வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



02/03/2015

மு.க.ஸ்டாலினை பாராட்டி புதிய பாடல் கேசட்: ஜெகத்ரட்சகன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்



தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை பாராட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபுவும், இளைஞர் அணி அசன் முகமது அலி ஜின்னாவும் புதிய பாடல் சி.டி.யை தயார் செய்துள்ளனர்.

கவிஞர்கள் பா.விஜய், விவேகா, பழனி பாரதி, யுகபாரதி, நெல்லை ஜெயந்தா உள்ளிட்டோர் எழுதியுள்ள இந்த பாடலுக்கு தாஜ்னூர் இசையமைத்துள்ளார். இந்த பாடல் சி.டி. வெளியீட்டு விழா மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி பெரியார் திடலில் சனிக்கிழமை நடந்தது.

பாடல் சி.டி.யை ஜெகத்ரட்சகன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.

முன்னாள் நீதிபதி கோகுல கிருஷ்ணன், சுப.வீரபாண்டியன், தமிழச்சி தங்க பாண்டியன், பா.விஜய், விவேகா, பொற்கோ, முன்னாள் அமைச்சர் தென்னவன் செங்கை சிவம், காசிமுத்து மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment


Labels