வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.

12/10/2014

ஜெயலலிதா பிறந்தநாள் பரிசு வழக்கு :
 
விரைவில் இறுதிகட்ட விசாரணை

 தமிழக முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான பிறந்த நாள் பரிசு வழக்கின் இறுதி கட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 1992-ம் ஆண்டு அவர் முதமைச்சராக இருந்த போது பிறந்த நாள் பரிசாக 1 கோடியே 26 லட்சம் ரூபாய் வரி ஓலைகள் மூலமாக பெறப்பட்டதாக புகார் எழுந்தது. 

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இந்த பரிசுகள் பெறப்பட்டுயிருப்பதாக குற்றம் சாட்டிய சி.பி.ஐ. சென்னை நீதிமன்றத்தில் கடந்த 2006-ம் ஆண்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தது. ஆனால் இந்த வழக்கில் மிகவும் கால தாமதமாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக கூறி பிறந்த நாள் பரிசு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து 2012-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது, ஆரம்ப கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் பிறந்த நாள் பரிசு வழக்கின் இறுதி கட்ட விசாரணை உச்சநீதிமன்றத்தில் விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தீபாவளி விடுமுறை முடிந்த பின்னர் இந்த வழக்க விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு இந்த பிறந்த நாள் பரிசு வழக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Labels