அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவரை அறிவித்த 2 நாட்களிலேயே மாற்றி
விட்டார்களே? கலைஞர் பதில்!
திமுக தலைவர் கலைஞர் 27.01.2014 திங்கள்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவரை அறிவித்த இரண்டு நாட்களிலேயே மாற்றி விட்டார்களே?
கலைஞர் :- அந்தக் கட்சியில் இதுபோல நடப்பது இது ஒன்றும் புதுமை அல்ல. இதற்கு முன்பு அ.தி.மு.க. இரண்டு முறை வேட்பாளர்களை அறிவித்து விட்டு பின்னர் திரும்பப் பெற்றிருக்கிறது.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின் போது, ஆதிராஜாராமை முதலில் அறிவித்து விட்டு, பிறகு என். தளவாய் சுந்தரம் என்பவரையும், அதன் பிறகு 2013ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் முதலில் சரவணப் பெருமாள் என்பவரை வேட்பாளராக அறிவித்து விட்டு, பின்னர் கே. தங்கமுத்துதான் வேட்பாளர் என்று மாற்றினார்கள். ஆதி ராஜாராமை முதலில் வேட்பாளராக அறிவித்தபோது, மூத்த வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கில் ஆதி ராஜாராம்தான் முதல் குற்றவாளி என்றும், அவர் “ஜாமீன்” பெற்று வெளியிலே இருப்பவர் என்றும் பின்னர் தெரிந்து, அதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்த காரணத்தால் வேட்பாளர் ஆதிராஜாராமை மாற்றி விட்டு தளவாய் சுந்தரம் என்பவரை வேட்பாளராக்கினார்கள்.
2013ஆம் ஆண்டு அ.தி.மு.க. வேட்பாளராக முதலில் சரவணப் பெருமாளை, அ.தி.மு.க. அறிவித்த போதும், அவர் 3,578 கிலோ வெள்ளியைக் கடத்தியதற்காக அவர் மீது சுங்க வரிச் சட்டம் மற்றும் அன்னியச் செலாவணி ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவர் என்பது தெரிந்து, அவரை வேட்பாளராக அறிவித்ததைத் திரும்பப் பெற்றுக் கொண்டு கே.தங்கமுத்துவை வேட்பாளராக அறிவித்தார்கள்.
எப்படிப்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எல்லாம் அங்கே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள். இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment