வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



27/02/2015

ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வாங்கிய வாக்குகள் மாற்றம் தெரிவதை காட்டுகிறது தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஸ்ரீரங்கம் தொகுதியில்
திமுக வாங்கிய வாக்குகள்
மாற்றம் தெரிவதை காட்டுகிறது
தளபதி மு.க.ஸ்டாலின் பேச்சு!



 

திருச்சி, பிப். 27:
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுக வாங்கிய வாக்குகள் மாற்றம் தெரிவதை காட்டுவதாக மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஸ்ரீரங்கத்தில் நேற்று திமுக சார்பில் வாக்காளர் களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் பொருளா ளர் மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு பேசியது:
ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வாக்களித் தவர் களுக்கு மட்டு மில்லாமல், வாக்களிக்க தவறியவர் களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். வாக்களிக் காதவர்கள் நிச்சய மாக வரும் கால கட்டத்தில் வாக் களிப்பார்கள் என்ற உணர் வோடு நன்றி தெரிவிக்கிறேன். வெற்றி, தோல்வி பற்றி திமுக என்றைக்கும் கவலைப் பட்டதில்லை.


ஸ்ரீரங்கத்தில் திமுகவுக்கு 55,045 வாக்குகள் கிடைத் தது. இது கடந்த தேர்தலை விட 600 வாக்குகள் அதிகம். இதில் இருந்து மாற்றம் துவங்குகிறது என்பது தெரிகிறது. இடைத்தேர் தலில் வெற்றி பெற்று விட்ட தாக அதிமுகவினர் சட்ட மன்றத்தில் கொக்கரிக்கின் றனர். கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் நடந்த 5 இடைத்தேர்தல்களில் அதி முக போட்டி யிடவில்லை. அப்போது அதிமுக எதிர் கட்சி. ஆனால் இப்போது திமுக எதிர்கட்சி கூட கிடையாது. இந்த அதிமுக ஆட்சி அமைந்த பின் ஏற்காடு இடைத் தேர்தலில் நின்றோம். புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டி யிடவில்லை. ஏனெனில் அந்த தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ விபத்தில் இறந்ததால், அந்த கட்சியை சேர்ந்த ஒருவருக்கே வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் தேர்தலில் விலகுவதாக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக பூஜ்யம் வாங்கியதாக கூறுகின்றனர். 1996, 2004 தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் வென்றது? பூஜ்யம் தானே. ஸ்ரீரங்கத்தில் அதிமுக வெற்றி பெற பணம் தான் பிரதானம். ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை பட்டுவாடா ஆகியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் கூட்டாக சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.66 கோடி சொத்து குவித்தது சதி.அதற்கு பெங்களூரு தனி நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு விதி.
ஜெயலலிதாவுக்கு சதி என்றால் மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் பற்றி ராஜீவ்காந் திக்கு கடிதம் எழுதி எனது பெருமைகளை பயன்படுத்தி, என்னை அவமானப்படுத்தி எம்ஜிஆர் சதி செய்கிறார் என அதில் குறிப்பிட்டார். அதேபோல் ஜானகி அம்மையார், நரசிம்மராவ் சதி செய்வதாக கூறினார். மின்வாரியத்தில் திமுகவுக்கு ஆதரவாக உள்ள அதிகாரிகள் சதி செய்வதால் தான் சீரான மின்சாரம் தரமுடியவில்லை என்றார். இப்படி அவருக்கு சதி என்றால் மிகவும் பிடிக்கும்.
நான்கு நாள் சட்ட மன்றம் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது எதிர் கட்சியான தேமுதிகவை வம்புக்கு இழுக்கும் வகை யில், �சிட்டிசன்� (�குடி�மகன்) என்று குறிப்பிட்டு அதிமுக வினர் பேசினர். அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்கும்படி தேமுதிக கோரி யது. அதற்கு சபாநாயகர் மறுத்தார். ஆனால், தேமு திக துணைத்தலைவர் மோகன்ராஜ் எழுந்து, �குற்றவாளி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா� என்று பேசியதற்காக ஒட்டுமொத்தமாக தேமுதிக எம்எல்ஏக்கள் அனைவரை யும் கூட்டத்தொடர் முழுவ தும் சஸ்பெண்ட் செய்துள் ளனர். இது மிகவும் தவறு என நான் வாதிட் டேன். பின் நான் எனது அறைக்கு சென்றதும், அமை ச்சர் நத்தம் விஸ்வநாதன், �ஸ்டா லின் கேட்டுக் கொண்டதால் அவர்களது தண்டனையை குறைத்து, கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கிறோம்� என்றார்.
மறுநாள் பத்திரிக்கை யில் �ஸ்டாலின் கேட்டதால் தேமுதிக எம்எல்ஏ சஸ் பெண்ட் ரத்து� என செய்தி வெளிவந்ததை பார்த்து போயஸ்கார்டனில் ஜெயல லிதா கொதித்து விட்டார். பிறகு மீண்டும் அனைவரும் சஸ்பெண்ட் என்று கூறினர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்ட போது, �நாங்கள் சஸ்பெண்ட் ரத்து என கூறவில்லையே� என்று நழுவினர்.
சட்டமன்றத்தில் பொய் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தக்கூடாது. உண்மைக்கு புறம்பான என்ற வார்த்தையை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அப்பட்டமாக பொய் சொன்னார்.
மார்ச் 3ம் தேதி போக்கு வரத்துக்கழக தொழி லாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக கம்யூனி ஸ்ட் எம்எல்ஏ ஒருவர் கூறிய தும், �அதற்கு திமுக தான் காரணம்� என்று செந்தில் பாலாஜி பொய் கூறினார். பினாமி முதல்வர் ஓபி, அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழு முன் னேற் றம் அடைந்துள்ளதாக கூறு கிறார். அப்படி கூறுவதற்கு தகுதி இருக்கிறதா. அதிமுக ஆட்சி வந்தால் உதவிக் குழுக்களுக்கு ரூ.10லட்சம் கடன் அளித்து, 25 சதவீதம் மானியம் வழங்கப்படும் என உறுதி மொழி கொடுத் தார். அவர் கூறியபடி எந்த ஒரு மகளிர் குழுவுக்காவது கடன் வழங்கப்பட்டுள்ளதா.
ஜெயலலிதா 3 வருட ஆட்சியில் 110 விதியின் கீழ் ஏராளமான திட்டங்களை கூறியுள்ளார். இந்த விதியில் திருச்சி&சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற் கான எந்த ஒரு முயற்சியும் தற்போது வரை எடுக் கப்படவில்லை. திருச்சியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சிங்கப்பூர் போன்று தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றார். உண்டா, கொட நாட்டில் இருக்கலாம். திருச்சியில் மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. தலைவர் கருணாநிதி மக னாக இருப்பதால் ஆதார மில்லா மல் பேச மாட்டேன்.
திருச்சி மாவட்ட செய லாளர் நேருவுக்கு வாழ்த்து கூற வேண்டும். பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் இன்று (நேற்று) தீர்ப்பு வெளியாகி, விடுதலை செய்யப்பட்டார். என்மீது வழக்கு போடட்டும். காத்திருக்கிறேன். வழக்கு போட்டால் குற்றப் பத்தி ரிகை வேண்டாம். வாரண்ட் நகல் வேண்டாம். நானே நேரிடையாக வருகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் 1,27,500.98 கோடி அளவிற்கு திட்டங்கள் அறிவிக்கப் பட்டது. இதில் எந்த திட்டத்தை நிறைவேற்றினர். இந்த மேடைக்கு பக்கத்தில் ஒரு மேடை போட்டு விவாதிக்க தயாரா.
திமுக ஆட்சியில் தொழில்துறை 2 முதல் 3வது இடத்தில் இருந்தது. திமுக ஆட்சியில் துவங்க ப்பட்ட ஹுண்டாய் நிறு வனம் தற்போது மூடப் பட்டுள்ளது. அதிமுக ஆட் சிக்கு வந்தால் மின்தட்டுப் பாடு இருக்காது என கூறப் பட்டது. 4 வருட ஆட்சியில் தமிழகத்தில் 1 மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்தது உண்டா.
தாது மணல் கொள்ளை குறித்து அப்போதைய முதல் வர் ஜெயலலிதா ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து விசாரிக்க உத்தர விட்டார். அந்த அதிகாரி நேர்மையான வர். அவர் விசாரணை அறிக்கையை ஜெயல லிதாவிடம் அளித்தார். அது மூடி மறைக்கப்பட்டது.
பினாமி ஓபி சட்டம், ஒழுங்கு பிரச்னையில் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்கிறார். நாள் தோறும் கொலை கொள்ளை நடந்தால் அமைதி பூங்காவா.
தேமுதிக எம்எல்ஏ ஒருவர் குற்றவாளி என கூறி யதால், ஒட்டுமொத்தமாக அந்த கட்சி எம்எல்ஏ அனைவரையும் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வது என்ன நியாயம்? அப்படி பார்த்தால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண் டனை பெற்றதால் ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்ப தாக கெஜட்டில் அறிவித்து சபாநாயகர் தனபால், செயலாளர் கமாலுதீன் கையெழுத் திட்டுள்ளனர். அதற்காக சபாநாயகரை நீக்குவார் களா? இந்த அக்கிரம அநியாய ஆட்சிக்கு முடிவுக்கட்டும் எச்சரிக்கை மணியாகத்தான் ஸ்ரீரங்கம் தேர்தல் அமைந்துள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் நேரு, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், எம்பி சிவா, முன்னாள் அமைச்சர் ரகு பதி, புதுக்கோட்டை மாவ ட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, கரூர் மாவ ட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், எம்எல்ஏ சவுந்திரபாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் சேகரன், அன்பில் பெரியசாமி, மாந கர செயலாளர் அன்பழகன், இளைஞரணி அமைப்பா ளர் ஆனந்த், வெளியீட்டு கழக செயலாளர் செல்வேந்திரன், பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், கண்ணன், மண்டி சேகர் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
திருச்சியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
கடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும் நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் திமுக&அதிமுக இடையேயான வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திமுக வாக்கு குறைந்துள்ளதே?
ஏற்கனவே திமுக சட்ட சபை தேர்தலை வாங்கிய வாக்குகளை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளோம். அதிமுக வழங்கிய ரூ.5,000 பணத்தை பொருட்படுத்தாமல் திமுக கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மிகப்பெரிய வெற்றி என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment


Labels