வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

20/05/2015

நீதிபதியின் தப்புக்கணக்கு எப்படி? தலைவர் கலைஞர் புதிய ஆதாரம்.
தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை: மீதம் இருக்கும் தீர்ப்புகள் என்ற தலைப்பில், வார ஏடு ஒன்று அ.தி.மு.க. ஆட்சி பற்றி தலையங்கம் எழுதியிருக்கிறதே? கடந்த ஏழரை மாதங்களில் மாநிலம் முழுவதும் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் முடங்கின. ஏற்கெனவே இருந்த பல திட்டங்கள் நட்டாற்றில் விடப்பட்டன. புதிய கட்டடங்கள் பாதியில் நின்றன. தமிழ்நாடு அரசின் நிதிநிலையோ மிக மோசமானது. எதைக் கேட்டாலும் அம்மா வரட்டும், அம்மா வந்தால்தான் என்றே எல்லா மட்டங்களிலும் சொல்லப்பட் டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பு சொல்லப்பட்டதற்கும், இப்போது மே 11ம் தேதி விடுவிக்கப் பட்டிருப்பதற்கும் இடையிலான 227 நாட்கள் செயல்படாத தமிழ்நாடு அரசாங்கத்தின் கறுப்பு தினங்கள் என்று எழுதியுள்ளது.
இந்தத் தலையங்கம் பன்னீர் செல்வத்தைக் குறை கூறி, அம்மையாரைப் பற்றி எதுவும் கூறப் பயந்து எழுதப்பட்டி ருப்பதைப் போலத் தெரிந்தாலும், 2011ம் ஆண்டு மே மாதத்தில் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் செயல்படாத தமிழ்நாடு அரசாங்கத்தின் கறுப்பு தினங்கள்தான். இதய சுத்தி இல்லாத செயல்பாடுகளே மலிந்த தினங்கள்தான். பொதுப்பணித் துறையில் அனைத்துப் பணிகளுக்கும் 45 சதவீதம் கமிஷனை ஒப்பந்ததாரர்கள் முன்கூட்டியே கட்டிவிடுகிறார்களாமே; யார் யாருக்கு எத்தனை சதவீதம்? தமிழ்நாடு பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர், யார் யாருக்கு எத்தனை சதவீதம் என்பதை ஏடுகளுக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறாரே/ அந்தச் செய்தி தவறாக இருந்திருந்தால், அரசு சார்பில் அப்போதே மறுத்திருப்பார்கள்; ஆனால் இன்றளவும் மறுக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் மேலும் கூறும் போது, இந்தத் துறையில் உள்ள பெரும்பாலான பொறியாளர்கள் மந்திரிக்குக் காசு கொடுக்க வேண்டுமென்று சொல்லியே லஞ்சம் கேட்கி றார்கள்.
இந்த அளவுக்கு ஊழல் பெருகியுள்ள இந்தத் துறையின் அமைச்சரும், முதல்வருமான ஓ. பன்னீர் செல்வத்தையும் சந்திக்க பல முறை முயற்சி செய்தோம். ஆனால் அவர் எங்களைச் சந்திக்கவில்லை. லஞ்சம் கொடுத்த குற்றத்துக் காக எங்களைக் கைது செய்தாலும் பரவாயில்லை லஞ்சம் வாங்கியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டால் போதும் என்று கூறியிருக்கிறார். நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் 8 சதவீதம்தான் என்றும், எனவே தான் அவர் விடுவிக்கப்படுகிறார் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறாரே? நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் வங்கியில் வாங்கிய கடன்கள் ரூ. 10 கோடியை, ரூ. 24 கோடி என்று கணக்கிட்டு, 8 சதவீதம் தான் அவர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களின் மதிப்பு என்று கூறி ஜெயலலிதாவை விடுதலை செய்திருக்கிறார்.
கடன்களின் கூட்டுத் தொகை ரூ. 10 கோடி தான் என்று சரியாகக் கூறியிருந்தால், ஜெயலலிதாவின் வருமான த்திற்கு மீறிய சொத்து 76 சதவீதம் என்பதைப் புரிந்து கொண்டு தண்டனை கொடுத்திருப்பார். மேலும் நீதிபதி குமாரசாமி, தனது தீர்ப்பில், ஆந்திர மாநில அரசு, 13-2-1989ல் வெளியிட்ட ஒரு உத்தரவில் 20 சதவீதம் வரை வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை அரசு அலுவலர் ஒருவர் வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது என்பதை தனது வாதத்திற்கு உதவியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். நாம் அவரைக் கேட்க விரும்புவதெல்லாம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் போது, ஆந்திர மாநில அரசைப் போல தமிழக அரசு அப்படி ஏதாவது ஒரு உத்தரவை எப்போதாவது பிறப்பித்திருக்கிறதா என்பது முக்கியமல்லவா? அப்படியென்றால் எந்தத் தேதியில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது? ஆந்திர மாநில அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவு அந்த மாநில அரசு அலுவலர்களுக்குத் தானே பொருந்தும்? அது எவ்வாறு தமிழ்நாட்டு அலுவலர்களுக்குப் பொருந்தும்?
அது மாத்திரமல்ல சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குவித்த சொத்துக்களின் மதிப்பு 10 சதவீதத்திற்கும் குறைவு என்பதால் ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து, நீதிபதி குமாரசாமி வழங்கியிருக்கும் தீர்ப்பு, 1977ம் ஆண்டில் இருந்த லஞ்ச ஒழிப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், 1977ம் ஆண்டின் சட்டம், 1988ம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது திருத்தம் செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்து விட்டது என்றும், ஆனால் அந்தத் திருத்தச் சட்டத்தில் இந்த 10 சதவீதத்திற்கும் குறைவான அளவில் சொத்துக் குவிப்பு இருந்தால், அதனை அலட்சியப்படுத்தி விடலாம் என்று எந்தக் குறிப்பும் இல்லை என்றும் சுப்பிரமணியம் சுவாமி தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால் ஜெயலலிதாவின் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு என்பது 8 சதவீதம் அல்ல, 76 சதவீதம் என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் சொல்லியிருக்கும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கெல்லாம் பதில் என்ன என்பது உச்சநீதிமன்றத்தில்தான் தெரிய வரும். எந்த ஆண்டில் லஞ்சம் பெற்றிருந்தாலும், எந்தச் சட்டத்தின்படி அது குற்றம் என்றாலும், வாங்கியது ஒரு ரூபாயாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாயாக இருந்தாலும் லஞ்சம் லஞ்சம்தான் ஊழல் ஊழல்தான்.
அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி சசிகலாவும், தினகரனும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்களே?
கண்ணதாசன் எழுதிய பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது இதுதான் அந்தப் பாடல் வரிகள். 1991-1996ம் ஆண்டுகளில், அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது, ஜே.ஜே. தொலைக் காட்சி நிறுவனத்திற்கு சாட்டிலைட் இணைப்புப் பெறுவதற்காக, வெளிநாட்டு நிறுவனத்திற்கு கோடிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்ததாக, மத்திய அமலாக்கத் துறை 1996ம் ஆண்டில் ஜே.ஜே. டி.வி., சசிகலா, தினகரன், பாஸ்கரன் ஆகியோர் மீது 7 வழக்குகள் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைதான சசிகலா, தினகரன் ஆகியோர் காபிபோசா தடுப்புக் காவலில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்தனர். 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி சசிகலா, தினகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவினை ஏற்று, மாஜிஸ்திரேட் தட்சணா மூர்த்தி சசிகலா மற்றும் தினகரன் மீது தனியாகப் போடப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவித்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும் 3 வழக்கு களிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சசிகலா தாக்கல் செய்திருந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்திருக் கிறார். அவற்றின் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது. இவ்வாறு தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Labels