வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



09/11/2016

மோடி அறிவிப்பால் ஏழையெளிய மக்கள் தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத்தான் காண முடிகிறது: கலைஞர்

500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அறிவிப்பால் ஏழையெளிய மக்கள் தெருக்களிலே அலை மோதுகின்ற அவலத்தைத்தான் காண முடிகிறது என்று கூறியுள்ள கலைஞர், மத்திய அரசு  நன்கு சிந்தனை செய்து,  ஏழையெளிய நடுத்தர மக்களும்,  சிறு வணிகர்களும், இதன் காரணமாக  பாதிக்கப்படாமல்  தங்கள் வாழ்க்கையை  எப்போதும் போல்  நடத்திட உதவும் வழிவகையினைச் செய்திட  வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து விட்டு, இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கை இது;  கறுப்புப் பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்குக் காரணமாக உள்ளது  என்றும் காரணம் கூறியிருக்கிறார்.  வரவேற்கத்தக்க அறிவிப்பு இது என்ற போதிலும்,  இந்த அறிவிப்பின் காரணமாக,  நாட்டிலே உள்ள பெரிய செல்வந்தர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட  நடுத்தர மக்களும், ஏழையெளிய மக்களும், சிறு வணிகர்களும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுபவர்களும்  தங்களிடம் உள்ள 500 ரூபாய் நோட்டை  வாங்குவதற்கு யாரும் முன்வராத நெருக்கடியான  நிலையில்,  தெருக்களிலே அலை மோதுகின்ற  அவலத்தைத்தான் இந்த  அறிவிப்பின் காரணமாக காண முடிகிறது. 

இன்றைய காலகட்டத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாத ஊதியம் பெறுபவர்களிடம் மட்டுமின்றி நாள் ஊதியம்  பெறும் ஏழை எளிய மக்களிடமும்  புழக்கத்தில் உள்ளது என்பதை மறுக்க இயலாது.    நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காலையில் எழுந்தவுடன்  தங்கள் குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்குக் கூட வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.  கறுப்புப் பணம் இன்று யாரிடம் உள்ளது?   நான் கூறிய அந்த ஏழையெளிய உழைத்துப் பிழைக்கும் பிரிவினரிடமும்,  நடுத்தரக் குடும்பத்தினரிடமும் இருக்கிறதா என்றால் கிடையாது.   வங்கிகளிலே  கோடிக் கணக்கில், இலட்சக் கணக்கில் பணம் வைத்திருப்போர் - சேர்த்து வைத்த கறுப்புப் பணத்தில் பெரும் பகுதியை  வெளிநாடுகளுக்குக் கொண்டு  சென்று பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பது போக,   தங்களிடம் எஞ்சி  உள்ள ஒரு சில கோடி ரூபாய்  கறுப்புப் பணத்தை வைத்திருப்போர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகி வருகிறது.  கறுப்புப் பணத்தை  ஒழிப்பதற்காக   எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை எனச் சொல்லப்படுவதால்  வரவேற்கலாம்.   எனினும்,  பெரிய பெரிய பணக்காரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வதை விட,  சாதாரண, நடுத்தர ஏழையெளிய மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 
  
80 இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளிக் கொணர்ந்து, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும்  15 இலட்சம் ரூபாய் வரவு வைப்போம் - என்று  2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த  வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறி விட்டதை மறைப்பதற்காகவே  இந்த நடவடிக்கை  என்று  காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அலட்சியப்படுத்தி விட முடியாது. 
 
கறுப்புப் பணத்தை ஒழித்திடும் நோக்கில் 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனதா ஆட்சிக் காலத்தின் போது 1000 ரூபாய், 5000 ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதின் தொடர்ச்சியாக எந்த அளவுக்கு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்பதையும் கருதிப் பார்த்து இப்போது மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் மத்திய அரசு  நன்கு சிந்தனை செய்து,  ஏழையெளிய நடுத்தர மக்களும்,  சிறு வணிகர்களும்,  இதன் காரணமாக  பாதிக்கப்படாமல்  தங்கள் வாழ்க்கையை  எப்போதும் போல்  நடத்திட உதவும் வழிவகையினைச் செய்திட  வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

02/11/2016

நவ 20-ல் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் 
எண்ணிக்கை 92 ஆக உயர்ந்திருக்கும்: ஸ்டாலின்  பேச்சு

திமுக பொருளாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (02-11-2016) தருமபுரி மாவட்ட கழகச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்ரமணி அவர்களின் இல்லத் திருமண விழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்தி  மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு:

’’அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணமக்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கே நடைபெற்று முடிந்திருக்கின்ற திருமணம் சீர்திருத்த திருமணமாக, சுயமரியாதை திருமணமாக நடந்தேறி இருக்கிறது. பெருமையோடு சொல்லப்போனால் இது தமிழ் திருமணம். தமிழகத்திலே இருக்கக்கூடிய சில பிரச்சினைகள் எல்லாம் அண்ணன் துரைமுருகன் அவர்களும் மற்றவர்களும் மிகுந்த வேதனையுடன் உங்களிடத்திலே எடுத்துச் சொன்னார்கள். குறிப்பாக தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே 5 ஆண்டுகள் இருந்த ஆட்சி தான். நாங்கள் ஏதோ கடந்த 5 மாதங்களாக ஆளுகின்ற ஆட்சியை செயல்படாத ஆட்சி என்று சொல்லவில்லை, இது கடந்த 5 ஆண்டுகளாக செயல்படாத ஆட்சிதான். அந்த 5 வருடமும் வீடியோ கான்பரன்சிங்கில்தான் ஆட்சியை நடத்தினார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி எடுத்துச் சொல்வார்கள், ஆட்சி அல்ல காட்சி நடக்கிறது, அதுவும் காணொளி காட்சிதான் என்று தொடர்ந்து எடுத்துச் சொன்னோம். ஆனால் இன்றைக்கு அப்போல்லோவில்தான் எல்லாம் நடக்கிறது. வரக்கூடியவர்கள் உள்ளே செல்கிறார்கள், மருத்துவர்களை சந்திக்கிறார்கள், அமைச்சர்களை சந்திக்கிறார்கள் சந்தித்துவிட்டு வெளியே வந்து பேட்டி தருகிறார்கள். அதை இன்றைக்கு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

13/10/2016

காவிரி நதி நீர்ப் பிரச்சினை -
 திமுக கலந்துரையாடல் கூட்டத்தின் தீர்மானங்கள்
 
காவிரி நதி நீர்ப் பிரச்சினை குறித்து "விவசாய அமைப்புகளுடன் கலந்துரையாடல் கூட்டம்    திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் 13-10-2016 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.  தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி., தலைமைக் கழக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., பவுன்குமார் (காங்கிரஸ்), உ. பலராமன் (காங்கிரஸ்), சண்முகம் (சி.பி.எம்.), துரை மாணிக்கம் (சி.பி.ஐ), குணசேகரன் (சி.பி.ஐ), கு.செல்லமுத்து (உழவர் உழைப்பாளர் கட்சி), பி.ஆர். பாண்டியன் (அனைத்து விவசாய சங்கம்),தெய்வசிகாமணி (விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்கள்),அய்யாக்கண்ணு (விவசாய கூட்டு இயக்கம்),பாலு தீட்சிதர் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்),ஹேமநாதன் (ஐக்கிய ஜனதாதள விவசாயிகள் பிரிவு), தி.மு.க. விவசாய அணிச் செயலாளர்கள் கே.பி.இராமலிங்கம், ஏ.கே.எஸ்.விஜயன், கரூர் சின்னசாமி, தி.மு.க. விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் உ.மதிவாணன், எம்.எல்.ஏ., ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் : 1
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி ஆகஸ்ட் 2016 வரையிலான காலத்தில் கர்நாடக அரசு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு 94 டி.எம்.எசி என்ற நிலையில் உள்ளது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகம் வழங்க வேண்டிய 192 டி.எம்.சி. தண்ணீர் அளவில், கர்நாடகத்தில் போதிய அளவு மழை பெய்தும், இதுவரை கர்நாடகம் தமிழகத்துக்கு வெறும் 33.95 டி.எம்.சி. மட்டுமே வழங்கி உள்ளது.

இதனால் தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாக குறுவைச் சாகுபடியையும், முதல் முறையாகச் சம்பா சாகுபடியையும் இழந்து மிகப் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். வறுமையிலும், கடன் தொல்லைகளாலும் விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது.  மேலும், தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 26 மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளும் பாதிக்கப்படுவதோடு, விவசாயத் தொழிலாளர்கள் பல இலட்சம் பேர் வாழ்விழந்து வேறிடம் பெயர்ந்து செல்லக்கூடிய நிலையும் உருவாகி உள்ளது.

01/09/2016

நிலைகுலைந்த ஆட்சி - நிரந்தர வீழ்ச்சி!
ஜெயா தலைமையில் 100 நாள் வேதனைகள்!

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை ஆகியவற்றின் ஆதரவோடும், கறுப்புப் பணத்தின் துணையோடும், அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகின்றன.   அதனையொட்டி அரசுக்கு ஆதரவான ஏடுகளில் எல்லாம் முழு பக்கத்திற்கு, முதல் பக்கத்தில் 25 சாதனைகள்  விளம்பரமாக அரசினால் தரப்பட்டுள்ளன.   அந்த 25 சாதனைகளில் பல, அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில் மட்டுமே உள்ள அரைகுறைச் சாதனைகள்.  அதாவது நிதி ஒதுக்கீடு மட்டுமே செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சாதனைகள்.    அதில் 7 சாதனைகள் மின்சாரம் பற்றியவை.  மடிக்கணினி, விலையில்லா மாடு, தாலிக்குத் தங்கம்  போன்ற ஒருசில இலவசங்கள் சாதனைகள் பட்டியலிலே உள்ளன. முதலமைச்சர் 110வது விதியின் கீழ் படித்த ஒரு சில அறிக்கைகளும்  இந்தச் சாதனை விளம்பரத்திலே இடம் பெற்றுள்ளன. அம்மா திட்ட முகாம் மூலம் 1,99,209 மனுக் களுக்கு உடனடித் தீர்வு!  தயவு செய்து நம்புங்கள்.  விளம்பரம் செய்துள்ளார்கள். 100 நாட்களில் 1,99,209 மனுக்களுக்குத் தீர்வு என்றால்,  நாள் ஒன்றுக்கு 1,992 மனுக்களுக்குத் தீர்வாம்!  மக்களின் குறைகளைத் தெரிவிக்கும் மனுக்களுக்குத் தீர்வு காண்பது என்பது நிர்வாகத்தில் வழக்கமாக நடைபெற வேண்டிய காரியம்;  அது சாதனைப் பட்டியலில் வருமா?
அது சரி;  1,99,209 மனுக்களுக்குத் தீர்வு என்றால், எல்லாக் கோரிக்கைகளும் ஏற்கப்பட்டு விட்டனவா?  கேழ்வரகில் நெய் வடிகிறதாம்; கேட்டுக் கொள்ளுங்கள் தமிழர்களே!  அமைப்பு சாரா நல வாரியங்களில், 69,764 தொழிலாளர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டு, 99,703 பயனாளி களுக்கு நலத் திட்ட உதவிகளாம். 100 நாட்களில் 69,764 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டார்கள் என்றால் நாள் ஒன்றுக்கு 697 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்களாம். பதிவு செய்யப்பட்டது, 69,764 தொழிலாளர்கள்.  ஆனால் நலத் திட்ட உதவிகள் 99,703 பயனாளிகளுக்கு, அதாவது ஒரு நாளைக்கு 997 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாம்.  அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்கள் முறையாகச் செயல்படுகின்றனவா?  இப்படித்தான் அந்தச் சாதனைகளின் பட்டியல் விளம்பரமாக ஒரு சில நாளேடுகளிலே வந்துள்ளது!
இந்த 100 நாட்களில், அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட வேதனைகளின் பட்டியலைப் பார்க்கலாமா?

16/08/2016

ஜெயலலிதாவிடம் உரிய பதிலும் உண்மையும் இருந்தால் தானே உரக்க சொல்வதற்கு? கலைஞர்

ஜெயலலிதா வெற்றி விளம்பரத்துக்காக விதி 100ன் கீழ் அறிவிப்பு வெளியிடுகிறார். 24 மணி நேரமும் மக்களைப் பற்றி சிந்திப்பதாக ஜெயலலிதா சொல்வது சிரிப்பை வரவழைக்கிறது. பொது முக்கியத்துவம் வாய்ந்ததை அமைச்சர் அறிக்கை மூலம் வெளியிடலாம் என்பதே விதி 110 (1). முதலமைச்சர் மட்டுமே தான் எல்லா அறிக்கைகயையும் படிக்க வேண்டும் என்று விதி 110ல் கூறப்படவில்லை. திமுக ஆட்சியில் முதலமைச்சரும், அமைச்சர்களும் விதி 110ன் கீழ் அறிக்கை படித்துள்ளனர். அமைச்சரின் கடமையை முதல்வர் எடுத்துக் கொண்டால் அது ஆக்கிரமிப்பு ஆகாதா. 110வது விதியின் கீழ் அறிக்கை படித்த பின் பாராட்டி பேசலாம் என விதியில் கூறப்படவில்லையே? விதி 110ன் கீழ் கடலளவு திட்டத்தை அறிவித்துவிட்டு கையளவு மட்டுமே செய்ததற்கு என்ன பதில்? முதல்வர் ஜெயலலிதாவிடம் உரிய பதிலும் உண்மையும் இருந்தால் தானே உரக்க சொல்வதற்கு. சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி வைத்துக் கொண்டு சொல்வது எதற்கு என கலைஞர் கூறியுள்ளார்.

110வது விதியின் கீழ் அறிக்கையும், அதற்கு விளக்கமும்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகச் சட்டப்பேரவையில் நம்முடைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, பேரவை நிகழ்ச்சிகளில் தனது பங்களிப்பாக எதையாவது பதிவு செய்ய வேண்டுமென்ற அவாவில், 110வது விதியின் கீழ் அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கி விட்டார்; அது பற்றி எதிர்க்கட்சித் தலைவர் தம்பி மு.க. ஸ்டாலினும், துணைத் தலைவர் தம்பி துரைமுருகனும்  எழுப்பிய சில சந்தேகங்களுக்கும், முதலமைச்சர் அருமையான (!) விளக்கங்களை யெல்லாம் அவையிலே தந்திருக்கிறார்.  24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்திப்பதால், புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்களாம்!  அவர் கூறிய சில விளக்கங்கள் பற்றி கழக உறுப்பினர்கள் எழுப்ப முயன்ற சில சந்தேகங் களுக்கு பேரவைத் தலைவர் அனுமதி அளிக்க வில்லையாம். 

110வது விதியின் கீழ் ஓர் அறிக்கை பேரவையில் படிக்கப்பட்ட பின் அதைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யக் கூடாது.  எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று விதிகளிலேயே உள்ளது.  செய்யப் பட்ட அறிவிப்புக்கு நன்றி கூறி, பாராட்டுத் தெரிவித்து மட்டும் பேசலாம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். பாராட்டுத் தெரிவிப் பதேகூட ஒரு வகை விமர்சனம்தான் என்பதை ஜெயலலிதாவுக்கு யார் எடுத்தியம்பிடக் கூடும்?   விதிகளிலே 110வது விதியின் கீழ் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்று நானும் எடுத்துப் பார்த்தேன்.

08/08/2016

ஒரே கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் நிறைவேற்ற முடியாது: மு.க.ஸ்டாலின் பேச்சு

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக  பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், மு.க.ஸ்டாலின் பேசுகையில், மத்திய அரசு புதிய கல்வி கொள்கை திட்டத்தை கைவிட வேண்டும். ஒரே கல்வி கொள்கையை இந்தியா முழுவதும் நிறைவேற்ற முடியாது. சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் புதிய கல்விக் கொள்கையால் பாதிக்கும் என்றார். 

நோய் வந்தால் மருத்துவரை நாடிச் செல்கிறோம். தாவாவை தீர்க்க வேண்டும் என்றால் வழக்கறிஞர்களை தேடிஅவர்களின் உதவியை நாடிச் செல்லுகிறோம். ஆனால்நோயை போக்க வழகறிஞர்களை நாடி யாரும் செல்லக் கூடாது. செல்லவும் மாட்டார்கள். தாவாவை தீர்க்க மருத்துவரை நாடி யாரும் போகமாட்டார்கள். ஆனால்இன்றைக்கு நிலை எப்படி இருக்கிறது என்று சொன்னால்இன்றைக்கு ஒரு கொடுமையான நிலையில் சிக்கிஒரு கொடுமையான கல்விக் கொள்கையை புகுத்தக் கூடிய நிலையில் மத்திய அரசு இன்று ஈடுபட்டிருக்கிறது. ஆகவே அதை எதிர்க்கக் கூடிய வகையிலேதான்திராவிடர் கழகம்,அதன் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் பொறுப்பேற்றுதலைமையேற்றுஇந்த போராட்டத்தை நடத்த முன் வந்திருக்கிறார். ஆகவே திராவிட முன்னேற்றக் கழகமும்திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள்சாட்சிகள்சான்றுகள் உண்டு. அந்த அடிப்படையில்தான் இந்த போராட்டமும் நடந்து கொண்டிருக்கிறது.
 
மத்திய அரசு ஒரு ஆபத்தான புதிய கல்வி கொள்கையை வகுக்க திட்டமிட்டிருக்கிறது. அப்படி திட்டமிட்டிருக்கக் கூடிய அந்த கொள்கையில்,அதனுடைய வரைவினுடைய முகப்பில், ”Preamble”என்று சொல்லக் கூடிய அடிப்படையில்இரண்டாவது வரியாக அவர்கள் குறிப்பிட்டிருப்பது, “The Education System which was evolved first in ancient India is known as Vedic system”. அதாவது பண்டைய இந்தியாவில் முதன்முதலில் வேதத்தின் அடிப்படையில்தான் கல்வி முறை இருந்தது. அதைத் தொடர்ந்து நான்காவது வரியாக அவர்கள் சொல்வது, “The Gurukul system fostered a bond between the Guru & the Shishya”,அதாவது குருகுலம் முறை குருவுக்கும் சிஷ்யருக்கும் இடையே உறவை வளர்த்தது. ஆக இதைதான் நாம் இன்றைக்கு எதிர்க்க முற்பட்டிருக்கிறோம்.
 
இந்தியாவில் முதன்முதலில் 1968-ல் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை 17 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கல்விக் கமிட்டியாக உருவாக்கப்பட்டது. டி.எஸ்.கோத்தாரி தலைமையில் அந்த கமிட்டி உருவானது. அதன்பிறகு 1986-ல் கல்விக் கொள்கை வெளியானது. 1992-ல் சில திருத்தங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால்,இன்றைக்கு மோடி அவர்கள் தலைமையில் இருக்கக் கூடிய பிஜேபியுனுடைய மத்திய ஆட்சி சமூக நீதி,மதச்சார்பின்மைதமிழ்மொழி அனைத்திற்கும் சாவல் விடக் கூடிய வகையில்இந்த புதிய கல்விக் கொள்கையை புகுத்துகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதை இந்த போராட்டத்தின் மூலமாக நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

30/05/2016

ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கப்பட்ட விவகாரம்:ஜெ.அணுகுமுறை நாடகமேயன்றி அரசியல் நாகரிகம் அல்ல- கருணாநிதி


சென்னை: பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம், சட்டசபையின் முதல் நாள் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறை அரசியல் நாகரிகம் அல்ல என்றும், அவர் நடத்துவது நாடகம்தான் என்றும் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:"தமிழகத்தின் நலன்களுக்காக, தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட" விருப்பம் தெரிவித்துள்ள ஜெயலலிதாவின் நாகரிகத்தையும், நல்லெண்ணத்தையும் தாங்கள் கெடுத்துவிடுவீர்கள் என்ற பிரச்சாரத்தைச் சிலர் முன்னெடுத்திருக்கிறார்களே?" View Photosஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்ற நிகழ்ச்சிக்கு தி.மு. கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரிகம் கருதிச் சென்றிருந்தபோது, அவர் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைக்கப்பட்டதையும், எவ்வித "புரொட்டக்கால்" அம்சங்களும் அனுமதிக்காத பலர், முதல் வரிசையில் இடம் பெற்றிருந்ததையும் சுட்டிக்காட்டி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.உடனே ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், "Had the Officers brought to my Notice that Thiru M.K. Stalin would be attending the event, I would have instructed the Officers in charge of the arrangements to provide him a Seat in the First Row, relaxing the norms in the Protocol Manual" என்று குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான், ஜெயலலிதா ஏதோ அரசியல் நாகரிகம் போற்ற முன் வந்திருப்பதாகவும், நான் அதைப் புரிந்துகொள்ளாமல் கெடுக்க முயற்சி செய்வதாகவும் சிலர் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.முன்பொரு முறை, ஜெயலலிதா பதவியேற்பு நிகழ்ச்சிக்குக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சென்றிருந்த போதும், உரிய மரியாதை கொடுத்து இருக்கை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அப்போது ஜெயலலிதா என்ன விளக்கம் அளித்தார்? 8-3-2002 அன்று "தி இந்து" ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தி பின்வருமாறு:-"She (Jayalalithaa) clarified that she had no knowledge of the Seating Order for V.I.Ps. at the Ceremony. She assumed that all proper arrangements had been made. Only after the Ceremony started did she notice Mr. Anbazhagan in the Sixth Row" என்று ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்.ஜெயலலிதா 2002 ஆம் ஆண்டு அளித்த விளக்கத்திலிருக்கும் அரசியல் நாகரிகத்திற்கும், பதினான்கு ஆண்டுகள் கழித்து இப்போது அளித்திருக்கும் விளக்கத்தில் உள்ள அரசியல் நாகரிகத்திற்கும், ஏதேனும் வித்தியாசம் உண்டா என்றால் நிச்சயமாக இல்லை என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.அதுமட்டுமா? புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் பதவியேற்க, சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் பேரவைக்குள் சென்றேன். நான் பேரவைக்குள் செல்வதை அறிந்த ஜெயலலிதா, "விருட்"டென்று எழுந்து வெளியேறினாரே; அவருடைய வெளிநடப்பு, அவர் திருந்திவிட்டார் என்பதையா காட்டுகிறது? அவர் அப்படி வெளியேறியது எவ்வகை அரசியல் நாகரிகத்தின்பாற்பட்டது?


Labels