நாத்திகர்கள் நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு தரக்கூடாதா? : கலைஞர் கண்டனம்
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையில், ‘’இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாகத் தமிழை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார்.
இது மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும். தருண் விஜய் பேசியதைத் தொலைக்காட்சியில் பார்த்தவுடன், அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்குமாறு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்திடம் கூறினேன்.
இது மகிழ்ச்சியை அளிக்கும் செய்தியாகும். தருண் விஜய் பேசியதைத் தொலைக்காட்சியில் பார்த்தவுடன், அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்குமாறு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்திடம் கூறினேன்.
இந்த வேளையில், மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழை ஏற்க வேண்டும் என்று திமுக நீண்ட ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
2011-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தியிருந்தோம். கச்சத்தீவு பிரச்னையில் தமிழக அரசு சுணக்கம் காட்டாமல் ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் கூறியுள்ள ஆதாரங்களையும், தமிழக அரசிடம் உள்ள ஆதாரங்களையும் திரட்டி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான மண்டபங்களில் நாத்திகர்கள் நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கு தரக்கூடாது என்று அரசு சார்பில் சுற்றிக்கை விடப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தி உண்மையானால் கண்டிக்கத்தக்கது’’ என்று கூறியுள்ளார்
No comments:
Post a Comment