வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



19/01/2013

                            ''தலைவரே பார்த்து போட்டு கொடுங்க'':

 When Karunanidhi Gave 10 Rupee Thirunavukkarsar

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் அடித்த பெரும் சிரிப்பலை ஏற்படுத்தியது.
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திமுக தலைவர் கருணாநிதியிடம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறான், கலைஞர் டி.வி. அமிர்தம், கருணாநிதியின் மகள் செல்வி, கருணாநிதியின் மகன் மு.க. தமிழரசு ஆகியோர் குடும்பத்தோடு சந்தித்து ஆசி பெற்றனர்.
அதே போல, கவிஞர் வைரமுத்து, சுப.வீரபாண்டியன், ஆர்.எம்.வீரப்பன். திருநாவுக்கரசர் உள்ளிட்ட பல முக்கிய வி.வி.ஐ.பிக்கள் சந்தித்து ஆசி பெற்றனர். மேலும் நூற்றுக்கான கட்சியினரும் நிர்வாகிகளும் தொண்டர்களும் சந்தித்து ஆசி பெற்றனர்.
வழக்கமாக எல்லா பொங்கல் பண்டிகையின்போதும் தன்னை சந்தித்து வாழ்த்து சொல்லும் கட்சியினர், முக்கியஸ்தர்களுக்கு 10 ரூபாய் தருவது கருணாநிதியின் வழக்கம். இதை வருடாவருடம் வாங்கி பத்திரமாக வைத்திருப்பவர்கள் ஏராளம்.
இந்த ஆண்டும் தன்னை சந்தித்தவர்களுக்கும் கருணாநிதி பளபளக்கும் ரூ 10 தாள் ஒன்றைக் கொடுத்தார். அதை அனைவரும் மிக பவ்வயமாக பெற்றுக் கொண்டு சென்றனர்.
அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரிடம் ரூ.10 தாளை கருணாநிதி கொடுத்த போது, தலைவரே, விலைவாசி எல்லாம் ஏறிப்போச்சு கொஞ்சம் பார்த்து போட்டுக் கொடுங்க என கூற, பதிலுக்கு கருணாநிதி எனக்கு 'யாரையும் போட்டுக் கொடுத்து' பழக்கமில்லை என கமெண்ட் அடிக்க அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கிப் போனது.

No comments:

Post a Comment


Labels