வி.களத்தூர் DMK இணைய தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.!

.

.



03/08/2014

‘‘வழக்குகளை கண்டு தி.மு.க.வினர் அஞ்ச மாட்டார்கள்’’ திருச்சி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு!




‘‘வழக்குகளை கண்டு தி.மு.க.வினர் அஞ்ச மாட்டார்கள்’’ என திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.பொதுக்கூட்டம்

திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் ‘தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சத்திரம் பஸ் நிலையம் அருகே நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது:–

2011–ம் ஆண்டு அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் தி.மு.க. உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள தடை விதிப்பதும், அதற்கு இது போன்ற கண்டன கூட்டங்களும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. சட்டமன்றத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் ஜனநாயகம் இல்லை. சட்டமன்றத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. தி.மு.க. உறுப்பினர்கள் மட்டுமல்ல தே.மு.தி.க. மற்றும் வேறு எந்த கட்சியினரும் சட்டசபையில் பேச அனுமதிப்பது இல்லை. சட்டசபையில் தி.மு.க. உறுப்பினர்கள் இருந்தால் புள்ளி விபரத்தோடு கேள்விகளை கேட்பார்கள் என்று கருதி திட்டமிட்டே தி.மு.க.வை கூட்டத்தொடர் முழுவதும் கலந்து கொள்ள முடியாமல் செய்துவிட்டனர்.வழக்குகளை சந்திக்க தயார்

கடந்த மாதம் 10–ந்தேதி தொடங்கிய சட்டமன்ற கூட்டம் 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. வருகிற 12–ந்தேதி வரை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கேள்வி நேரம் முடிந்ததும் பேச அனுமதிக்காத காரணத்தால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். இது வழக்கமான ஒன்று தான். வெளியே வந்ததும் பத்திரிகையாளர்களிடம் வெளிநடப்பு செய்ததற்கான காரணத்தை கூறுவோம். அப்படி கூறுகையில் உள் நோக்கத்தோடு திட்டமிட்டே தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றி விட்டார்கள் என கூறினேன்.

அதற்கு என்மேல் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கில் செப்டம்பர் மாதம் 3–ந்தேதி விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நான் கோர்ட்டில் ஆஜராகுவேன். வாய்தா வாங்க மாட்டேன். வழக்குகளை கண்டு அஞ்சி, அடங்கி ஒடுங்க மாட்டேன். எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார். வழக்குகளை கண்டு தி.மு.க.வினர் அஞ்சமாட்டார்கள்.வெள்ளை அறிக்கை

மறைந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., காமராஜர் ஆகியோர் முதல்–அமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் ஜனநாயகம் இருந்தது. கருணாநிதி 5 முறை முதல்–அமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் இது போன்ற நடக்கவில்லை. கடந்த 14 நாட்கள் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 25 துறைகள் மானிய கோரிக்கைகளில் 25 அமைச்சர்கள் பதில் அளித்து 264 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இதற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.664 கோடி ஆகும். முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் 18 அறிக்கைகளை படித்து 92 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இவ் அறிவிப்புகளுக்கு ரூ.20 ஆயிரத்து 831 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். கடந்த 2011 முதல் 2013–ம் ஆண்டு வரை அவர் ஒதுக்கிய மொத்த நிதி ரூ.21 ஆயிரத்து 893 கோடி ஆகும். இந்த 3 வருட காலத்தில் திருச்சி மாவட்டத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மொத்தம் நிதி ஒதுக்கியதில் என்னென்ன பணிகள் நடக்கிறது, நடந்து முடிந்துள்ளது என்பதை வருகிற 12–ந்தேதிக்குள் சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை அளிக்க தயாரா? சட்டமன்றத்தில் இடம் அளிக்காவிட்டாலும் மக்கள் மன்றத்தில் நாங்கள் பேசி நியாயம் கேட்போம். பாராளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் துவண்டுவிடமாட்டோம். மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.நிர்வாகிகள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ், வெளியீட்டு செயலாளர் செல்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மணிகண்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனியாண்டி, அந்தநல்லூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்பட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாநகர தி.மு.க செயலாளர் அன்பழகன் வரவேற்று பேசினார். முடிவில் நிர்வாகி மதிவாணன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment


Labels