வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

26/12/2014


வேப்பந்தட்டை ஒன்றிய திமுக சார்பாக ஜெ.தீர்ப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி எழுதிய புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி வி.களத்தூரில் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி.களத்தூரில் ஒன்றிய திமுக சார்பாக, ஜெ.தீர்ப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி எழுதிய புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றியசெயலாளர் நல்லதம்பி தலைமை வகித்தார். இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு புத்தகங்களை பொதுமக்கள், வியாபாரிகளிடம் வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
மாவட்ட துணைச்செயலாளர் ஜெகதீசன், அவைத்தலைவர் நடராஜன், பொருளா ளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கராசு, பெரம்பலூர் நகரச்செய லாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். அணி அமைப்பாளர் கள் மாரிக்கண்ணன், மகாதேவி ஜெயபால், முருகேசன், ஊராட்சிமன் றத் தலைவர் இஸ்மாயில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார் வாழ்த்தி பேசினர்.
இதில் ஊராட்சி செயலாளர்கள் கிருஷ்ணசாமி, தங்கராசு, வரதராஜ், ரவிச்சந்திரன், ஜெயபால், குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், பிரதிநிதிகள், கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Labels