வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

05/11/2014

பெரம்பலூருக்கு இன்று தளபதி மு.க.ஸ்டாலின் வருகை!முன்னேற்பாடு பணி ஆ.ராசா நேரில் ஆய்வு!நாளை ஆய்வு கூட்டம்!
பெரம்பலூர், நவ.5:
திமுக கிளைக்கழக பணிகள் குறித்து நாளை நடக்கும் ஆய்வுக் கூட்டத்திற்காக பொருளாளர் மு.க.ஸ்டா லின் இன்று மாலை பெரம்பலூர் வருகிறார். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆய்வு செய்தார்.


திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை (6ம்தேதி) பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கிளைக்கழகப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். அதன்படி நாளை (6ம்தேதி) காலை 9மணிக்கு பெரம்பலூர் பாலக்கரையிலுள்ள தனலட்சுமி சீனிவாசன் ஓட்டல் கூட்ட அரங்கில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் அளவிலான கிளைக் கழகப் பணிகள் குறித்து ஸ்டாலின் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறார். இதில் கொள்கைபரப்பு செயலாளர் ராசா, மாவட்ட செயலாளர்கள் துரைசாமி, சிவசங்கர் எம்எல்ஏ மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் என பெரம்பலூர் மாவட்டத்தில் 98 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 88 பேரும் பங்கேற்கவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு பாலக்கரையிலுள்ள முன்னாள் அமைச்சர் ராசா முகாம் அலுவலகத்தை ஒட்டியுள்ள கலைஞர் திடலில் நடைபெறும் பெரம்பலூர் அரியலூர் மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இதற்காக இன்று மாலையே பெரம்பலூர் வருகை தரும் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ராசா முகாம் அலுவலகத்தில் இரவு தங்குகிறார். ஸ்டாலின் வருகை குறித்த முன்னேற்பாட்டுப் பணிகளை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக கொள்கை பரப்பு செயலாளருமான ராசா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட செயலாளர்கள் துரைசாமி, சிவசங்கர் எம்எல்ஏ, தலைமைசெயற்குழு உறுப்பினர் அட்சயகோபால் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், ராஜ்குமார், தங்கராசு, நகர செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Labels