வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



14/02/2015


திருவானைக்கா - தெற்கு உள் வீதி " !
' திருவிடைமருதூர் தெருவழகு ' என்னும் சொற்றொடரை நினைவூட்டும் 
நீண்ட,அகன்ற வீதி !
' திருநீற்றான் மதில் ' என வழங்கப்படும் 34 அடி உயரமும் சுமார் 8000அடி 
நீளமும் கொண்ட நெடிதுயர்ந்த மதிற்சுவரால் சூழப்பட்டு , அத் தலத்திற்குரிய 
ஐந்து திருச்சுற்றுக்களில் ( பஞ்ச பிரகாரம்) நான்காவது சுற்றாகப் 
போற்றப்படும் திருவீதி !
நாங்கள் தேர்தல் பணியாற்றிய இடமும் கூட ! smile emoticon
திருவரங்கத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளன்று கழகப் பொருளாளர் 
அண்ணன் தளபதி அவர்கள் தெற்கு உள் வீதிக்குள் நுழைந்த போது உதய 
சூரியன் , உச்சிச் சூரியனாக மாறிவிட்டிருந்தான். ஆயினும், கொளுத்தும் 
வெயிலைப் பொருட்படுத்தாமல் தெருவின் இருமருங்கும் கூடியிருந்த 
ஆண்களும் , பெண்களும் தளபதி அவர்களை நோக்கி உற்சாகமாகக் 
கையசைத்துக் கொண்டிருந்தார்கள் .
இறுதிக்கட்டப் பிரச்சாரம் - மாலைக்குள் நிறைவு செய்ய வேண்டும் - 
போகவேண்டிய தூரம் அதிகம் - பேசவேண்டிய இடங்கள் ஏராளம் !
இத்தனை அழுத்தங்களோடும் , பரபரப்போடும் சென்று கொண்டிருந்த தளபதி 
அவர்களின் பிரச்சார வண்டி, அவரது சிறு கையசைப்பில் ' சட்டென்று ' 
நின்றது . நாங்கள் ஒரு வினாடி திகைத்துப் போனோம் . எங்கள் முகங்களில் 
ஓடியக் குழப்ப ரேகைகள் விலகும் முன்பே சடாரெனக் கதவைத் திறந்து 
கொண்டு அவர் தெருவில் இறங்கி விட்டார் !
அப்போது தான் கவனித்தோம் . தெருவோரம் அகவை முதிர்ந்த பிராமணப் 
பெரியவர் ஒருவர் தளபதிக்கு அணிவிக்கவேண்டி ஒரு துண்டுடன் நின்று 
கொண்டிருந்திருக்கிறார் . வண்டியின் வேகத்தில் யாருமே நிதானித்துப் 
பார்க்க முடியாத நிலையிலும், தளபதி அவர்களின் கூரிய பார்வை மட்டும் 
அவரைக் கவனித்து விட்டிருக்கிறது.

ண்டியில் இருந்து தளபதி அவர்கள் இறங்குவதைக் கண்ட அந்த பெரியவர் 
அருகே வந்து துண்டு அணிவித்ததோடு அமைந்துவிடாமல் தளபதி 
அவர்களின் கன்னத்தை வாஞ்சையோடு தடவித் தன் கண்களில் ஒற்றிக் 
கொண்டார் ! தளபதி அவர்களும் தனது வணக்கத்தைத் தெரிவித்ததுடன் 
அவரது கையைப் பற்றி தன் அன்பை வெளிப்படுத்தினார்.
தேர்தல் கால அவசரச் சூழலில் தளபதி அவர்கள் வண்டிக்குள் அமர்ந்தவாறே 
துண்டை வாங்கிக் கொண்டிருக்க முடியும் . யாரும் அதைத் தவறாகவும் 
கருதிட மாட்டார்கள் . எனினும், அந்தப் பெரியவரின் வயதுக்கான 
மதிப்பளிக்கும் மாண்பு தளபதியிடம் உள்ள காரணத்தால் அவரே இறங்கிச் 
சென்றதைக் கண்டபோது, பொது வாழ்க்கையில் ஈடுபடுவோருக்கான 
முன்னுதாரணமாக மட்டும் தளபதி அவர்கள் இல்லை; ஒரு படி மேலே போய் 
தலைமுறைகளையும் , சமுதாய விருப்பத் தேர்வுகளையும் தாண்டிய ஒரு 
''ஆதர்ஷ புருஷராக" அவர் பரிணமித்து இருக்கிறார் என்பதை உணர முடிந்தது .
அதற்குள் அவரைச் சுற்றிக்கொண்ட கூட்டத்தினர் அனைவருக்கும் 
கைகுலுக்கி , ஓரிரு வார்த்தைகள் உரையாடிய பின்னரே தனது பயணத்தைத் 
தொடர்ந்தார் .
அன்று தளபதி அவர்களின் உரை அனைவருக்கும் எழுச்சியைத் தந்தது 
என்றால் , எளியோருக்கு இரங்கும் அவரது உயரிய பண்பாடு நெகிழ்ச்சியை 
அளித்தது !

No comments:

Post a Comment


Labels