வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

22/03/2016

கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் முரண்பாடு என திரிக்க படாதபாடுபடும் வைகோ: மனுஷ்யபுத்திரன் கண்டனம்

Manushyaputhiran slams Vaiko
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கும் பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கும் முரண்பாடு என திரிக்க மதிமுக பொதுச்செயலர் வைகோ படாதபாடுபடுகிறார் என்று திமுக பேச்சாளரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமது ஃபேஸ்புக் பக்கத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ளதாவது: View Photosவைகோ இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ''கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் முரண்பாடு, கட்சி கலைஞரின் கட்டுப்பாட்டில் இல்லை'' என்றெல்லாம் சற்று முன் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக புளுகினார்.ஸ்டாலின் அப்படி என்ன சொல்லிவிட்டார்?விஜயகாந்த் கூட்டணிக்கு வருவார் என நம்புவதாக கலைஞர் சொன்னது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு ‘' இது புதிய அழைப்பு இல்லை. ஏற்கனவே கூட்டணிக்காக விடுத்த அழைப்பின் அடிப்படையில்தான் கலைஞர் சொல்லியிருக்கிறார்.'' என்று சொல்கிறார். இதில் எங்கிருந்து வந்தது பிளவு? கலைஞரும் நம்பிக்கைதான் தெரிவித்தாரே தவிர புதிய அழைபு எதையும் விடுக்கவில்லையே.ஸ்டாலின் என்ன தேமுதிக கூட்டணி தேவை இல்லை என்று கலைஞர் கருத்துக்கு மாறாக சொன்னாரா? ''அழைத்தோம், வருவதும் வராததும் அவரவர் விருப்பம்'' என்று சொல்வதில் என்ன கட்சிக்குள் முரண்பாடு வந்துவிட்டது?'விஜயகாந்த் தலைமையை ஏற்போம்' என்றும் 'ஏற்கமாட்டோம்' என்றும் மநகூ தலைவர்கள் ஆள் ஆளுக்கு மாற்றி மாற்றி தினமும் பேசிக்கொண்டிருக்கிறர்கள். மநகூ இப்போது யார் கட்டுபாட்டில் இருக்கிறது என்பதை முதலில் சொல்லுங்கள்.வைகோ அவர்களே , திமுகவின் தலைமை, கட்டுக்கோப்பு பற்றி பேசுகிற அளவுக்கு எப்போது டெவலப் ஆனீர்கள்?மதிமுக என்ற கட்சி இப்போது உங்களிடம் இருக்கிறது என்று இன்னும் நம்புகிறீர்களா? ஆனால் ஜெயலிதாவிற்கு ஊழியம் செய்வதற்காக அம்மணமாக தெருவில் நின்று தினமும் கூவிக்கொண்டிருக்கும் நீங்கள் கலைஞருக்கும் ஸ்டாலின் அவர்களுக்கும் பிரச்சினை என்று திரிக்கபடாத பாடுபடுகிறீர்கள்.விஜயகாந்த் திமுக பக்கம் சென்றுவிடக்கூடாது என ஜெயலலிதாவின் மனசாட்சியாக நின்று துடிக்கிறீர்கள்.விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதாக சொன்னபிறகும் அவரை ''தலைமையேற்க வா'' என்று மநகூவினர் கெஞ்சினால் அது கூட்டணி முயற்சி.திமுக விஜயகாந்துடன் கூட்டணிக்கு நம்பிக்கை தெரிவித்தால் அதை கலைஞரின் பலவீனமா? திமுகவின் பலவீனமாக சித்தரிப்பீர்கள். உங்களுக்கு எல்லாம் வெட்கமே கிடையாதா?கடந்த காலத்தில் ஜெயலிதாவை கடுமையாக விமர்சித்துவிட்டு கடைசி நேரத்தில் விஜயகாந்தும் ராமதாசும் அவருடன் சேர்ந்த வரலாறுகள் இல்லையா? ஒன்று கூட்டணி அமையாமல் திமுகவை பலவீனப்படுத்த வேண்டும். அல்லது திமுக கூட்டணி அமைக்க முயற்சித்தால் அதை திமுகவின் பலவீனம் என்று கொச்சைப்படுத்த வேண்டும்.நீங்கள் செய்வதற்கு பெயர் அரசியலா? அருவருக்கத்தக்க இழிவான நாடகம்.. அதிமுக ஆட்சியை அகற்ற எந்த வியூகமும் வகுப்போம். எந்தக் கூட்டணிக்கும் முயற்சிப்போம். திமுகவின் ஒவ்வொரு அசைவின்மீதும் களங்கமும் உள்நோக்கமும் கற்பிக்கும் அற்பத்தனங்கள் கண்டு எள்ளி நகையாடி கடந்து செல்வோம்.இவ்வாறு மனுஷ்யபுத்திரன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்

No comments:

Post a Comment

Labels