வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



20/11/2013




திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் ஆ.ராசா பேச ஆரம்பித்தாலே டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் சிந்தனைகள் அருவி போல கொட்டும்.
இதனாலேயே அவர் பேச்சை கேட்க ஆரம்பித்தால்..அமர்ந்த இடத்தை விட்டு நகராமல் வாயில் ஈ போவது கூட தெரியாமல் என்னை மறந்து அமர்ந்ததுண்டு... பெரியார் குடியரசு களஞ்சியம் நூல் வெளியீட்டு விழாவில் அந்த தகத்தாய கதிரவன் பேசிய ஒரு உரையை சற்று ம...ுன் படித்தேன்... அந்த உரையில் அண்ணன் ஆ.ராசா இப்படி கூறுகிறார்,

பெரியார் எல்லோருக்கும் தேவைப்படுகிறார் என்பதை கட்சி மனமாச்சரியங்களைத் தாண்டி, அர்த்தமுள்ள இந்து மதம் என்று ஆறு, ஏழு புத்தகங்களை எழுதி குவித்த கண்ணதாசன் பாடினார் பெரியாரை பற்றி. எழுதினார் பெரியார் மறைந்த பொழுது:

“சரித்திரம் மறைந்த செய்தி
தலைவனின் மரணச் செய்தி
விரித்ததோர் புத்தகத்தின் வீழ்ச்சியை கூறும் செய்தி
நரித்தனம் கலங்கச் செய்த நாயகனின் மரண செய்தி
மரித்தது பெரியார் அல்ல; மாபெரும் தமிழர் வாழ்க்கை’’

என்று முடித்தார் கண்ணதாசன். இந்து மதத்தைத் தோண்டி, தோண்டி ஆராய்ந்த கண்ணதாசனுக்கே தெரியும் மரித்தது பெரியார் அல்ல. மாபெரும் தமிழர் வாழ்க்கை என்று!

எனவே யாரெல்லாம் தமிழர்களோ அவர்களுக்கு வாழ்க்கை வேண்டுமானால், பெரியாரைத் தூக்கிப் பிடிப்போம். பெரியார் இல்லாமல் ஒரு வாழ்க்கை வெறுமை. அதுதான் இந்த நூல் வெளியீட்டு விழாவில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கை. அந்த பெரியார் கொள்கையின் அடையாளமாக இருக்கின்ற ஆட்சியினுடைய தலைவர் கலைஞரைப் பின்பற்றுவோம்; இயக்கத்தினுடைய தலைவராக இருக்கின்ற ஆசிரியர் அவர்களைப் பின்பற்றுவோம் என்று கூறி வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்! என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்.

இப்படி அந்த உரை முடிகிறது...இதில் என்னை மிக மிக ஈர்த்தது அந்த இறுதி வரிகள், பெரியார் கொள்கையின் அடையாளமாக இருக்கின்ற ஆட்சியினுடைய தலைவர் கலைஞரைப் பின்பற்றுவோம்; இயக்கத்தினுடைய தலைவராக இருக்கின்ற ஆசிரியர் அவர்களைப் பின்பற்றுவோம் என்று கூறி வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்! என்று முடிக்கிறாரே...அதுதான் தகத்தாய கதிரவன் ராசா!!!

No comments:

Post a Comment


Labels