வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



31/10/2015

ஊழல் சாம்ராஜ்யத்தில் ஜெயலலிதாவும், சசிகலா குடும்பமும் மூழ்கிக்கொண்டிருக்கிறது: மு.க.ஸ்டாலின் 

ஒரு பக்கம் மக்களை ஏமாற்றுவது மற்றொருமக்கம் சொத்துக்களை வாங்கிக்குவிப்பது இது தான் ஜெயலிதாவின் கொள்கை; ஊழல் சாம்ராஜ்யத்தில் ஜெயலலிதாவும், சசிகலா குடும்பமும் மூழ்கிக்கொண்டிருக்கிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கடந்த 2மாதங்களாக நமக்குநாமே நீண்ட நெடிய பயணம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டஙகளிலும்  குறிப்பாக 234 தொகுதிகளிலும் பயணம் நடத்த திட்டமிட்டபடி, அனைத்துத் தரப்பினரையும், விவசாய பெருங்குடிமக்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள்,  அரசுஊழியர்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள், மகளிர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் குறிப்பாக பொதுமக்களைத் தொடர்ந்து எனது பயணத்தில் சந்தித்து வருகிறேன், நடந்துசென்று, சைக்கிளில், பைக்கில், ஜீப்பில் சென்றும் சந்திக்கிறேன், பல்வேறு அரங்குகளில் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டேன்.   

இதுவரை 24மாவட்டங்களில், 166சட்டமன்ற தொகுதிகளில் நமக்குநாமே பயணம் முடிந்துள்ளது. இன்று தேவர்திருமகன் மரியாதை செலுத்துவதை மரபாகக் கடைபிடித்துவருவதால் இன்று எனது பயணத்திற்கு விடுமுறைவிட்டு தேவர் திருமகனுக்கு மரியாதை செய்துவிட்டு மாலை திருவண்ணாமலை செல்கிறேன். நாளை காலை முதல் தொடர்ந்து பயணம் நடைபெறுகிறது என்றார். 

தொடர்ந்து இன்றைய தினம் ஆங்கில நாளிதழில் ஒன்று சென்னை வேளச்சேரியில் சுமார் 1000 கோடி மதிப்பிலான ஜாஸ்சினிமாஸ் என்ற மல்டிபிளக்ஸ் பில்டிங்கை வாங்கியுள்ளதை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது,  வேளச்சேரியில் 11 திரையரங்குகளைக் கொண்ட மகால், திரையரங்குகள் அமைப்பதால் தொடர்ந்து பல ஆண்டுகளாக காவல்துறையும், அரசும் அனுமதி வழங்காமலிருந்தது. அனுமதி வழங்காததன் சூட்சுமம் தற்போது புரிந்துள்ளது என்றார்.  சசிகலா, இளவரசி குடும்பத்தினரில் சசிகலா யார் என்பது தெரியும் முதல்வர் ஜெயலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலா  முதல்வர் சிறுதாவூர் சென்றாலும், தற்போது கொடநாடில் ஓய்வு எடுக்கும் சூழலிலும் அவருடன் தான் இருப்பார். சசிகலா இளவரசி மற்றும் அவரது குடும்பத்துடன் சேர்ந்து வாங்கியிருப்பதை வெளியிட்டுள்ளது. நான் கூறவில்லை, ஆங்கில பத்திரிகை ஆதாராத்துடன் வெளியிட்டுள்ளது மிகத்தெளிவாக ஏறக்குறைய 600 கோடி முதல் 1000 கோடி வரை மதிப்புள்ள சொத்து வாங்கப்பட்டுள்ளது. 


டாஸ்மாக் சப்ளை செய்யக்கூடிய மிடாஸ் இயக்குனர்கள் கார்த்திகேயன், கலியபெருமாள், சிவக்குமாரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 17ம்தேதி அதிமுக தொடங்கிய விழாவை நடத்தியபோது பெரிய நீண்ட அறிக்கையை இப்போதுள்ள முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார், அதில் எனக்கென்று குடும்பம் கிடையாது, தனிப்பட்ட வாழ்க்கை கிடையாது, எனக்கென்று சொத்து கிடையாது, நான்வாழ்வது அதிமுகவிற்காக, மக்களுக்காக வாழ்வதாக மிகப்பெரிய விளக்கம் கொடுத்திருந்தார். சொல்லி இரண்டு வாரத்திற்குள் செய்தி வெளிவந்துள்ளது 600கோடிமுதல் 1000கோடிவரை அவரது உடன்பிறவா சகோதரிகளான சசிகலா இளவரசி குடும்பத்தினர் வாங்கியுள்ளனர்.  ஒரு பக்கம் மக்களை ஏமாற்றுவது மற்றொருபக்கம் சொத்துக்களை வாங்கிக்குவிப்பதுதான் ஜெயலிதாவின் கொள்கையாக உள்ளது. 

1991-96ல் முதல்வராக இருந்தபோது, அதிகாரத்தினைப் பயன்படுத்தி  எப்படியெல்லாமி சொத்துக்களை வாங்கினார்கள், சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்றது.தண்டனை பெற்றார்கள், பதவி பறிபோனது, பிறகு விடுவிக்கப்பட்ட பிறகு தற்போது உச்சநீதிமன்றத்தில் அப்பீல் சென்றுள்ளது வரும் நவம்பர் 24ல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது.   தற்போது 2011-2016க்குள் என்னென்ன வாங்கியுள்ளனர், வாங்கப்போகிறார்கள் என்பது தற்போது மக்களுக்கு வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது.   

சசிகலா இளவரசி மிடாஸ் உள்ளவர்கள் ஜெ.பினாமிகள் என்பது மிகத்தெளிவாக தெரியும் இந்தசொத்துக்களை வாங்க எங்கிருந்து பணம்கிடைத்தது என்பதை மக்களுக்குச் சொல்லியாகவேண்டும், கொள்ளையடித்த பணம், அரசுக்கு வரவேண்டிய பணம், ஊழல் ஊதாரித்தனம் செய்து கொள்ளையடித்துள்ள பணத்தில் தான் இதை வாங்கியுள்ளனர். ஊழல் சாம்ராஜ்யத்தில் ஜெயலலிதாவும், சசிகலா குடும்பமும் மூழ்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாட்டுமக்களுக்கு ஆங்கிலப் பத்திரிகை இன்று தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. மின்சாரவாரியத்தில் ஊழல், விவிமினரல்ஸ் பலகோடி ஊழல், முட்டை வாங்கியதில் பலகோடி ஊழல், குவாரியில் பலகோடிரூபாய் ஊழல், மிடாஸ் பெயரை வைத்துக்கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடக்கூட முடியாத நிலையில் கோடிக்கோடியாக
கொள்ளையடித்து வருகின்றனர். 

இந்த கொள்ளைக்கூடாரத்தில் சசிகலா, இளவரசி, கார்த்திகேயன், டாக்டர் சிவக்குமார், ராஜராஜன், டிடிவி.தினகரன், டிடிவி.சுதாகரன், டிடிவி.பாஸ்கரன், டாக்டர் வெங்கடேஷ் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது  மிகத்தெளிவாக தெரிகிறது. இந்த உண்மைகள் எல்லாம் நாட்டுமக்களுக்கு வெளிவரத்தான் போகிறது என்பதை தெளிவாக தற்போது பத்திரிகைகளிடமும், பொதுமக்களிடமும் துணிச்சலுடன் சொல்கிறேன் என்றார். 

No comments:

Post a Comment


Labels