ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கம்பெனிகளை விடுவிக்ககோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் செயல்பட்டதால் 5 கம்பெனிகளுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இருந்து தங்கள் கம்பெனிகளை விடுவிக்கக்கோரி லெக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், மெடோ ஆக்ரோ பாரம், ரிவர்வே ஆக்ரோ பாரம், ராமராஜ் ஆக்ரோ பாரம், சைனோரா பைனான்ஸ் ஆகியவை மனு தாக்கல் செய்தன. இவற்றை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு கம்பெனியின் சார்பிலும் வக்கீல்கள் வாதம் செய்ய அனுமதித்தார். அதன்படி வக்கீல்கள் தியாகராஜன், குலசேகரன் ஆகியோர் கம்பெனிகள் சார்பில் ஆஜராகி வாதம் செய்தனர்.
கம்பெனிகளின் இயக்குனர்கள், கம்பெனிகளுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து வழக்கில் கம்பெனிகளை சேர்த்தது தொடர்பாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி.யிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மனுதாரர்களின் வாதத்திற்கு அரசு சிறப்பு வக்கீல் பவானி சிங், அரசு வக்கீல் முருகேஷ் மரடி ஆகியோர் மறுப்பு தெரிவித்து வாதம் செய்தனர். அப்போது, வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்கள் இந்த கம்பெனிகளுடன் வைத்துள்ள தொடர்பு, வருமானத்திற்கும் அதிகம் சம்பாதித்த பணத்தை கம்பெனிகள் பெயரில் முதலீடு செய்தது உள்பட பல விவரங்களை ஆணித்தரமாக எடுத்து கூறி வாதிட்டதுடன், வழக்கில் இருந்து கம்பெனிகளை விடுவிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கம்பெனிகள் மனுக்கள் மீதான தீர்ப்பை ஜூன் 19ம் தேதி வழங்குவதாக அறிவித்தார்.
அதன்படி, சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் நேரில் ஆஜராகாமல் விலக்கு அளிக்ககோரி அவர்கள் வக்கீல்கள் அசோகன், பன்னீர்செல்வம், செல்வகுமார், தனஞ்செயன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுகொண்டார். அதை தொடர்ந்து கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:சொத்து குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையேற்று வழக்கை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், வழக்கில் இணைக்கப்பட்டுள்ள கம்பெனிகளை விடுவிக்ககோரி மனு தாக்கல் செய்யப்படுகிறது. இவ்வழக்கு பெங்களூரில் 9 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஆரம்பத்தில் கம்பெனிகளை விடுவிக்ககோரி மனு எதையும் தாக்கல் செய்யாமல் மவுனம் காத்த அதன் இயக்குனர்கள், வழக்கு முடியும் கட்டத்தில் இருக்கும்போது மனு தாக்கல் செய்திருப்பதில் உள்நோக்கம் உள்ளது. வழக்கை இழுத்தடிக்க வேண்டும், நீதிமன்ற நேரத்தை வீணாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கம்பெனிகள் சார்பில் மனு தாக்கல் செய்திருப்பது உறுதியாக தெரிகிறது. ஆகவே, 5 கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்கிறேன். மேலும், தேவையில்லாமல் மனு தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக 5 கம்பெனிகளுக்கும் தலா ஸி50 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன். மேலும், லெக்ஸ் பிராபர்ட்டீஸ் சார்பில் தாக்கல் செய்துள்ள மற்றொரு மனு மீதான தீர்ப்பை நாளை வழங்குகிறேன்.இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.இன்று மூல வழக்கு (சொத்து குவிப்பு வழக்கு) விசாரணை தொடங்குகிறது. அப்போது, ஜெயலலிதா, சசிகலா உட்பட குற்றவாளிகள் தரப்பில் வாதம் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
17 ஆண்டாக என்ன செய்தீர்கள்?
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ஜெ ரியல் எஸ்டேட், ஜெ. பாரம் ஹவுஸ், கிரின் பாரம் ஹவுஸ் மற்றும் ஜெ.எஸ்.ஹவுசிங் டெவலப்மென்ட் லிமிடெட் ஆகிய கம்பெனிகளை விடுவிக்ககோரி, அதன் இயக்குனர் சுரேஷ்குமார் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பு மனு தாக்கல் செய்தார். அதை ஏற்றுகொண்ட நீதிபதி டிகுணா, சுரேஷ் குமாரை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி, ‘வழக்கு தொடர்ந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்டது. அப்போதெல்லாம் கம்பெனியை விடுவிக்க வேண்டும் என்று கேட்காத நீங்கள், இப்போது கேட்பதற்கு என்ன காரணம்? யார் தூண்டுதலின் பேரில் மனு தாக்கல் செய்துள்ளீர்கள்?
நீதிமன்றத்தை நாடி இருப்பதற்கான காரணம் என்ன?’ என்று சராமரியாக கேள்வி எழுப்பினார். அவற்றுக்கு பதில் சொல்ல முடியாமல் சுரேஷ் குமார் திணறினார். பின்னர், தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று கூறினார். அதை கேட்ட நீதிபதி, ‘‘நாளை மொழிபெயர்ப்பாளரை வரவழைக்கிறேன். ஆஜராகி பதில் சொல்லுங்கள்’’ என்றார்.அப்போது சுரேஷ்குமார் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘மனுதாரருக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியிருப்பதால், அவர் சிகிச்சை எடுக்க வசதியாக விசாரணையை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்’’ என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

No comments:
Post a Comment