திமுக அரசின் திட்டம் என மூடுவிழா நடத்தாமல் தொடருகிறார்களே என்ற வகையில் மகிழ்ச்சி: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர் 08.01.2014 புதன்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில்,
கேள்வி :- தமிழகத்தில் அரிசி வாங்கும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் வழங்கப் போவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக் கிறாரே, இது புதிய திட்டமா?
கலைஞர் :- இந்தத் திட்டமே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. தமிடிநப் புத்தாண்டு தினமான தைத் திங்கள் முதல் நாள், தமிழகத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் - சர்க்கரைப் பொங்கலிட்டு, புத்தாண்டுத் திருநாளை மகிழ்வோடு கொண்டாடு வதற்கு ஏதுவாக 2009ஆம் ஆண்டு - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் - தமிழ்ப் புத்தாண்டுப் பரிசாக பச்சரிசி அரை கிலோ - வெல்லம் அரை கிலோ - பாசிப் பருப்பு 100 கிராம் - முந்திரிப் பருப்பு 10 கிராம் - உலர்ந்த திராட்சை 5 கிராம் - ஏலக்காடீநு 5 கிராம் - ஆகிய பொருள்கள் அடங்கிய பை ஒன்று வழங்க ஆணையிடப்பட்டு ஏறத்தாழ 70 கோடி ரூபாய்ச் செலவில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர் களுக்கும் அது இலவசமாக வழங்கப்பட்டது. இந்தத் திட்டம்தான் தற்போதும் தொடர்கிறது.
கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பையில் ஒரு கிலோ பச்சரிசியும், வெல்லத்துக்குப் பதிலாக ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பொங்கலுக்கான பொருள்களை வாங்குவதற்காக ரொக்கமாக 100 ரூபாயும் வழங்கப்பட்டது. அதே போலத்தான் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி பச்சரிசி, சர்க்கரையுடன் 100 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுகிறது.

எப்படியோ, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மற்ற பல திட்டங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடுவிழா நடத்தியதைப் போல இதற்கும் ஒரு மூடுவிழா நடத்தாமல் தொடருகிறார்களே என்ற வகையில் ஓரளவு மகிழ்ச்சி அடையலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment