பாரதபிரதமரை கருணாநிதி அடையாளம் காட்டுவார்: தி.மு.க. செயல் வீரர்கூட்டத்தில் திருச்சி சிவா பேச்சு
திருவெறும்பூர், டிச.28–
திருச்சியில் நடந்த 5 தி.மு.க மாநாடுகளில் கே.என்.நேரு வரவேற்புக் குழு தலைவராக பங்கேற்கும் 3–வது மாநில மாநாட்டில் பாரத பிரதமரை கருணாநிதி அடையாளம் காட்டுவார் என முன்னாள் எம்பியும், தி.மு.க கொள்கைபரப்பு செயலாளருமான திருச்சி சிவா பேசினார்.
திருச்சிசிவா தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசியாதாவது–.
வரவிருக்கிற 14–வது மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக தி.மு.க–வின் சார்பில் 10–வது மாநில மாநாடு திருச்சியில் நடக்கிறது.நடைபெறவிருக்கிற 10–வது மாநில மாநாட்டையும் சேர்த்து இதுவரை திருச்சியில் 5 மாநில மாநாடுகள் நடைபெற்றுள்ளது. இதில் 3 மாநாடுகளை வரவேற்புக்குழு தலைவராக இருந்து நடத்திய பெருமை மாவட்டக்கழக செயலாளர் கே.என். நேருவுக்கு உண்டு. நான் எம்.பி யாக இருந்தவன் என்று சொல்லிக் கொள்வதை விட கழகத்தின் கொள்கைப்பரப்பு செயலாளர் என்று சொல் லிக் கொள்வதில் தான் பெருமை யடைவேன். அதுபோல முன்னாள் அமைச்சர் என்று சொல்லி கொள்வதில் அடையும் பெருமையை விட தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர் என்று சொல்லி கொள்வதில்தான் கே.என்.நேருவும் பெருமை கொள்வார்.
கழகத்தின் முக்கியமான காலகட்டங்களில் முடிவுகளை எடுப்பதற்காக கருணாநிதி தேர்ந்தெடுக்கும் களம் திருச்சியில் தான் அமையும். தற்போது ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்கும் வல்லமை திருச்சி மாவட்ட கழக செயலாளருக்கு உண்டு என்று கருணாநிதி கருதியதால்தான் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான முக்கிய முடிவுகளை, வியூகங்களை எடுக்கும் களமாக திருச்சியை தேர்வு செய்துள்ளார். நடந்து முடிந்த பொதுக் குழுவில் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று தலைவர் கருணாநிதி அறிவித்த முடிவுக்கு பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சி ஊழல் வழக்குகளையெல்லாம் தோழமை கட்சிகளான மாநில கட்சிகளின் மீது போட்டு மக்கள் மத்தியில் மாசு ஏற்படுத்தி வந்ததை தற்போது மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டனர். காங்கிரஸ் கட்சியோடு நாம் கொண்டிருந்த கூட்டணி யால்தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் நம் மீது விமர்சனம் வந்தது. அந்த விமர்சனங்களை எல்லாம் கடந்து வந்து விட்டோம்.
மாநில கட்சிகளின் தயவு இன்றி மத்தியில் ஆட்சி இல்லை. 1989ல் கருணாநிதி ஆதரவு தெரிவித்த வி.பி.சிங், 1996ல் தேவகவுடா, தொடர்ந்து குஜ்ரால் என கருணாநிதி சுட்டி காட்டியவர்கள்தான் பிரதமர் ஆனார்கள். அந்த நிலை தான் வருகிற தேர்த லிலும் வரும்.போராட்டம் என்றால் உற்சாகம், மாநாடு என்றால் எழுச்சி அடையும் தி.மு.க. தொண்டர்கள் இந்த மாநாட்டை வெற்றி அடைய செய்வது மூலம் மக்களவை தேர்தலின் வெற்றியையும் உலகுக்கு உணர்த்துவோம்.
செல்கிற பாதையெல்லாம் “ரோம் நகரை நோக்கி” என்பதை போல எல்லா சாலைகளும் திருச்சியை நோக்கி திரும்பட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment