பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் தானா
ஜெயலலிதா? (22.12.13) தி இந்து தமிழ் நாளிதழில் மூத்த பத்திரிக்கையாளர், சமூக-அரசியல் விமர்சகர் ஞானி அவர்கள்.
ஜெயலலிதா ஒரு முதல்வராக எப்படிச் செயல்பட்டிருக்கிறார், ஒரு கட்சித்தலைவராக எப்படி செயல்பட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது, அவர் கட்சியில் துளியும் ஜனநாயகம் இல்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய அதிமுக்கியமான அம்சம். காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிக் கட்சிகள் எல்லாவற்றிலும் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கவும் விவாதிக்கவும் இடம் இருந்துகொண்டே இருப்பதுதான் அவற்றை உயிரோடு வைத்திருக்கின்றன. ஜெயலலிதாவின் அதிமுக அப்படிப்பட்ட கட்சி இல்லை. ஒரு தனியார் முதலாளி நடத்தும் நிறுவனம்போல, முதலாளியைத் தவிர வேறு யாருக்கும் எதையும் சொல்ல உரிமையற்ற இடமாகவே அது இருக்கின்றது.
இப்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விசயத்தை எடுத்துச்செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலே தெரியாத நிலை. முதல்வர் கவனத்துக்குப் பிரச்சினையை எடுத்துச்செல்வது என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தன் குடிமக்களுடன் எந்தத் தகவல் தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என்ன நிர்வாகம் செய்ய முடியும்? அமைச்சர்கள் முதல் IAS அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி, சங்கடமான செய்திகளை பேசத் தயங்கும் சூழலில் தன் மக்களின் நிலைபற்றி, நிர்வாகத்தின் குறைகள்பற்றி அவருக்கு யார் தகவல் சொல்வார்கள்? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதல்வர் நமக்கு எதற்கு என்பது தான் என் கேள்வி.”
இப்படிப்பட்ட அணுகுமுறையில் இருக்கும் ஒருவரால் இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், பல மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறான சிக்கல்கள் உள்ள ஒரு பெரிய நாட்டை நிர்வகிக்க முடியுமா? காவல் துறை, உளவுத்துறை, அச்சப்படும் நிர்வாக இயந்திரம், அடிமை மனநிலையுடைய கட்சியினரை மட்டும் கொண்டு ஒரு நாட்டை ஒருபோதும் ஆள முடியாது. 2016-க்குள் ஜெயலலிதாவின் இந்தப் போக்கு மாற்றம் அடைந்து ஜனநாயகப்பூர்வமான, மக்களிடம் செவிகளுடைய ஒரு முதல்வராக செயல்பட்டு அவர் தன்னை நிரரூபித்துக்கொண்டால் மட்டுமே அவரைப் பிரதமர் பதவிக்கும் தகுதியானவர் என்று ஏற்க முடியும்.

No comments:
Post a Comment