வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



18/10/2014


இன்று மாலை நான்கு மணிக்கு டெல்லி உச்சநீதிமன்றதில் வழக்காடும் எனது வழக்கறிஞர் நண்பர் ஷிவ்குப்தா தொலைபேசியில், ஜாமீன் விவரம் பற்றி கேட்ட போது அவர் கூறிய கருத்துக்கள்.

"ஹலோ நண்பரே.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஹெச்.எல்.தத்து, மதன் பி லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு, "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. எந்த ஒரு ஜாமீன் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்குகிறதோ இல்லையோ, ஆனால் தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப்பிரிவு 21-ஐ இந்த நீதிமன்றம் மதிக்கிறது. எனவே வீட்டுக் காவலில் வைக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கடந்த 18 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்தார். அதை கருத்தில் கொண்டால், அவருக்கு ஜாமீன் வழங்கினால் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு மனுவை இன்னும் 20 ஆண்டுகள்கூட இழுத்தடிப்பார்.
எனவே, ஜாமீன் வழங்கியத்தில் இருந்து 6 வாரத்துக்குள், அதாவது டிசம்பர் 18-ம் தேதிக்குள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் இருந்து சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப் பட வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வதில் ஒரே ஒரு நாள்கூட தாமதிக்கக் கூடாது. குறிப்பிடப்பட்டுள்ள டிசம்பர் 18-ல் கட்டாயம் ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை பாயும்.
அதேபோல், ஜெயலலிதா மேல் முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்க பட்டதில் இருந்து மூன்று மாத காலத்துக்குள் கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதிமுக தொண்டர்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது என ஜெயலலிதா அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். ஜெயலலிதா உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் அதிமுகவினர் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றங்களையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கும் வகையில் ஜெயலலிதா கருத்துகள் வெளியிடக் கூடாது" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் எனவும், இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவு. எப்படியெனில்,
1. கர்நாடக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதாவின் வழக்கு வரும் 27ந் தேதி வரும் போது, இலகுவான முடிவெடுக்க வழி வகுத்துள்ளது.
2. தங்கள் தீர்ப்பின் மீது தடை பெற்றுக்கொண்டு மேலும் அப்பீல் செய்வதில் காலதாமதம் ஏற்படுத்திட குற்றவாளிகள் முனையமால் தடுக்கப் பட்டுள்ளது.
3. இவ்வழக்கை பொறுத்தவரை, ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ப் பட்டு, குற்றவாளிகளின் கோரிக்கைகள் கீழமை நீதி மன்றத்தால் அனுமதிக்கப் பட்டு, அவர்களின் வாதங்களை கூர்ந்தாய்வு செய்யப் பட்டு தக்க விளக்கங்களுடன், வழங்கப் பட்ட தீர்ப்பு என்பதால் குற்றவாளிகள் தங்களை காத்திடும் வண்ணம் இழுத்தடிப்பு செய்ய இயலாத நிலையை தந்துள்ளது.
4. பால்காவடி, தாடி வளர்த்தல், அலகு குத்துதல், மண் சோறு சாப்பிடுதல் போன்று இவர்களே உருவகப்படுத்தி மீடியாக்களில் செய்தி வருவதை வைத்து அனுதாபம் தேடிடும் நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்கப் பட்டுள்ளது.
5.கர்நாடக சிறை வளாகத்தில் தினமும் கும்பல் குவிந்து, அம்மாநில உள்துறைக்கு நித்தமும் நிகழ்ந்து வந்த பாதுகாப்பு செலவினங்கள் ஏற்படாது தடுக்கப் பட்டுள்ளது.
6. நீதியரசர் குன்ஹா - திரு சுப்ரமணியசுவாமி ஆகியோர் மீது காழ்ப்புணர்வு கொண்டு செய்யப்பட்ட பிரச்சாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
7.தமிழக மக்கள் அமைதியாக தங்கள் பணிகளை ஆற்றிட சட்டம் ஒழுங்கு நிலையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மகத்தான அறிவுரை இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு தரப் பட்டுள்ளது.
8.இனியும் அரசு அலுவலங்களில் குற்றவாளியின் படங்கள் அகற்றப் படாத நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
9.மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே இடைக்கால தண்டனை நிறுத்தி வைத்துள்ளோம், என்ற வாசகங்கள் தீர்ப்பை வைத்து அரசியல் செய்திடலாம் என்ற நினைப்பை தவிடு பொடியாக்கியுள்ளது.
10.மொத்தத்தில் சிறையினுள் உள்ளே இருந்து கொண்டுகூட அரசியல் செய்திடும் வாய்ப்பை தகர்த்து, உண்மையான தண்டனை வழங்கப் பட்டதாகவே கருதிட வேண்டும்.
11.இரண்டு மாநிலத்திடையிலான பிரச்சினையாக மாற்ற முனைந்த காரியங்கள் தடுக்கப் பட்டுள்ளது.
12.வீட்டுக் காவலில் கூட வைத்திட ஒத்துக் கொள்வதாக நாரிமன் அவர்களால் கேட்டுக் கொள்ளும் அளவுக்கு வழக்கின் நிலைமையை உணரத்திட செய்துள்ளது" என விளாவாரியாக தெரிவித்தார்.

உடன்பிறப்புகளே, எனது நண்பரின் கருத்து தங்களின் பார்வைக்கும்..

No comments:

Post a Comment


Labels