வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

11/07/2014

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு 

வழக்கை காரணம் காட்டி அவர் முதல்வர் 

பதவியில் தொடர அனுமதிக்கக்கூடாது எனக் கோரி 

பெங்களூர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் ராசாராம் தாக்கல் செய்துள்ள வழக்கால் ஜெயலலிதாவுக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது.
அதில், "சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வரும் போது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் பதவி வகிப்பது சரியல்ல. இவர் பதவி விலக வேண்டும்" என்று கோரியிருந்தனர்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொறுப்பில் இருந்த சீனிவாசன் மீது புகார்தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் போது இவர் பொறுப்பில் இருந்தால் முறையான, நேர்மையான விசாரணை நடக்க முடியாது என்றும், இவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றமே கூறியது. இதனையடுத்த அவர் பதவியில் இருந்து விலகினார்.
ஒரு கிரிக்கெட் வாரியத்திற்கே இப்படி ஒரு நிலையை எடுக்கும் போது, ஒரு மாநில முதல்வராக இவர் எப்படி நீடிக்க முடியும், இது சரியாகாது எனவே இவர் முதல்வர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர். இந்த பொறுப்பில் இருந்து ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என உத்தரவிட வேண்டும்" எனக் கூறினர். .
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா, இது தொடர்பாக விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது என்றும் கூறினார்.
ஆனால் அதனை மறுத்த மனுதாரர்கள் இருவரும்,. உங்களுக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்கிறோம். பின்னர் தீர்ப்பு வழங்குங்கள் என்றும் கூறினர்.
இதனையடுத்து இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது. ஒருவேளை இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்திற்கோ பரிந்துரைக்கப்பட்டாலோ அல்லது சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹாவே எடுத்துக்கொண்டாலும், சொத்துக் குவிப்பு வழக்கு தவிர்த்து இந்த வழக்கின் மீதும் ஜெயலலிதா கவனம் செலுத்த நேரிடும். மேலும் டிராபிக் ராமசாமி தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்தால், அதனாலும் ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர்வதற்கு சிக்கல் ஏற்பட்டுவிட வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும் வரும் திங்கட்கிழமை இவ்வழக்கில் ஏதாவது திருப்பம் வரும் என எதிர்பார்க்கலாம்.
by
இளஞ் சூரியன்.
Photo: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை காரணம் காட்டி அவர் முதல்வர் பதவியில் தொடர அனுமதிக்கக்கூடாது எனக் கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த டிராபிக் ராமசாமி மற்றும் வழக்கறிஞர் ராசாராம் தாக்கல் செய்துள்ள வழக்கால் ஜெயலலிதாவுக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது.
அதில், "சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வரும் போது ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் பதவி வகிப்பது சரியல்ல. இவர் பதவி விலக வேண்டும்" என்று கோரியிருந்தனர்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொறுப்பில் இருந்த சீனிவாசன் மீது புகார்தெரிவிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் போது இவர் பொறுப்பில் இருந்தால் முறையான, நேர்மையான விசாரணை நடக்க முடியாது என்றும், இவர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றமே கூறியது. இதனையடுத்த அவர் பதவியில் இருந்து விலகினார்.
ஒரு கிரிக்கெட் வாரியத்திற்கே இப்படி ஒரு நிலையை எடுக்கும் போது, ஒரு மாநில முதல்வராக இவர் எப்படி நீடிக்க முடியும், இது சரியாகாது எனவே இவர் முதல்வர் பொறுப்பில் நீடிக்க தகுதியற்றவர். இந்த பொறுப்பில் இருந்து ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என உத்தரவிட வேண்டும்" எனக் கூறினர். .
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா, இது தொடர்பாக விசாரிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க மட்டுமே உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது என்றும் கூறினார்.
ஆனால் அதனை மறுத்த மனுதாரர்கள் இருவரும்,. உங்களுக்கு அதிகாரம் உண்டு. நீங்கள் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக மேலும் பல ஆவணங்களை வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்கிறோம். பின்னர் தீர்ப்பு வழங்குங்கள் என்றும் கூறினர்.
இதனையடுத்து இந்த வழக்கு வருகிற திங்கட்கிழமை ஒத்தி வைக்கப்பட்டது. ஒருவேளை இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கோ அல்லது உச்ச நீதிமன்றத்திற்கோ பரிந்துரைக்கப்பட்டாலோ அல்லது சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹாவே எடுத்துக்கொண்டாலும், சொத்துக் குவிப்பு வழக்கு தவிர்த்து இந்த வழக்கின் மீதும் ஜெயலலிதா கவனம் செலுத்த நேரிடும். மேலும் டிராபிக் ராமசாமி தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பான ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்தால், அதனாலும் ஜெயலலிதா முதல்வர் பதவியில் தொடர்வதற்கு சிக்கல் ஏற்பட்டுவிட வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும் வரும் திங்கட்கிழமை இவ்வழக்கில் ஏதாவது திருப்பம் வரும் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Labels