வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



16/08/2015

ஏமாற்றம், தடுமாற்றம், தோல்விகளை மறைக்கும் ஜெயலலிதாவின் மயாஜால உரை... மு.க.ஸ்டாலின் காட்டம்   
 
     சென்னை : முதலமைச்சர் ஜெயலலிதாவின் சுதந்திர தின உரை ஏமாற்றம், தடுமாற்றம், தோல்விகளை மறைக்கும் மயாஜால உரை என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.இது குறித்து ஸ்டாலின் தனது முகநூலில் கூறியுள்ளதாவது...அ.தி.மு.க. ஆட்சியின் கடைசி சுதந்திர தின உரையான இந்த 69-வது சுதந்திர தின உரையில் ஏமாற்றங்களும், ஐந்தாண்டு கால ஆட்சியின் தடுமாற்றத்தை மற்றும் தோல்விகளை மறைக்கும் யுக்திகளும் நிறைந்த மாயஜால உரையாகவே இருக்கிறது.சமச்சீர் கல்வியை முடக்கி, 200 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட புத்தகங்களை வீணடிக்க முயற்சித்தது. உச்சநீதிமன்றம் குட்டிய பிறகு சமச்சீர் கல்வியை அமல்படுத்திய அரசு 'கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளோம்'' என்று தமாஷ் செய்துள்ளது.அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளை மூடி, ஆசிரியர் நியமனங்களிலும் முறைகேடு செய்த அரசு 'பள்ளிகளை தரம் உயர்த்தியதாக'' வீண் தம்பட்டம் அடித்துள்ளது. கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அம்மா என்று பெயர் மாற்றம் செய்து தங்கள் திட்டங்களாக பாவித்து பப்ளிசிட்டி தேடிவருகிறது.ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூட புதிய மின் திட்டம் நிறைவேற்றவில்லை. ஒரு யூனிட் சூரிய சக்தி மின்சாரம் ரூ 7.01க்கு வாங்க அதானி குழுமத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளது. மின்வெட்டு குறையவில்லை. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 'மின் உற்பத்தியை பெருக்கி இருக்கிறோம்' 'மின்வெட்டை நீக்கி விட்டோம்' என்று திசை திருப்பி பிரச்சாரம் செய்கிறது.ஒரு தொழிற்சாலைகூட புதிதாக வரவில்லை. இருந்த பாக்ஸ்கான் தொழிற்சாலையும் தமிழகத்தில் மூடி விட்டு மகாராஷ்டிராவில் முதலீடு செய்துள்ளது. புதிய தொழில் முதலீடுகள் அறவே தமிழகத்தில் இல்லை. மூன்று முறை உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு தள்ளி வைக்கப்பட்டு விட்டது.85 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு இல்லாமல் காத்திருக்கிறார்கள். இந்த ஆட்சியில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் காத்திருப்பு நிலையங்களாக மாறிவிட்டன. அவற்றுக்கு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காத முதலமைச்சர் ' வேலைவாய்ப்பு தொழில் வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளன' என்று ஆட்சியின் தோல்வியை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைத்து உரையாற்றியுள்ளார்.துறைதோறும் ஒளிவெள்ளம் என்று குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர். இதை அரசு அதிகாரிகளே இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாக பார்க்கிறார்கள். காந்தியவாதி சசிபெருமள் மதுவிலக்குக்காக போராடி உயிர் நீத்தார்- 'இல்லை போலீஸ் இந்த ஆட்சியின் அலட்சியத்தால் கொல்லப்பட்டார்'.மதுவிலக்கை உடனே அமல்படுத்த தி.மு.க. போராடுகிறது, மாணவர்கள் போராடுகிறார்கள், தாய் மார்கள் போராடுகிறார்கள். ஆனால் மதுவிலக்கை அமல்படுத்துவது பற்றி எந்த அறிவிப்பும் சுதந்திர தின உரையில் இடம் பெறவில்லை. குறைந்த பட்சம் வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலாவது மதுவிலக்கு அறிவிக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.மொத்தத்தில் மக்கள் உணர்வுகளுக்கு, ஜனநாயக கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத அரசு அ.தி.மு.க. அரசு என்பதை மட்டுமின்றி, மக்கள் நலனுக்கோ, மாநில வளர்ச்சிக்கோ, உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கோ, மாநில பொருளாதார வளர்ச்சிக்கோ இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் எடுக்கப்போவதில்லை என்பதன் ‘சாட்சி ஆவணம்' தான் முதலமைச்சரின் 69-வது சுதந்திர தின உரை.இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment


Labels