வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

22/03/2016
  
ஸ்டாலின் அவர்கள் ”The Hindu” ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள அசத்தல் பேட்டி;
· எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பலமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு தோற்றத்தின் பின்னனியில் இருந்து, பல கட்சிகளை இயக்குவது முழுக்க முழுக்க அதிமுகதான். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அராஜக அதிமுக அரசை வீழ்த்தக் கூடிய ஒரே சக்தி திமுக மட்டுமே.
· தமிழகத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் ஐ.டி செக்டார் வரையுள்ள அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி வகுக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக மட்டுமே என்பதை, ”நமக்கு நாமே” பயணத்தில் அனைத்துத்தரப்பு மக்களும் தளபதி அவர்களுக்கு அளித்த வரவேற்பு உணர்த்தியுள்ளது.
· சமூகநீதி, பெண்கள் உரிமை ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்று, இன்றைக்கு தமிழக மக்கள் சுயமரியாதையுடன் வாழ வழி வகுத்து, ஆலமரம் போல் பரந்து விரிந்து நிற்கும் திராவிட இயக்கத்தினால் அரசுப் பதவிகள், அதிகாரங்களை அனுபவித்து முழுமையாக பலனடைந்து, அதன் விழுதுகளாக இருக்க வேண்டியவர்கள், இன்று அதே இயக்கத்தை ஒடுக்க நினைப்பது கண்டனத்திற்குரியது.
· மக்கள் மன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்வதில் திமுக என்றைக்கும் பின்வாங்கியதில்லை. அதே நேரத்தில், உள் நோக்கத்துடன் சில எதிரிகள் மேற்கொள்ளும் பொய்யான பிரச்சாரங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
· திமுகவின் அடுத்த இலக்கு: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு, ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்த வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி ! என்பது தான்
கரைதட்டி நிற்கும் சிதிலமான கப்பலாக மாறியுள்ள தமிழக அரசை, இக்கணத்தில், உடனடியாக கரை சேர்க்கக் கூடிய சக்தியும், ஆற்றலும் கொண்ட இயக்கம் திமுக மட்டுமே என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர்.முடியட்டும் அராஜக அதிமுக ஆட்சி! விடியட்டும் வளர்ச்சி தரும் திமுகழக ஆட்சி!
 

No comments:

Post a Comment

Labels