வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

21/02/2015

பாராட்டுரையா? இடித்துரையா? கடந்த 20 நாளில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை குறிப்பிட்டு கலைஞர் கண்டனம்

நீதித் துறை வழங்கியது பாராட்டுரையா? இடித்துரையா? என்ற தலைப்பில் 21.02.2015 சனிக்கிழமை திமுக தலைவர் கலைஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 

ஆளுநர் உரையில் பத்தி 3இல் இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்படுவதாகவும், மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டியிருப்பதாகவும் குறிப்பிட்டு, ஆட்சியினர் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநர் அவ்வாறு தனது உரையில் பெருமைப்பட்டுக் கொண்டதற்கான அடிப்படை ஆதாரங்கள் எதையும் கூறவில்லை. இருந்தாலும் இந்த மாதத்தில் இருபது நாட்களில் நடைபெற்ற சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் மட்டும் பின்வருமாறு :-

1-2-2015

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் இருதரப்பு மோதல். வழக்கறிஞர் ஸ்டாலின் (வயது 38) படுகொலை!

பவானி அம்மாபேட்டை பழைய மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த சாகத்யா (வயது 19) என்பவரின் கழுத்து, கைகளில் பிளேடால் அறுத்து கொலை செய்ய முயற்சி!

சீர்காழியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ கேப்டன் ஜெயராமனின் மகள் ரேணுகா (வயது 28) என்பவருக்கு பாலியல் தொந்தரவு!

கோவையில் வெங்கடேசன், விஜயகுமார், பிரகாஷ் ஆகியோரிடமிருந்து ஆறு கிலோ தங்கக்கட்டி கொள்ளை!

மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் பிரபல நகைக்கடையில் 2 கிலோ தங்க நகைகள் திருட்டு!

திருவாரூரைச் சேர்ந்த கார்த்திக் (வயது 33) என்பவரை சென்னை, போரூர் அருகே மிரட்டி அவரிடமிருந்து ரூ.49 ஆயிரம் ரொக்கம் பறிப்பு! 

கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டு நல்லூர், மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த பிரதாப் (வயது 25) மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை!

குமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அடுத்த தாழக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த 19வயது இளம் கல்லூரி மாணவி ஒருவர் 50 சவரன் நகையுடன் கடத்தல்!

சேலம் வியாபாரி கார்த்திகேயன் (வயது 32) என்பவரிடம் காஞ்சிபுரம் பட்டு சேலை வியாபாரி ரூ.2 கோடி மோசடி!

சூளைமேடு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு ஆட்டோவில் 5 பேர் 70 கிலோ கஞ்சா கடத்தல்!

2-2-2015

சென்னை மேற்கு தாம்பரம் ஏழுமலை தெருவைச் சேர்ந்த மூதாட்டி முத்துலட்சுமி அம்மாள் என்பவரிடம் 15 சவரன் தாலிச் செயின் பறிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் குத்தாராப்பள்ளி அருகே ராமாபுரத்தில் பாங்க் ஆப் பரோடா கிளை வங்கிக்
கதவை உடைத்து 48 கிலோ தங்க நகைகள் கொள்ளை!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் ரயில்வேயில் வேலை வாங்கித்
தருவதாக ஏமாற்றி ரூபாய் 89 லட்சம் மோசடி!

4-2-2015

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் குமரி காலனி பகுதியைச் சேர்ந்த வினோத் (வயது 36) ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்குள் புகுந்த 3 பேர் இவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்!

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் ஷாம் அவென்யூ காவேரி தெருவைச் சேர்ந்த சுகன்யா (வயது 27)
என்பவரிடம் 10 சவரன் நகை கொள்ளை!

கும்மிடிப்பூண்டி அருகே சின்ன சோழியம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (வயது 48), இவரது
மகள் நிரோஷா ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை!

சென்னை விமான நிலையத்தில் 12 துப்பாக்கிக் குண்டுகள் கடத்தல்!

சென்னை பல்கலைக் கழகம் அருகே நடைப் பயிற்சி சென்றபோது கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாத்குமார் மிஸ்ராவை தள்ளி விட்டு செல்போன் பறிப்பு!

திருச்சி கோட்டைப் பகுதியைச் சேர்ந்த முத்துரத் தினாவதி என்பவர் கொலை செய்யப்பட்டு 5 சவரன் சங்கிலி, 3 சவரன் வளையல்கள், 1 சவரன் தோடு கொள்ளை!

பேஸ்புக் மூலம் பழகி பெண்களிடமிருந்து ரகமத்துல்லா என்பவர் 40 சவரன் நகை பறிப்பு!

திருமுல்லைவாயலில் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் ராஜா மற்றும் சைமன் ராஜா என்பவர்கள் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தனர்!

செங்குன்றம் அடுத்த ஆட்டதாங்கல் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மணி (எ) மணி கண்டனுக்கு சரமாரியாக வெட்டு!

சென்னை, தியாகராயர் நகர், ஜி.என்.செட்டி ரோடு பகுதியைச் சேர்ந்த சுதா (வயது 24) என்பவர் சாப்ட்வேர் என்ஜினியர். இவரை இரண்டு மர்ம நபர்கள் தாக்கி லேப்டாப், ஏ.டி.எம். கார்டு, கிரிடிட் கார்டு மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றனர்!

5-2-20153

பள்ளிக்கரணை, கணபதிபுரம், 3வது தெருவைச் சேர்ந்த ரஷியா பேகம் (வயது 36) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகள் கொள்ளை!

பழவந்தாங்கல் எம்.ஜி.ஆர்.ரோட்டில் சந்தீப் ஜெயின் என்பவர் கடையில் திருட்டு நகை அடகு வைத்ததாகக் கூறப்பட்டதை விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் என்பவர், கடையின் கேமராவை ஆப்செய்து விட்டு 30 சவரன் நகைகள் அபேஸ்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் ரபி (வயது 22) என்பவருக்கு அரிவாள் வெட்டு!

9-2-2015

சென்னை மாநிலக் கல்லூரிக்குள் புகுந்து காவலாளி நடராஜ் மீது ஆட்டோவில் வந்த ஆறுபேர் தாக்குதல்!

ஓட்டேரியில் பின்னி மில்லில் இயந்திர உதிரி பாகங்கள் திருட்டு!

மதுரை - திருமங்கலம் அருகே ரெட்டியப் பட்டி யைச் சேர்ந்த அறிவு ராஜா (வயது 32) அடித்துக் கொலை!

திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் அருகே கள்ளி வலசு பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் பிணமாகக் கிடந்தார்!

10-2-2015

ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த டி.வி. செந்தில் (வயது 45) என்பவர் எழும்பூரில்
உள்ள ஒரு திரையரங்கம் அருகில் நின்றிருந்த போது வெட்டிக் கொலை!

சென்னை அமைந்தகரை அய்யாவு நாயுடு காலனி நரசிம்மன் தெருவில் சிட்டி டெவலப்பர்ஸ் என்ற கட்டுமான அலுவல கத்தின் உரிமையாளர்கள் பழனிசாமி (எ) பால்ராஜ் (வயது 48), அவரது மனைவி லில்லி (வயது 33) என்பவர்கள் வீடுகட்டித் தருவதாகக் கூறி ரூ.1.20 கோடி மோசடி!

சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் சி. டைப் 27-வது தெருவைச் சேர்ந்த இந்திராணி (வயது 45) என்பவர் மீது மயக்க மருந்து தெளித்து பட்டப்பகலில் 14 சவரன் நகைக் கொள்ளை!

இரும்புலியூர், திலகவதி நகர், செந்தில் முருகன் தெருவைச் சேர்ந்த அருள்சாமி (வயது 50) என்பவரின் வீட்டின் கூரை உடைக்கப்பட்டு 2 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், 3 கேஸ் சிலிண்டர்கள் கொள்ளை!

சென்னையை அடுத்த பாலவாக்கம், கிருஷ்ணாநகர் 3-வது தெருவைச் சேர்ந்த சிவரஞ்சனி (வயது 20) கழுத்தில் கிடந்த 3 சவரன் செயின் பறிப்பு!

குரோம்பேட்டை அடுத்த நெமிலிச் சேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினியிடம் வயது (29) 10 சவரன் நகை பறிப்பு!

11-2-2015

தஞ்சாவூர் நாஞ்சிக் கோட்டை அ.தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் ப.சேகர் என்பவர் பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை!

சென்னை சேலையூர் காமராஜபுரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு!

அம்பத்தூர் திருவேங்கடம் நகரைச் சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் சம்பத் என்பவரை வழி மறித்து ரூபாய் 5 லட்சம் பறிப்பு!

ஆலந்தூர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 80 ஆயிரம் திருட்டு! 

திருவள்ளூர் மாவட்டம் மணலி புதூர் அத்திப் பட்டு அரசு குடியிருப்பில் வசிக்கும் தீயணைப்பு வீரர் அரிகரசுதன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் இருந்து ரூபாய் 50 ஆயிரம் கொள்ளை!

அமைந்தகரை என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வம் என்பவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை பாத்திமா என்பவரிடம் பட்டப் பகலில் 3 பவுன் தங்க நகை பறிப்பு!

ஆதம்பாக்கம் பாலாஜி நகர் 10வது தெரு வைச் சேர்ந்த மூதாட்டி இராஜேஸ்வரி அம்மாள் என்பவரிடம் 6 சவரன் தாலிச் செயின் பறிப்பு!

12-2-2015

சென்னை இராயப்பேட்டையில் மாநிலக் கல்லூரி மாணவர் சதீஷ்குமார் என்பவருக்கு சரமாரியாக அடி உதை!

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்பு என்பவன் பட்டப் பகலில்
சரமாரியாக வெட்டிப் படுகொலை!

கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த பள்ளி மாணவி கடத்தப்பட்டார்!

சூளைமேடு சிவகாமி தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்திரன் என்பவர் கழுத்தை அறுத்துப்
படுகொலை!

புதுக்கோட்டை மூன்றாம் வீதியைச் சேர்ந்த வங்கி ஊழியர் இராஜகோபால் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் தங்க நகை கொள்ளை!

கொளத்தூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சின்னம்மாள் (வயது 64) என்ற மூதாட்டியிடம் பட்டப் பகலில் 5 சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு!

13-2-2015

சீட்டுப் பணத் தகராறில் சைதை. சின்ன மலை, வெங்கடாபுரம் மாற்றுத் திறனாளி சண்முகம் (வயது 45) எரித்துக் கொலை.

திருவொற்றியூர், காலாடிப்பேட்டை, மேற்கு மாட வீதியில் வசித்துவந்த ராம்புகார் சவுத்திரி (வயது 27) என்பவரை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தும்பூரில் கோமதியும் (வயது 24), அவரது இரண்டு வயது மகளும் கொலை!

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் அய்யப்பன் நகரைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 50) என்பவரின் கார் திருட்டு!

சென்னை ஓட்டேரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர் மணிகண்டனுக்கு (வயது 19) அரிவாள் வெட்டு!

சென்னையை அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த தருண் (வயது 28) என்பவரிட மிருந்து 4 சவரன் நகை பறிப்பு!

14-2-2015

காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், ஆனந்த பண்டிதர் ஜோதி தெருவைச் சேர்ந்த ஹரிகரன் (வயது 30) படுகொலை! தடுத்த அவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் கத்திக் குத்து!

நங்கநல்லூர் 41வது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் சந்திர சேகர் வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு 10 சவரன் நகைகள், கலர் டி.வி. கொள்ளை! 

பூவிருந்தவல்லி செம்பரம்பாக்கம் தனியார் கல்லூரி தேவாலயத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த லில்லி (வயது 43) திருவள்ளூர் வங்கியில் ரூ.50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அரசுப் பேருந்தில் பூவிருந்தவல்லி நோக்கி வந்தபோது பணம் திருட்டு!

குமரன் நகர் வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த இந்திராணியின் 3 சவரன் செயின் பறிப்பு!

ஆவடியை அடுத்த பட்டாபிராம் கோபால புரம், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த உமாதேவி (வயது 25) என்பவரிடம் இரண்டரை சவரன் சங்கிலி, செல்போன் பறிப்பு!

15-2-2015

தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையைச் சேர்ந்த ரா.சுமதி (வயது 25) என்பவரிட மிருந்து 5 சவரன் சங்கிலி பறிப்பு!

கொடுங்கையூர், எருக்கஞ்சேரி ஜே.பி. தெருவைச் சேர்ந்த ரூபன் (வயது 27) என்பவருக்கு அரிவாள் வெட்டு!

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 16 வயது பெண் கற்பழிப்பு!

16-2-2015

மாதவரம் சின்ன மாத்தூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற மூதாட்டி கத்தியால் குத்திப் படுகொலை!

செங்கல்பட்டையடுத்த காட்டாங்குளத் தூரில் காளத்தீஸ்வரர் கோவில் கதவை உடைத்து ஐம்பொன்சிலைகள் திருட்டு!

சென்னை செங்குன்றம் மொண்டியம்மன் நகர் ஆலமரம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் திருவிழாவில் காந்திநகர் தேவகி என்பவரிடம் 4 பவுன் சங்கிலி, பாடியநல்லூர் ஜெயமணியிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி, மொண்டியம்மன் நகர் சுந்தரி என்பவரிடம் 4 பவுன் தங்கச் சங்கிலி, கஸ்தூரி அம்மாள் என்பவரிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு!

பெரம்பூர் மணியம்மை நகரைச் சேர்ந்த ரூபன் என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை!

சென்னை பெரம்பூர் பல்லவன் சாலையைச் சேர்ந்த கிரேஷி என்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!

திருச்சி திருவரங்கம் சிங்கப்பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த செங்கல் வியா பாரி ஜோதிராமன் என்பவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி ரூபாய் 10 லட்சம் கொள்ளை!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த செங்கல் சூளை அதிபர் ஜெயக்குமார் என்பவரை கடத்திச் சென்று ரூபாய் 50 லட்சம் பறிப்பு!

17-2-2015

சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த சையத் அலிகான் (வயது 39) என்பவரிடம் ரூ. 3 கோடி மோசடி.

ரூ. 1 கோடி ஹவாலா பணம் சிங்கப்பூருக்கு கடத்த முயற்சி.

சென்னை, எம்.ஜி.ஆர். நகர், தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்த செல்வி (வயது 35) என்பவர் காலை நேரத்தில் வீட்டு முன் கோலம் போட்டுள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் முகவரி கேட்பதுபோல் நடித்து செல்வி கழுத்தில் இருந்த 6 சவரன் சங்கிலி பறிப்பு.

சென்னை-அரும்பாக்கம், கொடுங்கையூர் பகுதிகளில் வேன், கார், ஆட்டோக்கள் நள்ளிரவில் தீவைத்து எரிப்பு. 

மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் வாங்கித் தருவதாகக் கூறி வேலூரைச் சேர்ந்த அமுதா என்பவரிடம் ரூ.30 லட்சம் மோசடி.

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள மலையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி (வயது 42), வீரமணி (வயது 42) ஆகியோர் வெட்டிக்கொலை.

20-2-2015

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெருக வாழ்ந்தான் அருகேயுள்ள பெருவிடை மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகள் விக்டோரியா (வயது 18) என்ற கல்லூரி மாணவியின் கழுத்து அறுத்துக் கொலை!

இராமநாதபுரத்தில் மாவட்ட விரைவு நீதிபதியாக இருப்பவர் பிரகாஷன் (வயது 57). இவர் மனைவியுடன் ராமநாதபுரம் மாந்தோப்பு மகா சக்தி நகர், 9-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டை மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து நீதிபதி கூறுகையில், “மாவட்ட நீதிபதியான எனக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையில் உயிருக்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ளது” என்று வேதனை தெரிவித்துள்ளார்!

திருவாரூரை அடுத்த அகரத்திருநல்லூர் சவுரித் தோப்பு தெருவைச் சேர்ந்த கோபால் என்பவருடைய மகன் முருகேசன் (வயது 37) என்பவரின் தலையை மண்ணில் புதைத்துக் கொலை!

சென்னையை அடுத்த குரோம்பேட்டை யைச் சேர்ந்த சுப்ரியா (வயது 24) என்பவரிடம் வரதட்சணை கொடுமை!

பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம், பழிஞ்சூர், வ.உ.சி. தெருவைச் சேர்ந்த மரகத வள்ளி (வயது 55) வீட்டில் 15 சவரன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் கொள்ளை!

செங்குன்றத்தை அடுத்த அலமாதி எடப் பாளையம், ஜீவா நகரில் வசிக்கும் ஜீவா (வயது 18 ) என்ற கல்லூரி மாண வருக்கு அரிவாள் வெட்டு!

20 நாட்களில் நடைபெற்ற கொலை, பெரிய கொள்ளைகள் பற்றிய தகவல்கள், அதுவும் நாளேடுகளில் வந்தவைகளை மட்டும் இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறேன். குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ள தகவல்படி, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 44 மாதங்களில் 7,805 படுகொலைகளும், 79,305 கொள்ளை களும், 4,697 கற்பழிப்புச் சம்பவங் களும் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தில் வந்துள்ள மேலும் சில தகவல்கள் :-

 தமிழகத்தில் கடந்த ஆண்டு சொத்துக்கள் சார்ந்த குற்றங்கள் மொத்தம் 1,489 நடைபெற்றுள்ளன. இதில் சென்னை முதல் இடம் 137. இதில் 37 சதவிகிதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மொத்த வழிப்பறிகள் என்று எடுத்துக் கொண்டால் 1,989 நடைபெற்றுள்ளன. இதில் 1,025 வழக்குகளில் மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. 56 வழக்குகளில் மட்டுமே தண் டனை வாங்கித் தரப்பட்டுள்ளது.

 கொலைகள் என்று எடுத்துக் கொண் டால் கடந்த ஆண்டில் நடைபெற்ற 1,678 கொலைகளில், 900 வழக்குகளில் மட்டுமே குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டுள்ளது. ஒரே ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை வாங்கித்தரப்பட் டுள்ளது. இதிலிருந்து குற்ற வழக்குகள் மீதான புலனாய்வு மெத்தனமாக இருப்பது தெரியவந்துள்ளது.

 பெண்களுக்கு எதிரான குற்றங்களான பலாத்காரம், பாலியல் தொல்லை, கடத்தல், வரதட்சணைக் கொடுமை ஆகியவை பற்றிய வழக்குகள் 2014இல் 6,826 பதிவாகியுள்ளன. இதில் 659 வழக்குகளில் மட்டுமே குற்றப் பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Labels