காங்கிரஸ் திமுக உறவு பல்லாண்டு காலமாக நீடித்து வரக்கூடியது: கலைஞரை சந்தித்தப் பின் ஆசாத் பேட்டி
திமுக தலைவர் கலைஞரை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வியாழக்கிழமை மாலை சிஐடி காலணியில் உள்ள இல்லத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன், திமுக எம்பி கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இச்சதிப்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இச்சந்திப்பின்போது புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இச்சதிப்பில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இச்சந்திப்பின்போது புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இச்சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், அரசியலில் நான் மதிக்கக்கூடிய தலைவராக கலைஞர் விளங்குகிறார். நட்பின் அடிப்படையில் கலைஞரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கூட்டணி குறித்து தற்போது பேசவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து யோசிக்கப்படும். காங்கிரஸ் திமுக உறவு என்பது பல்லாண்டு காலமாக நீடித்து வரக்கூடியது என்றார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிய பின்னர், முதன் முதலாக குலாம் நபி ஆசாத், கலைஞரை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் உடனிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியின் தூதராக, குலாம் நபி ஆசாத் கலைஞரை சந்தித்துள்ளார் என்றும், திமுக, காங்கிரஸ், தேமுதிக கூட்டணியை ஏற்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு இருக்கலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment