எத்தனை கொலைகள்?
எத்தனை கொள்ளைகள்?
ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதற்கு ஆதாரபூர்வ மாக விளக்கம் கூற வேண்டுமேயானால், இந்த இரண்டரை ஆண்டுகளில் ஏடுகளிலே வெளிவந்த கொலைகள் மாத்திரம் 3,231 - கொள்ளைகள் 1,170 - வழிப்பறி மோசடிகள் 691 – செயின் பறிப்புகள் 652! இதுதான் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நன்கு பராமரிக்கப்படுவதற்கான இலட்சணம்!
கடந்த வாரம் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகளின் மாநாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் மூன்று நாட்கள் நடைபெற்றிருக்கிறது. மூன்று நாட்களிலும் முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றியிருக்கிறார். முதல் நாளன்று அவருடைய தொடக்கவுரையில், பத்திரிகைகள் எல்லாம் பெரிதாக வெளியிட்டிருப்பது சட்டம், ஒழுங்கு பற்றித்தான்! "சட்டம், ஒழுங்கைப் பொறுத்தவரை இங்குள்ளோர் அனைவரும் பெருமையும், திருப்தியும் கொள்ளும் நிலையில்தான் உள்ளது. வகுப்புவாத, தீவிரவாத, மத அடிப்படை யிலான மோதல்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. காவல் துறைக்கும், மாவட்ட நிர்வாகத் திற்கும் எந்தத் தடைகளையும் விதிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட நான் அனுமதி அளித்ததால் மட்டுமே இது சாத்தியமானது"" என்று முதல் அமைச்சர் பேசியிருக்கிறார். கடந்த ஆண்டும் இதே டிசம்பர் மாதத்தில் 17ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடைபெற்று, அப்போது முதலமைச்சர் பேசிய போதும் என்ன பேசினார் என்றால், "எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டிலே சட்டம், ஒழுங்கு, அமைதி இவைகள் எல்லாம் சிறப்பாக இருக்கின்றன. தீவிரவாதம் தமிழகத்தில் இல்லை; மதவாதம் தலையெடுக்க அனுமதிக்கப்படவில்லை"" என்று குறிப்பிட்டார். அதற்கு மறுநாளே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நான், அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகு, அது வரை நடைபெற்ற கொலைகள் எத்தனை, கொள்ளை கள் எத்தனை, செயின் பறிப்புகள் எத்தனை, வழிப்பறி மோசடிகள் எத்தனை என்றெல்லாம் புள்ளி விபரங்களோடு பட்டியலிட்டுக் காட்டினேன். சட்டம், ஒழுங்கு இந்த ஆட்சியில் எவ்வாறு இருக்கிறது என்பதற்கு ஒருசில சம்பவங்களை நினைவுபடுத்தினாலே புரிந்துகொள்ள முடியுமென்று நம்புகிறேன்.
வாடிப்பட்டி அருகே உருட்டுக்கட்டையால் தாக்க வந்த அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமையி லான கும்பலுக்குப் பயந்து சோழவந்தான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கருப்பையா, ஓட்டல் அறைக்குள் வைத்துப் பூட்டியதால் உயிர் தப்பினார். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கான அடையாளங் களில் இதுவும் ஒன்றோ? இரண்டு மாதங்களுக்கு முன்பு ஐகோர்ட் நீதிபதிகள் ஜெயசந்திரன், நாகமுத்து ஆகியோர், கொலை வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில், """"கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை. அதில் படிந்திருந்த ரத்தக் கறையை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி, அந்த அரிவாள்தான் கொலையாளிகள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்கவில்லை. விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருந்தன. அந்தக் குறைபாடுகளைக்களைய போலீசாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைப் போலீசார் சரியாகப் பயன்படுத்தவில்லை. இந்த வழக்கில் போலீசாரின் பல்வேறு குறைபாடுகள், தவறுகள், திறமையின்மை வெளிப்பட்டுள்ளது. இதற்குமேல் விசாரணை அமைப்பை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் எனத் தெரியவில்லை. கல்நெஞ்சம் படைத்த கொலையாளிகள்; நான்கு பேரைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். போலீசாரின் விசாரணை முழுவதும் வீணாகிவிட்டது. ஐகோர்ட் வைத்திருந்த நம்பிக்கையை போலீசார் தகர்த்துவிட்டனர். தகுந்த ஆதாரங்கள் சாட்சியங் களின் அடிப்படையில் நிரூபிக்க போலீசார் தவறி விட்டனர். போலீசார் பொறுப்பு, கடமைகளில் தவறியதை உணர வேண்டும். விசாரணையில் போலீசார் அலட்சியம் காட்டுவது, நீதி, நியாயம் தோற்கக் காரணமாக அமைகிறது. இந்த வழக்கில் நீதி தோற்றதை கனத்த இதயத்துடன் சொல்கிறோம்"" என்று காவல் துறை பற்றி நீதிபதிகள் விமர்சித்திருக்கிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் அவர் பொறுப்பில் உள்ள காவல் துறையினரை இதைவிட வேறு யாரால் இப்படிப் பாராட்ட முடியும்? கடந்த நவம்பர் முதல் வாரத்தில், திருச்சி, தஞ்சை, நாகையில் மட்டும் ஒரே நாளில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது. அதுவும் இந்த ஆட்சியின் சட்டம், ஒழுங்குக்கு ஒரு பாராட்டுத்தான்?
மதுரை நெல்பேட்டை, "போலீஸ் - அவுட்போஸ்ட்""க்கு எதிரே, ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அக்பர் அலியின் காரில் மர்ம நபர்கள் வைத்த குண்டு வெடித்தது. நல்லவேளையாக கார் அப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் யாரும் சாகவில்லை. இதுவும் சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது என்பதற்கான அடையாளம்தான்! புழல் சிறையிலே மொத்தம் 1,250 கைதிகளை வைக்க முடியும். ஆனால் அங்கே இப்போது இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 2,381. அதிலே குண்டர்கள் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருப்போர் 1,061 பேர். தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு இதுவும் ஓர் உதாரணம் அல்லவா?
தே.மு.தி.க. சார்பில் கடலூரில் கடந்த நவம்பர் மாதத்தில் பொதுக்குழு தீர்மானங்களை விளக்குவதற்காக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியபோது போலீசார் சட்டம், ஒழுங்கைக் காரணமாகக் காட்டி அனுமதி மறுத்துவிட்டனர். அதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்த ரத்தில், நீதிபதி சசிதரன் சட்டம், ஒழுங்கைக் காரணம் காட்டி பொதுக் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தது தவறானது. பொதுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு தருவது போலீசாரின் கடமை; எனவே பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தரவேண்டுமென்று உத்தரவிடப்பட்டது. வகுப்புவாத மோதல்கள் இல்லாத மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்கிறார் ஜெயலலிதா. ஆனால் இவர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் 2011 செப்டம்பர் 11ஆம் தேதியன்று பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு சம்பவமே நடைபெற்று 6 பேர் கொல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் 23-12-2011 அன்றே உத்தரவிட்டும் கூட, சி.பி.ஐ. இதனை விசாரிக்கவில்லை. மதுரை மாவட்டத்திற்குள் டாக்டர் ராமதாஸ் அவர் களை நுழையக்கூடாது என்று அந்த மாவட்ட ஆட்சியர் ஓர் உத்தரவு பிறப்பித்தார்; கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் அந்த மாவட்டத்திற்குள் அவரை நுழையக் கூடாது என்று ஆணை பிறப்பித்தார்; விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல். திருமாவள வனை விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது; அதுபோலவே தர்மபுரி மாவட்டத்திற்கே 144 தடை என்றெல்லாம் இந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு, ஜனநாயக நடவடிக்கை கள் நசுக்கப்பட்டதும், சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கான அடையாளங்கள்தானா?
கடந்த சில மாதங்களில் நடைபெற்ற பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட ண்களின் பட்டியலைப் பார்த்தால்; வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்து ஆண்டியப்பன் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி காயத்ரி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை; சிவகிரியில் நந்தினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டுக் கொலை; சைதாப்பேட்டையில் விஜயா என்ற பெண்ணின் சடலம்; தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் 13 வயது சிறுமி, பள்ளி மாணவி புனிதா கற்பழிக் கப்பட்டு கொலை; நாகை மாவட்டத்தில் 11 வயது தலித் இனத்தைச் சேர்ந்த சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து கற்பழிப்பு; விருத்தாசலத்தில் மணிமுத்தாறு நதிக்கரையில் சுகந்தி என்கிற இளம் பெண் கற்பழிப்பு; சிதம்பரம் அருகில் மஞ்சக்குழி கிராமத்தில், சந்தியா என்கிற இளம்பெண் கற்பழிக்கப்பட்டு 3வது மாடியிலிருந்து வீதியிலே எறியப்பட்டாள்; தர்மபுரியில் அரூர் தாலுக்காவில் தராவலசை கிராமத்தில் மேனகா என்கிற இளம்பெண் திருமணமானவர், கற்பழிக்கப்பட்டு படுகொலை;
தூத்துக்குடி மாநகரில், மாதாநகர் 2வது தெருவில் மாரியம்மாள் என்கிற இளம்பெண் கணவனைப் பிரிந்து 3 குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார், விடியற்காலையில் வீடு புகுந்து மாரியம்மாள் கற்பழிப்பு; விழுப்புரம் வானூர் ருக்மணிபுரம் பள்ளி மாணவி கல்கி என்பவள் கற்பழிக்கப்பட்டு சவுக்குத்தோப்பில் பிணமாகத் தொங்கவிடப்பட்டாள்; உடுமலையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்; சிறுமி அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்தாள்; நாமக்கல்லில் 18 வயது இளம்பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நான்கு பேர் கொண்ட கும்பலால் கற்பழிப்பு; வேலூர் மாவட்டம், ஆர்க்காடு அருகில் திமிரி என்கிற ஊரில் அபிநயா என்கிற 17 வயது பெண், அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாக, கற்பைக் காப்பாற்றிக் கொள்ள க்குளித்து தற்கொலை; சென்னை, பொழிச்ச லூரில் பிரேமலதா என்ற பெண் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு காட்டில் பிணமாக வீசப் பட்டுக் கிடந்தாள்; திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் திருமணமான மீனா என்கிற இளம்பெண் தன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டு கற்பழிப்பு; ஒரத்தநாடு, புதூரில் 6ஆம் வகுப்பு படித்துவந்த 11 வயது சிறுமி, ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது கற்பழிப்பு; ராணிப்பேட்டை அருகில் சுடுகாட்டில் சிறுமி கொலை செய்யப்பட்டு, எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார்; என்று தொடர்ந்து கட்டுக்கடங்காமல், பெண்கள் மீதான கொடுமைகள் டைபெற்று வருகின்றன. இதுதான் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் பெருமைமிகு தமிழ் மாநிலமா?
16.2.2013 அன்று சேலம் நாடாளுமன்ற கழகச் செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்காகவும், இக்கூட் டத்தில் கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிடவும், காவல்துறை அனுமதி வேண்டி 30.1.2013 அன்று மனு கொடுக்கப்பட்டது. அனுமதி கொடுக்கவில்லை. தி.மு.க. சார்பில் சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத் தில் வழக்குத் டரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி புவனேஸ்வரி, "தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தை ரும் தடுக்கக்கூடாது"" என உத்தர விட்டார். செயல்வீரர்கள் கூட்டம் நடத்துவதற்கான முறையான அனுமதி பெறப்பட்டு விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதால், கூட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற வல்துறையின் கோரிக்கையையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இது முதல் நிகழ்ச்சியல்ல; 15-12-2012 அன்று கரூரில் கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் பங்கேற்கவிருந்த கூட்டத்திற்கும் அ.தி.மு.க. அரசு தடை விதித்து, அதனை எதிர்த்து 11-12-2012 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மனுவினை விசாரித்த நீதியரசர் சு. சுப்பையா அவர்கள் அதே இடத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். 28-12-2012 அன்று தூத்துக்குடியில் நாடாளுமன்றத் தொகுதிச் செயல்வீரர்கள் கூட்டத்தில் தளபதி ஸ்டாலின் கலந்து கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கேயும் ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், கூட்டம் நடத்து வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் நீதிமன் றத்தில் முறையிட்டு, நீதியரசர் ரவிச்சந்திர பாபு வர்கள் அளித்த தீர்ப்பில், "அனுமதி கோரிய இடத்தில் ஏற்கனவே பல துக்கூட்டங்கள் நடத்திட அனுமதிக் கப்பட்டுள்ளது. அந்த இடம் பொதுக்ட்டங்கள் நடத்துவதற்கு மட்டுமே என மாநகராட்சியால் ஒதுக்கப்பட்ட இடம். மனுதாரரின் கோரிக்கையினை மறுப்பதற்கான எந்த முகாந் திரமும் இல்லை"" என்றுதெரிவித்து; குறிப்பிட்ட இடத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்திட அனுமதி அளித்தார். ஜனநாயகத்தின் அடிப்படையான பேச்சுரிமையையும், கூட்டம் கூடும் உரிமையையும் மறுக் கும் இந்த நிகழ்வுகளெல்லாம் சட்டம், ஒழுங்கை பராமரிக்கின்ற இலட்சணமா? கழக நிகழ்ச்சிகள் மாத்திரமல்ல; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சி க்கு அனுமதி தரப்பட்டதா? நடிகர் விஜய் பிறந்த நாள் கூட்டத்திற்கு அனுமதி தரப்பட்டாதா ? ஏன்? """"டெசோ"" மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டதா? கிடையாது. நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற முடிந்தது. இதுதான் சட்டம், ஒழுங்கு சீராக இருப்பதற்கான ஆதாரங்களா? திருக்கோவிலூர் அருகில் பழங்குடியினப் பெண்கள் நான்கு பேரை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசார் மீது புகார் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. இடம் புகார் அளித்தார். """"பாலியல் பலாத்காரம் செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை, ந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டு""மென்று உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. """"சாதாரண மக்க ளுக்குப் பொருந்தக்கூடிய சட்டத்தை, போலீசாருக்கு மட்டும் ஏன் அமல்படுத்தவில்லை? நஷ்ட ஈடு கொடுப்பதன் மூலம், இழந்த ற்பைத் திரும்பப் பெற முடியாது, சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்"" என்று முதல் பெஞ்ச் தெரிவித்தது. சட்டம், ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டதற்கு மற்றுமோர் உதாரணம் இது. "தினத்தந்தி" செய்தி - "சென்னையில் ஒரே மாதத்தில் 16 கொலைகள்"" என்ற தலைப்பில் ""சென்னையில் ஒரே மாதத்தில் 16 கொலைகள் நடந்துள்ளன. இதில் 5 கொலையில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நுங்கம்பாக்கம் வங்கிப் பெண் அதிகாரி கொலையில் துப்புத் துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்"" என்றெல்லாம் செய்தி வந்ததும், சட்டம், ஒழுங்கைச் சிறப்பாகப் பராமரிப்பதற்கான அடையாளம்தான் போலும்! ஜெயலலிதாவின் பொறுப்பிலுள்ள போலீசாருக்கு நீதிமன்றம் அளித்த மற்றொரு சான்றிதழ் இதோ :- The Madras High Court Bench here came down heavily on police officers “who think they are a law unto themselves just because they are vested with certain powers under the Code of Criminal Procedure and that the common people are at their mercy” (The Hindu 14-2-2012) காவல் துறை எந்த அளவிற்குச் செயல்படுகிறது என்பதற்கு """"போலீஸ் பக்ருதீன்"" கைதை பெருமையாக முதலமைச்சர் பேசியிருக்கிறார். ஆனால் பக்ருதீன் யாரைக் கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்று காவல் துறை சொல்கிறதோ, அதே காவல் துறை கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தக் குறிப்பிட்ட நபரை கொலை செய்தது வேறு சிலர் என்று கூறி, அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துச் சிறையிலே தள்ளியதே, அதுவும் ஜெயலலிதா தலைமையிலே உள்ள காவல் துறைதானே? இந்த முரண்பாட்டுக்கு யார் பாராட் டுரை வழங்குவது? அந்தத் தவறுக்காக காவல் துறையிலே பணியாற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கிறார்களே; இதில் அந்தத்
துறைக்குப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் அல்லவா விளக்கம் தரவேண்டும்? பாராட்டு மட்டும் முதல் அமைச்சருக்கு; தண்டனை என்றால் கீழே உள்ள அதிகாரிகளுக்கா? மேலும் முதலமைச்சர், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் சமூக விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க முழு சுதந்திரம் அளிக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் உண்மையில் காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் சமூக விரோத சக்திகளை அல்ல, தங்களுக்குப் பிடிக்காதவர்களையும், பிடிக்காத அரசியல் கட்சி களின் தலைவர்களையும்தான் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறார்கள். அதற்கான அடையாளம் தான் கணக்கற்ற "அவதூறு வழக்குகள்"!
இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியாகவோ, முறையாகவோ பராமரிக்கப்படவில்லை என்பதற்கான சம்பவங்களை எழுத வேண்டுமேயானால் நேரமும் போதாது, பத்திரிகையில் இடமும் இருக்காது. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா, அது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு என்றாலும் – ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதில் அளிப்பதாக இருந்தாலும் தனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தமிழகம் பெருமைமிகு மாநிலமாகத் திகழ்கிறது என்று சொல்லிக் கொள்வதும், அதைத் தமிழக நாளேடுகள் எல்லாம் கொட்டை எழுத்துக் களில் வெளியிடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஒரே பொய்யை, திரும்பத் திரும்பச் சொல்லி விளம்பரப்படுத்திக் கொள்வதாலேயே, அந்தப் பொய் மெய்யாகிவிடுமா?
ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு இருந்தது என்பதற்கு ஆதாரபூர்வ மாக விளக்கம் கூற வேண்டுமேயானால், இந்த இரண்டரை ஆண்டுகளில் ஏடுகளிலே வெளிவந்த கொலைகள் மாத்திரம் 3,231 - கொள்ளைகள் 1,170 - வழிப்பறி மோசடிகள் 691 – செயின் பறிப்புகள் 652! இதுதான் ஜெயலலிதா ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நன்கு பராமரிக்கப்படுவதற்கான இலட்சணம்!
No comments:
Post a Comment