வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



04/11/2014

சர்க்கரைக்கு வாட் வரி விதித்த வரலாறு இல்லை! தமிழகத்தில் பினாமி ஆட்சி நடைப்பெருகிறது!தளபதி ஸ்டாலின் பேச்சு!

 
 

 
 
சென்னை, நவ.4:
தமிழகத்தில் செயல்படுவது பினாமி ஆட்சி. இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டி, கருணாநிதி தலைமையில் மக்களாட்சி அமைய ஆதரவு தரவேண்டும் என்று மு.க. ஸ்டாலின் பேசினார்.
பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து, சென்னையில் நேற்று திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:
பால் விலையை தமிழக அரசு வரலாறு காணாத அளவு உயர்த்தியுள்ளது. இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும் சரி, கருணாநிதி பலமுறை ஆண்ட போதும் சரி, இந்தளவுக்கு பால் விலையை உயர்த்தியது கிடையாது. திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு லிட்டர் பால் விலை
ஸி17.25
இருந்தது. தற்போது
ஸி34
என உயர்ந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு
ஸி6.75
உயர்த்தினார்.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது பால் உற்பத்தியாளர்களை கோட்டைக்கு அழைத்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்கள் பால் விலையை உயர்த்த வேண்டும் என கேட்டபோது, அதனை உயர்த்தாமல், கொள்முதல் விலையை உயர்த்தியவர்தான் கருணாநிதி.
ஆனால், தற்போது தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு அறிக்கை விடுகிறார். அது யார் வெளியிடுகிற அறிக்கை என்று அவருக்கும் தெரியும். எல்லோருக்கும் தெரியும். அவரது அறிக்கையிலே திமுக ஆட்சியில் ஆவின் நிறுவனம் பாதாளத்துக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
தற்போது அவரது பினாமி ஆட்சி
ஸி10
உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா சிறைக்கு செல்வதற்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தியை மாற்ற வேண்டிய அவசியம் என்ன? ஆவின் பால் கலப்படம் தொடர்பாக வைத்தியநாதன் என்ற அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டாரே, இதற்கெல்லாம் விளக்கம் தர முதல்வர் பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறாரா.
தமிழகத்தில் மின்பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆட்சிக்கு வந்தவுடனேயே மின் கட்டணத்தை 3 மடங்கு உயர்த்தினார் ஜெயலலிதா. தற்போது மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடந்து இருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் எக்காரணத்தை கொண்டும் வெளியில் மின்சாரத்தை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தபோதும், இவர்கள் ஒரு யூனிட் மின்சாரத்தை
ஸி13
கொடுத்து வாங்க வேண்டிய காரணம் என்ன? பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதனை மறுக்க முதல்வர் தயாராக இருக்கிறாரா?
இதெல்லாம் போதாது என்று தற்போது சர்க்கரை விலையும் கிலோவுக்கு
ஸி3
உயர்த்தியுள்ளார். இதுவரை நடந்த தமிழக அரசியல் வரலாற்றில் சர்க்கரைக்கு வாட் வரி போட்டதாக வரலாறே கிடையாது. தற்போது ஜெயலலிதாவின் பினாமி ஆட்சியில் சர்க்கரைக்கு 5 சதவீத வாட் வரி விதித்துள்ளனர். இது எதற்காக என்றால் பெங்களூர், மகாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில் உள்ள சர்க்கரை ஆலை அதிபர்கள் கோடி கோடியாக கொள்ளையடிக்கத்தான்.
எனவே இப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட கருணாநிதி தலைமையில் மீண்டும் மக்கள் ஆட்சி அமைய உங்களது ஆதரவை தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
 
 
 

No comments:

Post a Comment


Labels