வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



19/10/2014

ஜெயலலிதா மட்டும்தான் பெண்ணா?

ஏன் ஜெயலலிதாவால் பழி வாங்கும் நோக்கோடு மட்டுமே 11 மாதம் சிறை வைக்கப்பட்டேனே நானும் ஒரு பெண்தானே? ஜெயலலிதா இப்போது சிறையில் இருப்பது குற்றவாளியாக, தண்டனைக் கைதியாக -ஆனால் என்னையும் எனது கணவர் ஜெகதீசனையும் ஜெயலலிதா சிறையில் போட்டது விசாரணைக் கைதியாக.
எனது கைது என்பது முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக பழிவாங் கவே போடப்பட்ட பொய் வழக்கு. ராஜீவ்காந்தி கொலை சம்பவத்திற்கும் தி.மு.க.விற்கும் இம்மி அளவு கூட சம்பந்தமே இல்லை என தெரிந்தும் மக்களிடம் தி.மு.க.வைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. ராஜீவ்காந்தி கொலை வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு (SIT) விசாரித்தது. தி.மு.க.வினரை பழிவாங்குவதற்காகவே ஜெயலலிதா தனியாக ஒரு புலனாய்வு பிரிவை (TANSIT) உரு வாக்கினார்.
விடுதலைப்புலிகள் சிலருக்கு அடைக்கலம் கொடுத்ததாக 9.1.1992ல் என்னையும் எனது கண வரையும் டான்சிட் போலீசார் கைது செய்த னர். கைது வாரண்ட் எதுவுமே இல்லாமல் எங்களைக் கொண்டுபோய் மதுரை மத்திய சிறையில், என் கணவரை ஆண்கள் சிறையிலும் என்னை பெண்கள் சிறையிலும் அடைத்தார் கள். தற்போது சிறையில் ஜெயலலிதா அனைத்து வசதிகளுடன் உள்ளார். அவர் விரும்பும் உணவை வெளியிலிருந்து வாங்கித் தருகிறோம் என ஜெயலலிதாவின் சிறை அதிகாரியே வெளிப்படையாக பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார். இப்படிப்பட்ட சிறையல்ல எனக்கு. கொலை, கொள்ளை வழக்குகளில் இருக்கும் குற்ற வாளிகளை அடைத்து வைக்கும் சிறைதான்.
இரண்டுமுறை அமைச்சராக இருந்தவள். நீதிமன்றத்தை நாடித்தான் எனக்கு சாதாரண ஒரு கட்டிலும், டேபிளும் கொடுத்தார்கள். ஒரு பெண்ணுக்கு இயற்கையாக என்னென்ன உடல் பிரச்சினைகள் இருக்கும்? எதற்குமே மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை'' என அந்த துயரக் கணங்களை விவரித்தவர் ""எங் களை உறவினர்களோ, நண்பர்களோ, கட்சிக் காரர்களோ யாரும் சந்திக்கக் கூடாது என தனியாக ஒரு சிறை விதியை உருவாக்கினார்கள். ரத்த உறவுகள்தான் சந்திக்க முடியும் என அறிவித்தார்கள். எனது கணவரின் தாய், தந்தை -அதாவது எனது மாமனார், மாமியார் என்னைச் சந்திக்க முடியாது. அதைப் போல எனது தாய், தந்தை என் கணவரை சந்திக்க முடியாது. கட்சித் தலைவரான கலைஞர் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்தார்.
எனது கணவர் ஜெகதீசனுக்கு ஹார்ட் பிரச்சினை இருந் தது. இரண்டு மடங்கு அதிகமாக ஹார்ட் பீட் ஏற்பட்டது. வெளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுபோய் சிகிச்சை செய்ய வேண்டும் என நீதிமன்றம் சென்று போராடினோம். அப்போது மருத்துவமனையில் உள்ள எனது கணவரை சந்திக்கக் கூட எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. மீண்டும் நீதிமன்றம் சென்றுதான் வாரம் ஒருமுறை சந்திக்க அனுமதி பெற்றேன். அப்போது தலைவர் கலைஞர், "தாலியுடன் சிறைக்குச் சென்ற எனது தங்கை சுப்புலட்சுமி மீண்டும் தாலியுடன் திரும்பி வர வேண்டும் என்பதுதான் எனது ஒரே வேண்டுகோள்' என கண்ணீர் அறிக்கையே கொடுத்தார்.
நான் 14 முறை ஜாமீன் மனு போட்டேன். எல்லாவற்றை யும் அரசு வழக்கறிஞர் கடுமையாக எதிர்த்து டிஸ்மிஸ் செய்ய வைத்தார். 11 மாதம் எங்கள் மீது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யாமல் சிறையில் வைத்திருந்தனர். உச்சநீதிமன்றத்தில் மூன்றுமுறை நீதிக்கான போராட்டம் நடத்திதான் ஜாமீனில் வெளியே வந்தோம். 1998-ல் இதே தடா கோர்ட் எங்களுக்கும் இந்த வழக்கிற்கும் நூல் அளவுகூட சம்பந்தம் இல்லை, நிரபராதிகள் என விடுதலை செய்தது.
இப்போது ஜெயலலிதா சிறையில் இருப்பது கோடிக் கணக்கில் கொள்ளையடித்த குற்றத்திற்காக! ஆனால் அன்று எங்கள் தலைவர் கலைஞர் சொல்லித்தான் எல்லாம் செய்தேன் என்று ஒரே வரி மட்டும் சொல்லிவிடு உன்னை விடுதலை செய்கிறேன் என்று இதே ஜெயலலிதா மாநில உயர் போலீஸ் அதிகாரிகளை அனுப்பி என்னை மிரட்டினார். இப்போதைய அமைச்சரான வளர்மதி சுடிதார் போட்டுக் கொண்டு சிறை சூப்பிரண்டண்ட் காரில் இரவு வந்து சிறையில் என்னை மிரட்டினார்.
எல்லாவற்றையும் இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். பெண்களாக இருப்பவர்கள் எல்லோரும் பெண்கள்தான். ஜெயலலிதா வேறு , சுப்புலட்சுமி வேறு என ஒன்றும் இல்லை. நான் அடைக்கப்பட்டது கொடுஞ்சிறை, துன்பம், துயரம், கொடுமை... மட்டுமல்ல தனிமை... தனிமை... தனிமை என்ற உயர் மனஉளைச்சல்தான்'' என தனக்கு இழைக்கப்பட்ட சிறைவாச அநீதியைப் போட்டுடைக்கிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
நன்றி நக்கீரன்

No comments:

Post a Comment


Labels