வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



21/01/2014



எனக்கு நெருங்கிய நண்பராகவும், உற்ற தோழராகவும்,என்னோடு கரம் பிடித்து வந்து கொண்டிருக்கக் கூடிய நாசர் அவர்களை நினைவுபடுத்தி காட்டி இங்கு பேசிய அனைவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள்,அது நூற்றுக்கு நூறு உண்மை.

தி.மு.க வின் துணை அமைப்புகளில் ஒன்றாக இளைஞர் அணியை தலைவர் கலைஞர் அவர்கள் 1980 ஆம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவிலே உருவாக்கித் தந்தார்கள்.அதற்கு அமைப்பு குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது.அதில் என்னையும் சேர்த்து ஆறு பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோம்.அந்தக் குழுவினர், தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து அமைப்பாளர்கள்,துணை அமைப்பாளர்களை நியமித்தோம்.அப்படி தேர்வு செய்ததில் இன்று காஞ்சிபுரம்-திருவள்ளூர் என இரண்டு மாவட்டங்களாய் இருக்க கூடியது, அன்று செங்கல்பட்டு என ஒருகிணைந்த மாவட்டமாய் இருந்தது.அதற்கு சி.வி.எம்.பொன்மொழி அவர்கள் இளைஞர் அணி அமைப்பாளராகவும்,நாசர் துணை அமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார்கள்.

மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், தேசிய முன்னணியைத் தொடங்கியபோது, அதன் தொடக்க விழாவை தமிழ்நாட்டில் நடத்த விரும்பினார். சென்னையில் நடைபெற்ற அந்த விழாவில் இளைஞர் அணி சார்பில் அணிவகுப்பு ஒன்று நடைபெற்றது.பயிற்சி பெற்ற ராணுவ மிடுக்கோடு நடக்கக்கூடிய பட்டாளத்தைத் தயார் செய்தோம்.அதில் வெண்சீருடையிலே நடந்து வந்த எங்களைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அந்த பசுமையான நிகழ்ச்சி இன்னும் எங்கள் மனதில் நினறைந்துள்ளது.

அந்தப் பேரணிக்குப் பிறகு வந்த தேர்தலில்தான், வி.பி.சிங் அவர்கள் வெற்றிபெற்று பிரதமர் ஆனார்.அப்பொழுது 89ஆம் ஆண்டு நான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன்.அச்சமயம் அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட, பொது நிறுவனங்கள் குழுவில் நானும்,மறைந்த என் நண்பர் அன்பில்பொய்யாமொழி அவர்களும் ,செங்கை சிவம் மற்றும் அ.தி.மு.க வை சேர்ந்தவர்களும்,கம்யூனிஸ்ட் நண்பர்களும்
நியமிக்கப்பட்டோம்.பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய கூடிய வாய்ப்பு எங்களுக்குப் கிடைத்தது.அப்படி செல்லும்போது தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்தோம்.அப்போது நம்முடைய கூட்டணியை சார்ந்த பிரதமராய் இருந்த திரு வி.பி.சிங் அவர்களை எல்லோரும் அவரின் இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த சந்திப்பில் அனைவரையும் அறிமுகபடுத்தபட்டனர்,அதில் என்னை அன்பின்.பொய்யா மொழி அவர்கள் அறிமுகப்படுத்தினார்,“இவர்தன் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞரின் மகன்,இளைஞர் அணி செயலாளர்” என அறிமுகப்படுத்தினார்.அப்போது வி.பி.சிங் அவர்கள்,"இவரை எனக்கு தெரியாதா?தேசிய முன்னணியின் தொடக்க விழா நடைபெற்றபோது இராணுவ மிடுக்கோடு இளைஞர் அணிப்படையை நடத்தி, அதற்குத் தலைமையேற்று வந்த வீரன்தானே இவன்" என்று குறிப்பிட்டுச் சொன்னார்.ஆக இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல ஒட்டு மொத்த இளைஞர் அணிக்கே கிடைத்த பெருமை.

இளைஞரணியின் அப்படிப்பட்ட தருணங்களில் முழுமுதலாய் இருந்தவர் நம் நாசர் அவர் இல்ல திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவதில் நான் பெருமைப்படுகிறேன்.

No comments:

Post a Comment


Labels