வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



29/10/2013

ஜெயலலிதாவின் துரோகத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்!


"அம்மா மடல்" என்று சும்மா யாரோ எழுதிக் கொடுத்ததை, ஜெயலலிதா அறிக்கை என்று 17.10.2013ல் நாளிதழ்களில் வெளிவந் துள்ளது. அ.தி.மு.க. துவக்க நாள் விழா அறிக்கையில் எம்.ஜி.ஆர்.புகழ் பற்றியோ, சாதனைகள் பற்றியோ குறிப்பிடாமல், தலைவர் கலைஞரை வசைபாடியும், தி.மு.க. வுக்கு நிரந்தர முடிவு கட்டுவேன் என்றெல்லாம் பிதற்றியுள்ளதை தந்தை பெரியார் அவர்களின் மொழியில் கூறுவதென்றால், வாயால் சிரிக்க முடியாது வேறு வாயால்தான் சிரிக்க முடியும். எம்.ஜி. ஆர். கட்சியை துவக்கிய போது ‘நதி எங்கே போகிறது’ என்று திசை தெரியாமல் நடித்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஜெயலலிதாவை மீண்டும் எம்.ஜி.ஆரிடம் ஆர்.எம். வீரப்பன் அவர்கள் அழைத்த வந்து நடந்ததை மறப்போம் மண்ணிப்போம் என்று பெறுந் தன்மையுடன் எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதாவை சேர்த்து வைத்தார்.

எம்.ஜி.ஆர் நோயுற்ற போது, எம்.ஜி.ஆரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கி, ஜெயலலிதாவை முதலமைச்சராக நியமிக்கும்படி, அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியை வற்புறுத்தி எம்.ஜி.ஆர்க்கு துரோகம் செய்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்க்கு மோரில் விஷம் கலந்து கொடுத்து விட்டார் ஜானகி என்று கூசாமல் பொய் சொன்னவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் எம்.ஜி. ஆரின் வாழ்க்கைத்துணைவியார் திருமதி. ஜானகி அம்மையார் முதல் வராக பொறுப்பேற்றதை சகிக்க முடியாத ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். துவக்கிய கட்சியை இரண்டாகப்பிளந்து, எம்.ஜி.ஆர். வாழ்க்கை துணைவி திருமதி.ஜானகி அம்மை யாரின் ஆட்சியை கலைக்க துணை போன துரோகி ஜெயலலிதா.

1991 மே திங்கள், முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியின் துயர சம்பவத்தை பயன்படுத்தி, ஆட்சிக்கட்டிலில் ஏறிய ஜெயலலிதா, 1996ல் நடைபெற்றத்தேர்தலில் பர்கூர் தொகுதியில், சிறிய மருந்துக்கடை நடத்தி வந்த ‘சுகவனத்திடம்’ 8000க்கும் அதிகமான வாக்குகள் வித்யாசத்தில் தோற்றதும் ஜெயலலிதா, கட்சி வெறும் 4 இடங்களே பெற்றதும் மறந்து விட்டது போலும்.

1991 ஆட்சியில் முறை கேடாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்தார் என்பதற்காக 1996ல் அவர் மீது தமிழக அரசு கொடுத்த சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் இன்று வரை மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா, எதை திண்றாள் பித்தம் தெளியும் என்று நீதிமன்ற படிகளில் நின்று கொண்டு கிண்ணாரம் பேசுகிறார்.

அது மட்டுமின்றி, பிறந்த நாள் பரிசு 2 கோடி மோசடி, 2001ம் ஆண்டு தேர்தலில் விதிமுறைகள் மீறி, 4 தொகுதிகளில் போட்டியிட்ட வழக்குகளில் சிக்கி மீள முடியாமல் உள்ள ஜெயலலிதா, 17.10.2013 அறிக்கையில் தலைவர் கலைஞருக்கும் தி.மு.க.வுக்கும் நிரந்தர முடிவு கட்டுவேன் என அபத்தமாக அறிக்கை விட்டுள்ளார்.

தி.மு.க. ஆணிவேரை அசைக்க முயன்று தோற்றப்போனவர்கள் பலர். தலைவர் கலைஞரையும் தி.மு.க.வையும் எத்தனை ஜெயலலிதாக்கள் முயன்றாலும் வீழ்த்த முடியாது. 17.10.2013 ஜெயலலிதா அறிக்கையில் எம்.ஜி.ஆர். பெயர் 9 இடங்களிலும், தலைவர் கலைஞரின் பெயர் 14 இடங்களிலும் இடம்பெற்றுள்ளதை அறிந்தால், எம்.ஜி.ஆரைவிட தலைவர் கலைஞரே ஜெயலலிதா வின் மனதில் வீற்றிருக்கிறார். தலைவர் கலைஞரையும் தி.மு.காவையும் அழிப்பேன், ஒழிப்பேன் என்று கூறுவது வெட்கக்கேடானது.

No comments:

Post a Comment


Labels