் அதிலேயே கழிந்து, அடிப்படைப் பணிகளான சட்டம் - ஒழுங்கு, கொலை, கொள்ளைச் சம்பவங்களில் புலனாய்வு போன்றவை புறக்கணிக்கப்பட்டு, தமிழக மக்கள் அச்சத்தின் கோரப்பிடியில் அனுதினமும் தவிக்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார். 

 
- See more at: http://andhimazhai.com/news/view/21-09-2013-mk-.html#sthash.FQbX9CCU.DTbzaeFp.dpuf

No comments:

Post a Comment


Labels