நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்திட முயற்சிக்கும் வேளையில் தானாக முன் வந்து முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகள் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரிக்கின்றது என்றால் சிறுபான்மை மக்களுக்கும், தலித் இன மக்களுக்கும் என்றென்றும் அரணாக இருந்ததும், இருப்பதும்,இருக்கப்போவதும் திமுகதான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்..!!
இதை எந்த ஊடகங்களாவது எழுதுகின்றதா என்றால் இல்லை..!! ஜெயலலிதா தனித்து போட்டியிட்டாலும் அவர்களுக்குதான் எங்கள் ஆதரவு என்று கூறும் தா.பாண்டியனின் செய்திகளையும், அதிமுக விற்க்கு ஜால்ரா அடிக்கும் சரத்குமாரின் அறிக்கையையும், தேமுதிகவோடு காங்கிரஸ் பேச்சு வார்த்தை, பாஜகவோடு தேமுதிக இணையும் என்பதுபோன்ற செய்திகளைதான் பெரியதாக எழுதுகின்றார்கள்..!!
விலைபோய்விட்ட ஊடகங்கள் எதையாவது எழுதி பார்ப்பனர்களின் ஆட்சியை கொண்டுவந்துவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் எழுதிக்கொண்டு உள்ளது என்பது மட்டும் பட்டவர்த்தனமாக தெரிகின்றது..!! இஸ்லாமிய,கிருஸ்துவ மற்றும் தலித் இன மக்களின் ஆதரவின்றி இந்த பார்ப்பன ஊடகங்களின் ஆதரவில் மட்டும் ஜெயித்துவிடலாம் என்று கனவு காணும் பாஜகவுக்கும், அதிமுகவிற்க்கும் மக்கள் பாடம் புகட்டப்போவது நிச்சயம்..!!
No comments:
Post a Comment