வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



14/05/2015

தமிழக அரசின் ரூ.10000 கோடி ஊழல்: ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் புகைப்படத்துடன் பேனர் வைத்த தனியார் அமைப்பு
Another corruption list emerges in Chennai
சென்னை: தமிழக அரசின் ரூ.10 ஆயிரம் கோடி ஊழல், சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்ற பேனர் சென்னை புறநகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த பேனரில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காதுகுத்து, கல்யாணம், என நல்லது கெட்டது எதுவென்றாலும் பேனர் வைப்பது இன்றைக்கு ஃபேஷன் ஆகிவிட்டது. ஊழல் செய்த அதிகாரிகளை பேனர் வைத்து வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர் சிலர். இன்றைக்கு வைக்கப்பட்ட ஒருபேனரும் ஒரு பரபரப்பு ரகத்தை சேர்ந்த்துதான்சென்னை குரோம்பேட்டை சரவணா ஸ்டோர் எதிரில் இன்று காலையில் பிரம்மாண்ட பிளெக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் ‘ தமிழக அரசின் ரூ.10000 கோடி ஊழல் - சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்' என்று தலைப்பிடப்பட்டிருந்தது.இந்த பேனரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன், ராமமோகன் ராவ் ஆகியோர் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஹன்ஸ்ராஜ்வர்மா, அதுல் ஆனந்த், குமரகுருபரன், சபீதா, உதயசந்திரன், சவுண்டையா, வெங்டேசன், கார்த்திக் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் புகைப்படங்களும் பேனரில் இடம் பெற்றுள்ளது.இதே போன்ற ஒரு பேனர் தாம்பரம் - இரும்புலியூர் தேசிய நெடுஞ்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்தும் செல்போன்களில் புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். இந்த பேனரை ஒரு தனியார் அமைப்பு ஒன்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த வாரம் பொதுப்பணித்துறையில் லஞ்சம் வாங்கிய ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரூ.10000 கோடி ஊழல் சிக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்ற தலைப்பில் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment


Labels