வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

08/03/2015

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம், தெருமுனை பிரசாரம் நடைப்பெறும் இடங்கள்!

 

பெரம்பலூர்,மார்ச்8:
பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞர் எழுச்சிநாள் பொதுக் கூட்டம் மற்றும் தெருமுனைப் பிரசாரம் நடத்தப்படும் இடங்கள்,தேதிகள் குறித்து மாவட்டசெயலாளர் குன்னம் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தி ருப்பதாவது :


பெரம்பலூர் ஒன்றிய திமுக சார்பாக பெரம்பலூர் ஒன்றியத்தில் வரும் 12ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் திமுக இலக்கியஅணிச்செயலாளர் கவிதைப்பித்தன் பேசு கிறார். வேப்பூர் ஒன்றிய திமுக சார்பாக லெப்பைகுடிகாட்டில் 13ம்தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கொள்கைபரப்பு இணைச்செயலாளர் புதுக்கோட்டை விஜயா பேசுகிறார். வேப்பந்தட்டை ஒன்றிய திமுக சார்பாக வேப்பந்தட்டையில் 22ம்தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கொள்கைபரப்பு துணைச்செயலாளர் குத்தாலம்அன்பழகன் பேசுகிறார்.
பெரம்பலூர் நகர திமுக சார்பாக பெரம்பலூரில் வரும் 26ம்தேதி நடக்கும் நிகழ்ச்சியில் தீர்மானக்குழு செயலாளர் சபாபதிமோகன் பேசுகிறார்.
ஆலத்தூர் ஒன்றிய திமுக சார்பாக ஆலத்தூரில் 28ம்தேதி நடக்கும் நிகழ்ச்சியில் கொள்கைபரப்பு துணைச்செயலாளர் இளம்பரிதி பேசுகிறார். வேப்பூர் ஒன்றியதிமுக சார்பாக வேப்பூரில் ஏப்ரல் 19ம்தேதிநடக்கும் நிகழ்ச்சியில் தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் குமரி முத்து பேசுகிறார்.
குரும்பலூர் பேரூர்சார்பாக 17ம்தேதி கடையநல்லூர் இஸ்மாயில், அரும்பாவூர் பேரூர்சார்பாக 25ம்தேதி கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பெருநற்கிள்ளி பேசுகின்றனர்.

No comments:

Post a Comment

Labels