வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



04/11/2015






ஆம்பூர்,

தி.மு.க. ஆட்சி அமையும்போது, முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

விடியல் மீட்பு பயணம்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை நேற்று வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்தார். ஜோலார்பேட்டையில் மகளிர் சுயஉதவி குழுவினருடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது அவர், ‘‘ஜெயலலிதா தான் கொடுத்த வாக்குறுதியில், 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்தார். 4½ ஆண்டுகளில் யாருக்காவது மானியத்துடன் கடன் கொடுத்துள்ளார்களா? தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன், முதல் வேலை மதுவிலக்கு தான்’’ என்றார்.

5 சதவீத இடஒதுக்கீடு

வாணியம்பாடியில் ஜல்லிக்கட்டு காளைகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். வாணியம்பாடியில் முத்தவல்லிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி தரவேண்டும் என்று கூறி உள்ளீர்கள். தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

ஆம்பூரில் தோல் தொழில் அதிபர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசியதாவது:-

சுற்றுச்சூழல் பிரச்சினை காரணமாக தமிழகத்தில் தோல் தொழில் நலிவடைந்து வருகிறது. தோல் தொழில் அதிபர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தோல் தொழில் வர்த்தகம் உயர்ந்த நிலையை அடையச் செய்ய வேண்டும்.

தோல் தொழிலுக்கு சாதகமான ஆந்திர மாநிலத்துக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதாகவும், இதனால் 1 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தோல் தொழில் சிறப்பாக நடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment


Labels