வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



22/10/2013

அண்ணா பிறந்தநாள் விழா முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டியில் பரிசுகளை அள்ளிய வி.களத்தூர் மாணவிகள்! 

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அண்ணாவின் 105வது பிறந்தநாளையொட்டி மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக அண்ணாவின் 105வது பிறந்த நாள் விழாவையொட்டி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா பாலக்கரையிலுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராசா அலுவலகத்தில் நேற்று நடந்தது.
விழாவிற்கு மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் மாரிக்கண்ணன் தலைமை வகித்தார். நகர அமைப்பாளர் அப்துல்கரீம் வரவேற்றார். இளை ஞரணி துணை அமைப்பாளர்கள் கரிகாலன், காட்டுராசா, அன்பழகன், ரசூல்அஹமது, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் சுப்ரமணியம், பிரபாகரன், சிவசங்கர் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
மாநில இளைஞரணி துணைச்செயலாளர் சுபாசந்திரசேகர், தலைமை பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ், மாவட்ட செயலாளர்கள் பெரம்பலூர் துரைசாமி, அரியலூர் சிவசங்கர் ஆகியோர் பேசினர். ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி ராஜேந்திரன், ராஜ்குமார், தங்க ராசு, மாவட்டதுணைசெயலாளர் வெங்கடாசலம், பொரு ளாளர் ஜெகதீசன், நகரச்செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில்,
கட்டுரைப் போட்டி யில் முதல் 3இடங்களை பெற்ற வி.களத்தூர் நஜ்முனிஷா, லெப்பைக்குடிகாடு பெமினா, வி.களத்தூர் சபின்தாஜ் ஆகியோருக்கு பரிசுத் தொகை யுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வி.களத்தூர்DMK இணையதளம்  சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்


No comments:

Post a Comment


Labels