வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



19/10/2013

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து 

கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன் என தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

சமூக வலைத் தளங்கள் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தலைவர் கலைஞர் அளித்த பதில்கள்:

கேள்வி:- கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்பட்டு தற்போது உள்ள ஆட்சியில் மக்களுக்கான காப்பீடு திட்டம் எந்த நிலையில் உள்ளது?

பதில்:- எல்லாத் திட்டங்களுமே நிலைகுலைந்து போய் விட்டன.

கேள்வி:- இந்திய கிரிக்கெட் வீரர், உலக கிரிக்கெட் ஜாம்பவான் என்று அனைவராலும் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 200ம் டெஸ்டிலிருந்து ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளார், கிரிக்கெட் ரசிகராக நீங்கள் இவருக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்:- வாழ்த்துக்கள்.

கேள்வி:- தியாகுவின் உண்ணாவிரதத்தை முதல்வர் அலட்சியப்படுத்திவிட்டாரே?

பதில்:- எதிர்பார்த்ததுதான்.

கேள்வி:- ஏற்காடு தேர்தலில் ஆணைய செயல்பாடு எப்படி இருக்கிறது?

பதில்:- தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி:- வரும் தேர்தலில் ஊடகத்தின் பங்கு எப்படி இருக்கும்?

பதில்:- இப்போது இருப்பது போலத்தான் இருக்கும்.

கேள்வி:- இளைஞர்களின் நம்பிக்கையின்மை, வன்முறைக்கு அரசின் நடவடிக்கைதான் காரணம் என்கிறார்களே?

பதில்:- பொதுவாக மக்களை நல்வழியில் எடுத்துச் செல்கின்ற பொறுப்பு அரசுக்கு உண்டு, அந்தப் பொறுப்பை தட்டிக்கழித்தால் இளைஞர்கள் மாத்திரமல்ல எல்லா மக்களுமே அவதிப்படுவார்கள்.

கேள்வி:- அமைச்சர்கள், அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவது, தவறுகள் அதிகம் நடப்பதாக அரசே ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதாக எடுத்து கொள்ளலாமா?

பதில்:- நிச்சயமாக.

கேள்வி:-தெலங்கானா பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. உங்கள் கருத்து?

பதில்:- காலத்தில் செயல்படாததால் ஏற்பட்ட குழப்பங்கள்.

கேள்வி:- டெசோவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

பதில்:- பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்வி:- 2 நாட்களுக்கு முன்பு சென்னையும் இருளில் மூழ்கி ஸ்தம்பித்ததே? மின் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்தது போல் தெரியவில்லையே, இதனை பற்றி உங்களது கருத்து?

பதில்:- ஜெயலலிதா அரசு நிர்வாகத்தில் தமிழ்நாடே கறுத்து கிடக்கிறது, இதில் நான் என்ன புதிதாக கருத்து சொல்ல.

இவ்வாறு தலைவர் கலைஞர் பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment


Labels