வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



28/10/2014

வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அமோக வெற்றி முடிவாகிவிட்டது-தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சு!


திருவாரூர், அக்.28:
சட்டமன்ற தேர்தலில் தி.மு. கவிற்கு அமோக வெற்றி கிடைக்கும் என்பது தற்போதே முடிவாகிவிட்டது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று இரவு திருவாரூர்& மன்னார் குடி சாலையில் உள்ள பொன்தமிழ் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் மதிவாணன், முன்னாள் எம்.பி விஜயன், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டா லின் பேசியதாவது:
காலை முதல் நடை பெற்ற ஆய்வு கூட்டத்தில் கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், மாவட்ட நிர்வாகிகளுடனும் இரவு 7 மணி வரையில் ஆய்வு நடத்தப்பட்டது. முக்கியமாக மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் சமச்சீர் கல்விக்கு காரணமான திமுக தான் என்றுமே மக்கள் ஆட்சியாக இருக்கும். எனவே வரும் தேர்தலில் தி.மு.கவிற்கு தான் எங்கள் வாக்கு என்று தெரிவித்தனர். இளைஞரணியை சேர்ந்த நீடாமங்கலம் வெங்கடேசன் பேசுகையில், 144 தடை உத்தரவு காரணமாக தான் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்றது என்று தெரிவித்தார். இது முற்றிலும் உண்மை தான். நேற்று கூட தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நான் அளித்த பேட்டியில், இது பற்றி தெரிவித்துள்ளேன். சட்டம் ஒழுங்கு பாதிப்பு, ஜாதி, மத கலவரம் ஏற்பட்டதால் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். ஆனால் தேர்தலுக்காக தமிழகத்தில் முதல் முறையாக தேர்தலுக்கு முதல் நாள் 144 தடை உத்தரவினை மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. இதுவே திமுக தோல்விக்கு காரணமாக அமைந்தது. தேர்தல் கமிஷனோடு கூட்டணி வைத்ததால் தான் அ.தி.மு.க வெற்றி பெற்றது. எனவே தான் மாநில தேர்தல் ஆணைய ரை மாற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தி.மு.க கோரிக்கை வைத்தது. தற்போது கூட இந்த கோரிக்கை நிறைவேறும் வகையில் பிரவீன்குமார் மாற்றப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இது தி.மு.கவிற்கு கிடைத்த வெற்றியாகும்.
தமிழகத்தில் ஜெயல லிதா முதல்வராக இருந்தபோது காட்சி ஆட்சி தான் நடைபெற்றது. தற் போது பொம்மை ஆட்சி யாக செயல்பட்டு வருகிறது. தனது கண்ணுக்கு எட்டிய வரையில் எதிர்கட்சி என்று ஒன்று இல்லை என்று ஆணவ பேச்சு பேசி வந்த ஜெயலலிதாவிற்கு நீதிமன்றம் மூலம் உரிய தீர்ப்பு கிடைத்துள்ளது. தி.மு.கவை போன்று வெற்றி கண்ட கட்சியும் தமிழகத்தில் இல்லை. தோல்வி கண்ட கட்சியும் இல்லை. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். எனவே வரும் தேர்தலில் தி.மு.க விற்கு அமோக வெற்றி கிடைக்கும் என்பது தற்போதே முடியாகிவிட்டது. 6வது முறையாக மீண்டும் தலைவர் கருணாநிதி முதல்வராகும் வாய்ப்பு நெருங்கி விட்டது. எனவே நாம் அனைவரும் அதற்கான பணியினை தற்போதே துவங்கி விடவேண்டும். பால் விலை உயர்வுக்காக வரும் 3ந்தேதி மாவட்ட தலைநகரில் போராட்டத்தினை தலைவர் கருணாநிதி நடத்திட அறிவித்துள்ளார். எனவே ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களை பற்றியும், நாட்டை பற்றியும் சிந்திக்கும் ஒரே தலைவர் கருணாநிதி தான். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


No comments:

Post a Comment


Labels